காண்ட்வி

தேதி: February 15, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

கலவைக்கு:
கடலை மாவு - அரை கப்
தயிர் - அரை கப்
தண்ணீர் - அரை கப்
பெருங்காயம் - ஒரு கிள்ளு
உப்பு - தேவைக்கு
ஃபில்லிங் செய்ய:
தேங்காய் துருவல் - தேவைக்கு
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவைக்கு
வறுத்த எள்ளு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஃபாயில் பேப்பரை விரித்து வைக்கவும். இல்லையேல் சில்வர் தட்டை திருப்பி எண்ணெய் தடவி வைக்கவும். உருட்ட பயன்படுத்தப்படும் தளம் சீராக இருக்க வேண்டும்.
கலவைக்கு கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக சேர்த்து, தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்.
கலவையை ஒரு கடாயில் ஊற்றி, குறைந்த தீயில் கைவிடாமல், கட்டிபடாமல் கலக்கியபடியே வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும், மென்மையாக, ரப்பர் போல மாறி பாத்திரத்தில் ஒட்டாத பதம் கிடைக்கும்.
உடனே அதை எண்ணெய் தடவிய தட்டில் (அ) ஃபாயில் பேப்பரில் கொட்டவும். (தாமதிக்காமல் செய்ய வேண்டும். இல்லையெனில் கலவை இறுகிவிடும்).
கொட்டிய அடுத்த வினாடியே, தோசை கரண்டியால் (கோட்டிங் கொடுப்பது போல) தேய்க்கவும். மிகவும் லேசான லேயராக மாறும்படி பரவாலாக எல்லா கலவையையும் தேய்க்க வேண்டும். சதுர வடிவமான தோசை கரண்டியெனில் நல்லது. இல்லையேல் பீசா கட்டரை பயன்படுத்தலாம்.
பின் ஃபில்லிங் செய்ய கொடுத்தவற்றை பரவலாக தூவி விடவும். 5 முதல் 8 நிமிடம் கழித்து கத்தியால் நீளவாக்கில் தேவையான அளவிற்கு வெட்டவும். பின் இரண்டு கைகளின் ஆள்காட்டி விரலால் பக்குவமாக சுருட்டி விடவும்.
சுருட்டி எடுத்த எல்லா காண்ட்வியையும் தட்டில் வைக்கவும். பின், தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அடுக்கி வைக்கப்பட்ட காண்ட்வி மீது கொட்டவும்.
சுவையான, சுலபமான காண்ட்வி ( Khandvi ) தயார். இது மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. பத்து நிமிடத்தில் செய்துவிடலாம்.

இது குஜராத்தியன் ரெசிபி. இதை சுரளி வடி என்றும் சொல்வார்கள். பார்க்க தான் கடினமாக இருப்பது போல தெரியும். செய்வது மிகவும் சுலபம். ஆனால், தாமதிக்காமல் செய்ய வேண்டிய ரெசிபி. திரட்டவோ, கடாயில் இருந்து எடுத்து கொட்டவோ தாமதித்தால், கட்டியாகி எல்லாம் கெட்டுவிடும். பதம் தெரியவில்லை எனில், கடாயில் கிளறிக் கொண்டே சிறிது எடுத்து தட்டில் தடவி பார்த்து, பின் உரிந்து வருகிறதா என சோதித்துக் கொள்ளவும். ஃபில்லிங் வேண்டியபடி செய்து கொள்ளலாம். சுகர் சிரப்பை மேலே ஊற்றி, உள்ளே நட்ஸ், சுகர், ஏலக்காய் பொடித்தும் இனிப்பாக செய்யலாம். வேர்க்கடலை, பச்சை மிளகாய் என சேர்த்து காரத்திலும் விரும்பிய ஃபில்லிங் செய்யலாம்.. ஆனால் ஃபில்லிங் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். இல்லையேல் மிகவும் சன்னமாக திரட்டிய லேயர் சுருட்டும் போது பிய்ந்துவிடும். கடுகையும், சீரகத்தையும் தாளிக்கும் போது கருகி விடாமல் பார்த்துக் கொள்ளவும். நான் செய்ததை போன்ற எளிமையாக செய்ய கூடிய காண்ட்விக்கு சுவை கொடுப்பது, பக்குவமாக பொரிந்த கடுகும், சீரகமும் தான். அதிகமாக போடும் போது சுவை கூடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுப்பர்ப் ரம்ஸ்.

‍- இமா க்றிஸ்

ரம்யா அக்கா காண்ட்வி ரொம்ப சூப்பரான குறிப்பு அக்கா படங்கள் அனைத்தும் அவ்ளோ அழகு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இதுவரை கேள்விபடாத குறிப்பு. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நல்லா செய்து காட்டீருக்கீங்க ரம்யா.விளக்கமும் அருமை.

சுவையா இருக்கும் காண்ட்வி. எள்ளை உள்ளே சேர்த்திருப்பது நல்லாருக்கு. நான் தாளிப்பில் போடுவது வழக்கம். வாழ்த்துக்கள் ரம்யா!!

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ரொம்ப நல்லா இருக்குங்க... அந்த கடைசி ஃபோட்டோ அழகு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்ஸ்,

காண்ட்வி ரொம்ப அழகா செய்து காட்டியிருக்கீங்க! :) படங்கள் அத்தனையும் பளிச், பளிச்! அதிலும் அந்த கடைசிக்கு முந்தின படம், ல‌வ்லி!! வாழ்த்துக்க‌ள் ர‌ம்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

ரம்ஸ், காண்ட்வி வழக்கம் போல பளிச் பளிச் ரெசிப்பி.. எளிமையான முறையில் ஈசியா செய்ய கூடிய ரெசிப்பி. அலுமினியம் ஃபாயிலுக்கு alternative உண்டா ரம்ஸ்? வனி சொன்ன மாதிரி கடைசி படம் சூப்பர்.. ஆனாலும் ப்ளேட் தான் பல இடங்கள்ல குழப்புது :D தொடரட்டும் உங்கள் சூப்பர் குறிப்புகளின் அணிவரிசை :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி

இம்ஸ்
மிக்க நன்றி

கனி
ரொம்ப நன்றிங்க

முசி
நன்றி.. ட்ரை பண்ணி பாருங்க..

ஜெயந்தி
பதிவிற்கு மிக்க நன்றி...

வனி
மிக்க நன்றி..

சுஜா
ரொம்ப தேங்க் யு ...

கல்ப்ஸ்..
ரொம்ப நன்றி.. அலுமினியம் ஃபாயிளுக்கு பதிலா, ப்ளேட் யூஸ் பண்ணலாம்.. சமதளத்தில் திரட்ட வசதியா இருக்கும் எந்த பொருளும் பயன்படுத்தலாம் கல்ப்ஸ்.. ஆனா அதன் முன் எண்ணெய் தடவிக்கோங்க.. அப்ப தான் உரித்து சுருட்ட முடியும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ் குறிப்பு மிக அருமை:)
கண்டிப்பா முயற்சி பண்ணி பார்க்கிறேன் வாழ்த்துகள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரம்ஸ் காண்ட்வி படமும் குறிப்பும் போட்டி போடுதுப்பா சாப்பிடவே மனசு வராது போல பார்த்துட்டே இருக்கலாம் அப்படி அழகா இருக்கு சூப்பர் :) வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.