மலரலங்காரம் - சில்வர் பெல்ஸ் (Silver Bells) - அலங்காரப் பொருட்கள் - அறுசுவை கைவினை


மலரலங்காரம் - சில்வர் பெல்ஸ் (Silver Bells)

Sat, 16/02/2013 - 10:54
Difficulty level : Easy
4.25
8 votes
Your rating: None

 

  • தகர டப்பாக்களின் உள்ளே சீல் செய்து இருக்கும் மெல்லிய தகடுகள்
  • கத்தரிக்கோல்
  • பச்சை நிற நூல்
  • தையல் ஊசி
  • பென்சில்
  • ஈர்க்கு
  • ஃப்லோரல் டேப்

 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.

தகரங்களை 2 செ.மீ அல்லது சிறிய சதுரங்களாக வெட்டவும். ஓரங்களில் கிடைக்கும் துண்டுகள் நேராக இல்லையென்றால் பரவாயில்லை. அவற்றையும் பயன்படுத்தலாம். எழுத்துகள் இல்லாமல் இருப்பது நல்லது.

துண்டுகளின் ஒரு மூலையில் பென்சில் முனையை வைத்து கூம்பு போல் சுருட்டி எடுக்கவும்.

கூராக இருக்கும் இடங்களை வெட்டி வட்டமாக்கவும்.

ஊசியில் நூலைக் கோர்த்து பெரிதாக ஒரு முடிச்சுப் போட்டுக்கொண்டு கூம்பின் உள்ளிருந்து வெளியே இழுக்கவும். நூலை 3 செ.மீ அளவு விட்டு வெட்டிக்கொள்ளவும். இப்படியே எல்லாக் கூம்புகளிலும் நூல் கோர்த்து வைக்கவும்.

ஈர்க்குகளைப் பாதியாக முறித்து இடையிடையே கோர்த்து வைத்த கூம்புகளைச் சேர்த்து ப்லோரல் டேப் சுற்றவும். ஈர்க்கின் மெல்லிய பக்கம் சிறிய கூம்புகளையும் கீழே பெரிதாக இருப்பவற்றையும் சேர்க்கவும்.

ஒரு சிறிய ஈர்க்குத் துண்டில் கம் டேப்பை இழுத்து இப்படி வைக்கவும்.

மறுபக்கமும் வருமாறு ஒட்டி அடியில் காம்புபோல் திருகி விடவும். நகத்தினால் ஈர்க்கின் இரண்டு பக்கமும் அழுத்தவும். பிறகு நரம்புகளையும் நகத்தினால் அழுத்தி வரையவும். மேற்பக்கம் இலைபோல கூராக வெட்டிவிடவும்.

இனி வாஸில் மண் நிரப்பி அனைத்தையும் அழகாகக் சொருகி வைக்கலாம். அல்லது தர்மாகோல் அல்லது ஒயாசிஸ் வெட்டி நிரப்பியும் சொருகிவிடலாம். ஈர்க்கை முறிக்காமல் முழு ஈர்க்கையும் உபயோகித்தும் செய்யலாம். அதற்குத் தகட்டை பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். கீழே வைக்க உயரமான பாத்திரம் தேவை.


சில்வர் பெல்ஸ்

செபாம்மா ரொம்ப நாள் கழித்து உங்க கைவினையை பார்ப்பது சந்தோஷம். சில்வர் பெல்ஸ் நல்ல ஐடியா அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

செபா ஆன்ட்டி

சூப்பர் சூப்பர்... :) எவ்வளவு நாள் கழித்து உங்களை பார்க்கிறேன்... அதுவே மகிழ்ச்சியா இருக்கு ஆன்ட்டி. நலமா இருக்கீங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப எளிமையா அழகா செய்து

ரொம்ப எளிமையா அழகா செய்து கட்டி இருக்கீங்க ....ரொம்ப அழகா வந்து இருக்கு .... வாழ்த்துக்கள்

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

சில்வர் பெல்ஸ் அலங்காரம்

சில்வர் பெல்ஸ் அலங்காரம் ரொம்ப அழகா அருமையா இருக்கு.பாராட்டுக்கள் செபாம்மா.

இதுவும் கடந்து போகும்.

செபா

செபா

நலமா.. அழகா இருக்குங்க.. ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சில்வர் பெல்ஸ்

ரொம்ப அழகா இருக்கு. நேர்த்தியா செய்திருக்கீங்க செபா ஆன்டி.வாழ்த்துக்கள் :)

Kalai

சில்வர் பெல்ஸ்

செபா ஆண்டி சில்வர் பெல்ஸ் ரொம்ப அழகா தத்ரூபமா இருக்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

silvar bells

hi seba
very noice ur silvar bell. i will try it.

சில்வர் பெல்ஸ் - நன்றி

கருத்துத் தெரிவித்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் என் அன்பு நன்றி.