சாம்பார் சாதம்

தேதி: February 14, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (9 votes)

 

கோதுமைரவை - அரை கப்
துவரம் பருப்பு - கால் கப்
சின்ன வெங்காயம் - 5 (அ) 6
தக்காளி (சிறியது) - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
விருப்பமான காய்கறி கலவை - ஒரு கப்
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
புளி - சுண்டைக்காய் அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லித் தழை - சிறிது
தாளிக்க:
எண்ணெய் (அ) நெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று (அ) 2
கறிவேப்பிலை- சிறிது
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி


 

துவரம் பருப்பை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். காய்கறிகளை தயாராக வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
தக்காளி மற்றும் காய்கறி கலவை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
ஊற வைத்த பருப்பு, கழுவிய கோதுமைரவை சேர்த்து கிளறி இரண்டரை கப் தண்ணீர், புளிக்கரைசல், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து மூடி 5 (அ) 6 விசில் வரும் வரை வேகவிடவும்.
ப்ரஷர் அடங்கியதும் தாளிப்பு பொருட்களை தாளித்து சேர்த்து கிளறவும்.
சுவையான கோதுமைரவை சாம்பார் சாதம் தயார்.

குக்கரை திறந்தவுடன் சாதம் சற்று நீர்க்க இருப்பது போல இருக்கும். ஆறும் போது சேர்ந்து இறுகி விடும். சூடாக இருக்கும் போதே ரொம்பவும் கெட்டியாக இருந்தால் ஆறும் போது மிகவும் இறுகி விடும். புளித்துவையல், அப்பளத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரோ சூப்பர் :) கோதுமை ரவை போட்டு ஆர்ரோக்கியமான சாப்பாடு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரு கவி. கோதுமைல சாம்பார் சாதம் புதுமையா இருக்கு, வாழ்த்துக்கள்....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கவி அக்கா சாம்பார் சாதம் செம கலர்புல்லா சூப்பரா இருக்கு அக்கா பாக்கவே ரொம்ப நல்ல குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கவி கோதுமை ரவையில் சாம்பார் சாதமா சூப்பர் கலக்குங்க வாழ்த்துக்கள்ப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி, கோதுமை ரவைல சாம்பார் சாதமா? அசத்தறீங்க பா. கண்டிப்பா செய்து பார்த்துடனும்.. கோதுமை ரவை.. சாதாரண கோதுமையா? சம்பா கோதுமையா கவி.. இதெல்லாம் எப்ப செய்ய போறேன்னு கேட்டீங்கன்னா கட்ட கோவம் வரும்.. ஊருக்கு போய் தான் எல்லாம்.. கரெக்டா லஞ்ச் டயத்துக்கு அறுசுவையை ஓபன் பண்ணது தப்பா போச்சு கவி.. நிஜம்மாவே சாம்பார் சாத ப்ளேட்டை பார்த்ததும் பசி டபுளாய்டுச்சு.. வாழ்த்துக்கள் கவி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி வனி! அரிசியில் செய்யும் எல்லாமே கோதுமை ரவையிலும் செய்யலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சுமி! செய்து பாருங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கனி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சுவா! சீக்கிரம் செய்து பார்த்து சொல்லுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கல்பூ!
சம்பா கோதுமை ரவைதான் பயன் படுத்தியிருக்கேன். ஊருக்கு போய் சாதத்துக்குன்னு சொல்லி சம்பா கோதுமை ரவை கேட்டு வாங்குங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாவ்... கவி, கலக்கிட்டிங்க! ;-) கோதுமை ரவையில சாம்பார் சாதம் சிம்ப்ளி சூப்ப்பர்ர்ர்! நல்ல ஐடியா! கட்டாயம் நாளைக்கே ட்ரை பண்ணிடறேன். வாழ்த்துக்கள் கவி!

அன்புடன்
சுஸ்ரீ

கோதுமை ரவைல நிறைய ரெசிப்பி கொடுத்து இருக்கீங்க. சாம்பார் சாதம் ஹெல்தியான குறிப்பு. படத்துடன் குறிப்பை பார்க்கும் போது செய்யனும் தோணுது. சீக்கிரம் 9 குறிப்பு கொடுங்க. இன்னொரு கோல்டு ஸ்டார் வாங்க வேண்டாமா?

கவி அருமையான ஆரோக்கிய குறிப்பு கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள்:)
(கவி இன்னொரு விஷயம் குக்கர் கலர் அழகா இருக்குப்பா இளரோஜா வண்ணத்தில:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கோதுமை ரவை சாம்பார் சாதமா?சூப்பர் பா.நல்ல ரெசிபி.வாழ்த்துக்கள்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

ஹாய் சுஶ்ரீ எப்படி இருக்கீங்க? இப்பல்லாம் பேசவே முடியறதில்லை. நாங்க தூங்கும் போது தலையை காமிச்சுட்டு போயிடறீங்க :)

கண்டிப்பா செய்து பாருங்க ... நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். நன்றி சுஶ்ரீ!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி வினோ. செய்து பாருங்க.

//சீக்கிரம் 9 குறிப்பு கொடுங்க. இன்னொரு கோல்டு ஸ்டார் வாங்க வேண்டாமா?///

கொடுக்க ட்ரை பண்றேன் வினோ. நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி அருள்! அது சாதாரண ஹாக்கின்ஸ் குக்கர்தான் அருள். லைட்டில் அப்படி தெரியுது :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி வித்யாஹரிணி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!