ஈசி எக் க்ரேவி

தேதி: February 12, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (5 votes)

 

முட்டை - 5 (அ) 6
வெங்காயம் - 1 (பெரியது)
தக்காளி - 2
ப‌ச்சை மிள‌காய் -‍ 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் -‍ 1/2 தேக்கரண்டி
ம‌ஞ்சள் தூள் - 1/4 தேக்க‌ர‌ண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் ‍ 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை (பொடியாக நறுக்கியது) - ‍ஒரு கைப்பிடி
எண்ணெய் -‍ 1 (அ) 2 தேக்கரண்டி


 

முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி, கீறி வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர், பச்சை மிளகாயை சேர்த்து சிறிது வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பின்னர் தக்காளி சேர்த்து, கூடவே உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தக்காளி குழைந்து வரும்வரை வதக்கவும்.

பிறகு தூள் வகைகளை எல்லாம் போட்டு வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

எல்லாம் சேர்ந்து பச்சை வாசனைப்போக கொதித்ததும், கீறி வைத்திருக்கும் முட்டையை போட்டு, சில நிமிடங்கள் கொதித்து வந்ததும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத்தூவி அடுப்பை அணைத்துவிடவும்.

எளிமையான எக் க்ரேவி தயார். இது சிம்பிள் புலாவ் ரைஸ், சப்பாத்தியுடன் பரிமாறி சாப்பிட சுவையாக இருக்கும்


மேலும் சில குறிப்புகள்


Comments

very nice!!!!

superb ...