கடப்பா

தேதி: February 13, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

பயத்தம் பருப்பு - கால் கப்
கருப்பு கொண்டைக்கடலை - கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
உப்பு - தேவைக்கு
மல்லித் தழை
அரைக்க:
தேங்காய் - கால் கப்
பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 6 பல்
கசகசா - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
சோம்பு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - தேவைக்கு
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
சோம்பு - கால் தேக்கரண்டி


 

பயத்தம் பருப்பை அலசி துளி எண்ணெய், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
அரைக்க கொடுத்த பொருட்களையெல்லாம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொண்டைக்கடலையை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, கொண்டைக்கடலை, வேக வைத்த பயத்தம் பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான கடப்பா தயார். இட்லி, தோசை, சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஸ்வரு
கடப்பா வித்தியாசமான பெயர்.. இப்போ தான் கேள்விபடறேன்..
கடப்பாவை ஒருநாள் செய்துடுவோம்.வாழ்த்துகள் ..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இதுவரை கேள்விபடாத குறிப்பு. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் ஸ்வர் :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஸ்வர்னா அக்கா கடப்பா சூப்பர் குறிப்பு அக்கா எனக்கு ஒரு டவுட் இந்த டிஷ் ஆந்ர டிஷா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கடப்பா சூப்பருப்பா.... ;) எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க? கடைசி ஃபோட்டோ... ம்ம்... அப்படியே எனக்கு அனுப்பிடுங்க பவுல்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புதுசா,வித்தியாசமாஇருக்கு,வாழ்த்துக்கள்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிகவும் நல்ல வித்தியாசமான குறிப்பு சுவா. வாழ்த்துக்கள்...:) ஒரு டவுட்... இதுக்கு வெள்ளை கடலை யூஸ் பண்ணினா நல்லா வருமா? ..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுவர்ணா,

'கடப்பா'‍ பேர் கேள்விப்பட்டிருக்கேன். செய்முறை இப்பதான் தெரிஞ்சுகிட்டேன். கட்டாயம் ஒருநாள் செய்துப்பார்த்திடனும். போட்டோஸ் எல்லாம் பளிச்சுனு வந்திருக்கு. வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

கடப்பா கலக்கலா இருக்கு. ஆனால் ஒரு சந்தேகம் பயத்தம் பருப்பை எப்போ சேர்க்கிறது???

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்த கடப்பா ரெசிபிய எங்க மாமி சொல்லியிருக்காங்க?செய்தும் பார்த்தேன்,பட் மறந்தே போயிடுச்சி.ஞாபக படுத்தியதுக்கு நன்றி பா.நாளைக்கு எங்க வீட்டில் கடப்பா வித் இட்லி.ஆஹா.யம்மீ.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிப்பா :)
கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க ஒன்னு சொல்ல விட்டுருக்கேன் பா அங்கே
ஐந்தாவது படத்தில் தேங்காய் விழுது கொ,கடலை சேர்க்கும்போதே பயத்தம் பருப்பு வேக வைத்ததும் சேர்க்கனும் இதை சொல்ல விட்டுட்டேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஜெயந்தி எங்க ஊர்ல இந்த டிஷ் ரொம்ப ஃபேமஸ் பா :)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கனி இது எங்க ஊரு ஸ்பெசலாக்கும் :) நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி உங்களை விடவா :) அனுப்பிட்டேன் வனி பவுலோட கடப்பாவை :) மிக்க நன்றி வனி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முசி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுமி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா :) கருப்பு கடலைதான் நல்லா இருக்கும் பா வெள்ளை வாசனையா இருக்காது சுமி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஸ்ரீ நல்லவேலை நீங்க கேள்விபட்டுருக்கீங்களே :) வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இந்திரா யாருமே கேக்கலயேன்னு நினைச்சேன் நீங்க கேட்டுட்டீங்க :) அதை சொல்லாம விட்டுட்டேன் பா சாரி :) மேலே ரம்யாவுக்கான பதிலில் இருக்கு பாருங்க :) மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வித்யா ஏற்கனவே செய்துருக்கீங்களா சந்தோசம் :) இன்னொறு முறை செய்துங்க மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பட் அதுலெ கடலை சேர்க்க மாட்டாங்க பா,நீங்க சொன்ன விதம் சுப்ப்ர் .இந்த மெட்தட் தான் செய்ய போரேன்.நல்ல குறிப்புக்கு நன்றி.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

எங்க வீட்டுலேயும் கடப்பா செய்வாங்க. உருளைக்கிழங்கு, பச்சைபட்டாணி, கேரட் இந்த காய்கறி சேர்த்து செய்வாங்க. உங்க கடப்பா குறிப்பு வித்தியாசமா நல்லா இருக்கு. கும்பகோணம் ஸ்பெஷலா தூள் ஸ்வர்.

வித்யா செய்து பார்த்து சொல்லுங்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வினோ மிக்க நன்றிப்பா :) உருளை பட்டாணி சேர்த்தும் செய்யலாம் பா நல்லா இருக்கும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா, கடப்பாவை வேற மாதிரி கேள்விபட்டிருக்கேன். நீங்க கொண்டை கடலை சேர்த்து செய்திருப்பது கேள்விபடாதது பா.. என்கிட்ட ஒரு மூட்டை ரெசிப்பி க்யூல நிக்குது அதுல இதையும் சேர்த்துட்டேன். ஊருக்கு போய் செய்துட்டு போன் போட்டே உங்களுக்கு சொல்லிடுறேன். வாழ்த்துக்கள் பா:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் நேத்து கடப்பா செஞ்சேன் பா,அனைவருக்கும் பிடித்து போய் பாராட்டினார்கள்,எல்லா புகழும் உங்களுக்கே.தாங்க்ஸ்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

கல்ப்ஸ் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா :) இனிமே ஊருக்கு போய்தான் செய்யனும்னு சொல்ல முடியாதுல்ல :) ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வித்யா செய்து பார்த்து உடனே சொன்னதுக்கு நான்ந்தான் நன்றி சொல்லனும் :) மிக்க மகிழ்ச்சி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா,
வெள்ளை கொண்டக்கடலை சேர்த்து செய்து பார்த்தாகிவிட்டது.
ரொம்ப சுவையாக இருந்தது
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா