சௌசௌ தோல் துவையல்

தேதி: February 12, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

அலசி ஆய்ந்த சௌசௌ தோல் - ஒரு கைப்பிடி
உளுந்து - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 5 பல்
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க


 

வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, உளுந்து, காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, சௌசௌ தோல் சேர்த்து வதக்கவும்.
தேங்காய் துருவல் சேர்த்து ஆறவிடவும்.
ஆறியதும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
சுவையான சௌசௌ தோல் துவையல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சௌ சௌ தோல் மட்டும் சேர்த்தால் போதுமா ?புதுசா இருக்கு செய்துட்டு பின்னூட்டம் அனுப்புரேன்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

சவ் சவ் துவயல் சூப்பர் நல்ல குறிப்பு கவிதா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கவி சௌ சௌ தோலில் துவையலா ஆகா புதுசா இருக்குப்பா வாழ்த்துக்கள் :)
இன்னிக்கு கூட சௌ சௌ தோலை தூக்கி போட்டேனே!!

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஈஸியாவும் வித்தியாசமாகவும் இருக்கு..

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சௌ சௌ இதுவரை வாங்கியதில்லை.இதுக்காகவே ஒரு முறை வாங்கி செய்யறேன்.வாழ்த்துக்கள் கவி.

Kalai

ஹய்ய்.. சௌசௌ தோல் துவையல்!... அம்மா செய்வாங்க, பூண்டு இல்லாம. நான் செய்து ரொம்ப நாளாச்சி. அடுத்தமுறை சௌசௌ வாங்கினதும், உங்க மெத்தட்லயே செய்திடறேன். வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

அனைவரது வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

ப்ரியா,

தோல் மட்டுமே போதும்,சதை பகுதி வேணாம்.

என்றும் அன்புடன்,
கவிதா

ட்ரை பண்ணியாச்சு கவிதா. சுவை நன்றாக இருந்தது. வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது. முகநூல் பக்கத்தில் படம் பகிர்கிறேன். குறிப்புக்கு நன்றி.

‍- இமா க்றிஸ்