enntha mathiri uravu vaithu kulanthai pettru kolvathu

ennaku thirumanam ahi 1 varudangal ahindrana anal innum kulanthai illai varutham kidaiyathu irunthalum pettukollven anal viraivaka pettru kolla vendum sop please help me sister eppadi irunthal sikkiram kidaikum endru ungal phathilai ethir parthu BANUDHAMU
<!--break-->

hai sabi madam. Nanum babyku wait panuran. neega sonnathu rompa helpful la irrukum. Pls ennakaga vendikoga.

hi sisters, enaku thirumanam agi 2 matham ahivitathu enum karutharikavilai. mathavilaku sularchiku 12 to 18 natkaluku pin urau kondal karu pathika paduma.pls help me.

அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நீங்கள் நார்மலா எப்படி இருப்பீங்களோ அப்படியே இருங்க.2 மாதம் தானே ஆகிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

//thirumanam agi 2 matham ahivitathu.// இல்லை, இரண்டு மாதங்கள்தான் ஆகி இருக்கிறது. //enum karutharikavilai.// நீங்க‌ கலியாணம் செய்தது குழந்தை பெற்றுக் கொள்வதற்காக‌ மட்டுமா! வாழ்வதற்காக‌ இல்லையா! எப்படியும் முதல் மாதம் கணக்கில் வராது. இரண்டாவது மாதம்... அந்த‌ ஒரு மாதம்தான் சந்தர்ப்பம் கடந்து போயிருக்கிறது. அதற்குள் இங்கு வந்து கேட்கிற‌ அளவிற்கு யோசித்திருக்கிறீர்களா? :‍)

உங்கள் கணவர் இப்போ கருத்தரிப்பது பற்றி என்ன‌ எண்ணம் வைத்திருக்கிறார் கோகிலவாணி? பேசிப் பார்த்தீர்களா? கன்சீவ் ஆனா... முதல் மூன்று மாதம் பத்திரம் என்பார்கள்; பிறகு உங்கள் இயலாமை; மீண்டும் கடைசி 3 மாதங்கள் எதுவும் வேண்டாம் என்பார்கள். எப்போ குழந்தை என்பது நீங்கள் இருவரும் சேர்ந்து யோசிக்க‌ வேண்டிய‌ விடயம்.

உங்களைப் போல‌ புதுப்பெண்கள் வந்து கேள்வி வைக்கும் போது எல்லாம் யோசிப்பேன்... பாவம் புது மாப்பிள்ளைகள் என்று. :) அவர்களும் எதிர்பார்ப்புகளோடு வருபவர்கள்தானே! குழந்தை கொடுக்கும் மெஷின் போல் பயன்படுத்திவிட்டு 3 மாதம் கட்டாய‌ லீவு கொடுத்து... பாவம் இல்லையா! இப்பவே இத்தனையாம் நாள், அதற்குப் பின் இல்லை என்றெல்லாம் யோசிக்கிற‌ மாதிரி இருக்கிறது. :)

கொஞ்ச‌ காலம் குழந்தையைப் பற்றி நினைக்காமல் சந்தோஷமா இருங்க‌. ட்ரிப்ஸ் போங்க‌; ஷாப்பிங் போங்க‌; ஒருத்தருக்கொருத்தர் அன்பைப் பரிமாறிக் கொள்ளுங்கள். ஒருவர் மற்றவரை நன்கு புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகள் கிடைத்த‌ பின்னால் நீங்க‌ பிசியாகிருவீங்க‌. இதற்கெல்லாம் பொழுது கிடைக்காது.
மனது சந்தோஷமாக‌ இருந்தால் தன்னால் குழந்தை அமையும்.

உங்கள் பிரச்சினை புரிகிறது. யாராவது கேட்டிருப்பார்கள். நீங்க‌ சொல்ற‌ பதில்ல‌ அவங்க‌ திரும்ப‌ கேள்வி கேட்காம‌ இருக்கணும். :)

‍- இமா க்றிஸ்

..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

en sister ku mrg agi 2 year achi enum kolantha ila. antha payathula keten. odane kalaikathenga. avanga avanga manasa puringi pesunga pls. 2 times period ahiduche .athan payathula keten

//odane kalaikathenga//இப்பொழுது உங்களை யாரும் கலாய்க்கலையே.நீங்கள் கேள்வி கேட்டீங்க நாங்க பதில் சொன்னோம்.நானும் ஒன்றும் தப்பாக சொல்லலை. இமா அம்மாவும் தப்பா சொல்லலை.
//avanga avanga manasa puringi pesunga pls//அவங்க அவங்க மனச புரிஞ்சதாலதான் பதில் சொல்லுகிறோம்.நீங்க மன்ற விதிகளை முதலில் படிங்க. உங்களுக்கு மற்ற தோழிகள் வந்து பதில் சொல்வார்கள். நன்றி

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

கோகிலவாணிக்கு
பேர் ஒன்றைத் தவிர‌ உங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் ஆலோசனை
கூறியது தவறு தான். ஒரு நல்ல‌ மகப்பேறு மருத்துவரிடம் சென்று ஆலோசனை
கேட்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். அவர்களிடம் உங்கள் உடல்
ரீதியாகவும் மன‌ ரீதியாகவும் குடும்ப‌ ரீதியாகவும் நீங்களும் உங்கள் கணவருமாக‌ சேர்ந்து போய் பார்த்து கலந்து மனம் விட்டுப் பேசி ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.
உங்கள் முதல் பதிவில் உங்கள் கேள்வி
"ஹி சிஸ்டர்ஸ் எனக்குத் திருமணம் அகி 2 மாதமகி விட்டது. இன்னும் கருத்தரிக்கவில்லை. மாதவிலக்கு சுழற்சிக்கு 12 முதல் 18 நாள்களுக்கு பின்
உறவு கொண்டால் கரு பதிக்கப் படுமா? ப்ளீஸ் ஹெல்ப் மீ"
உங்கள் இரண்டாம் பதிவில் உங்கள் கேள்வி
"என் சிஸ்டருக்கு மாரேஜ் ஆகி 2 வருடம் ஆச்சி. இன்னும் குழந்தை இல்ல‌. அந்த‌ பயத்தில‌ கேட்டேன். உடனே கலாய்க்காதீங்க‌. அவங்க‌ அவங்க‌ மனச‌
புரிஞ்சு பேசுங்க‌ 2 டைம்ஸ் பீரியட் ஆகிருச்சு அதான் பயத்திலே கேட்டேன்."
மேற்கூறிய‌ உங்கள் பதிவை தெளிவு படுத்தவும்
உங்க‌ அக்காவிற்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையா?
அல்லது உங்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையா? இதில் தெளிவில்லை. திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள்
வரை குழந்தை இல்லாமல் இருப்பது ஒன்றும் பெரிய‌ குற்றமில்லை. உங்கள் வயது தெரியாது.20 க்குள் இருந்தால் ஓராண்டு வரை தள்ளிப் போவது (வேலை, குடும்ப‌ அமைப்பு, புதிய‌ வாழ்க்கை முறைக்கு மனமும் உடலும்
தயாராக‌ வேண்டும்) ஒன்றும் தவறு அல்ல‌. இனிமேல் பதிவிடும் போது
தமிழில் பதிவிட்டால் அதுவும் தெளிவாகப் பதிவிட்டால் உங்களுக்கு பதிலும்
நாங்கள் அறிந்து கொண்ட‌ அளவிற்கு தெளிவாகப் பதில் தர‌ முடியும். இதை
எப்போதும் நினைவில் கொண்டால் மிகவும் நல்லது.
பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

//odane kalaikathenga.// பதில் இல்லாவிட்டால், 'ஏன் எனக்குப் பதில் சொல்ல‌ மாட்றீங்க‌,' என்கிற‌ கமண்ட் நிறையத் தடவை அறுசுவையில் பதிவாகி இருக்கிறது. நேரமில்லாமலிருந்தும், ஒரு கரிசனத்தில் உட்கார்ந்து பதில் போட்டால் கலாய்க்கிறேனா! :)

'கேள்வியைத் தமிழில் போடுங்கள்; முடியாவிட்டால் தெளிவாகவாவது போடுங்கள்,'

முக்கியம் ‍_ பதிவு செய்ய‌ முன்னால் திரும்பப் படிச்சுப் பார்க்கிறது. கர்ர்...

'matham' என்கிறதை 'வருஷம்' என்று படிக்கிறதுதான் தமிங்கிலம் என்றால் எனக்கு அது தெரியாது. மன்னிச்சுக்கங்க‌. ;( இப்போதான் நீங்க‌ ஒழுங்கா, '2 வருஷம்' என்று சொல்றீங்க‌. முன்னால் பதிவு செய்த‌ உங்கள் கேள்வியைத் திரும்பப் படிச்சுப் பாருங்க‌.
//hi sisters, enaku thirumanam agi 2 matham ahivitathu enum karutharikavilai. mathavilaku sularchiku 12 to 18 natkaluku pin urau kondal karu pathika paduma.pls help me.//
~~~~ ~~~~
பூங்கோதை சொன்னது போல், இருவருமாக ஒரு நல்ல மகப்பேறு மருத்துவரைப் போய்ப் பாருங்க. எப்பவும் மனதைச் சந்தோஷமாக வைத்திருங்க கோகிலவாணி. //12 to 18 natkal// இந்தக் கணக்கு எல்லாம் இப்போது வேண்டாம். சிகிச்சை, மற்ற எல்லாவற்றையும் விட மனச்சந்தோஷம் முக்கியம். கவலைப் படாதீங்க. சீக்கிரம் எல்லாம் கைகூடி வரும். இப்போதே என் வாழ்த்துக்கள்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

சாரிங்க. முதல்ல, 'ஏன் சிஸ்டர்...' என்று ஆரம்பித்து என்னவோ படித்து முடித்தேன். இப்போ படிக்க, 'என் சிஸ்டர்' என்று எழுதி இருப்பது புரிகிறது. தப்பாகப் படித்து தப்புத் தப்பாகப் பதில் சொல்லியிருக்கிறேன் நான். ;(( உங்களுக்கு வீண் மன வருத்தம் கொடுத்துவிட்டேன். ;( தெரியாமல் செய்த பிழை அது. வருந்துகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஆனால்... இப்போ சொன்ன‌ சிஸ்டர் கதையை முன்பே வைத்த‌ கேள்வியில் சொல்லியிருந்தால் அதற்கேற்ப‌ என் பதிலும் இருந்திருக்கும். இருவருக்குமே மனவருத்தம் இல்லாமலிருந்திருக்கும்.

இங்கு தமிழில் தட்டச்சு செய்ய முடியும் சகோதரி. அடுத்த கேள்வியை தமிழில் தட்ட முடியுமா என்று பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்