மில்க் ப்ரெட்

தேதி: February 16, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பால் ‍- ஒரு கப்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தேன் -‍ ஒரு மேசைக்கரண்டி
ஆல் ப‌ர்ப்ப‌ஸ் / மைதா மாவு ‍- 3 க‌ப்
முட்டை - ஒன்று
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
ஈஸ்ட் - ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு - ஒரு தேக்க‌ர‌ண்டி


 

ப்ரெட் மேக்கர் முறையில் மில்க் ப்ரெட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். (எப்போதுமே, பேக்கிங் செய்வதற்கு முன்னதாகவே முட்டை, வெண்ணெய், பால் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்து பிறகு செய்வது நல்லது). மாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.
ப்ரெட் மேக்கர் பேனில், அதற்குண்டான பெடலைப் பொருத்தி, மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் அதே வரிசையில் ஒவ்வொன்றாக‌ போடவும்.
பிறகு அதை ப்ரெட் மேக்கர் மெஷினில் பொருத்திவிட்டு, சரியான செட்டிங்கை தேர்ந்தெடுக்கவும். இந்த அளவு பொருட்களுக்கு, 1.5 lbs அளவு, பேசிக் ப்ரெட் என்ற ஆப்ஷனை சூஸ் செய்யவும். ம‌ற்ற‌வ‌ற்றையெல்லாம் ப்ரெட் மெஷின் பார்த்துக்கொள்ளும்.
இந்த‌‌ ப்ரெட் செய்ய‌ மொத்த‌ம், சுமார் 3 ம‌ணி நேர‌ம் எடுக்கும். முத‌ல் 1.5 ம‌ணி நேர‌த்திற்குப்பிறகு பீப் சத்தம் வந்ததும், ப்ரெட் பேனில் உள்ளே போட்டிருக்கும் பெட‌லை எடுத்துவிட்டு மாவை கையால் ஓரளவு சமப்படுத்தி அழுத்திவிட‌ வேண்டும்.
மீண்டும் ஒரு 1.5 ம‌ணி நேர‌ம் க‌ழித்து, ப்ரெட் ரெடியான‌த‌ற்குண்டான‌ பீப் ச‌த்த‌ம் வ‌ரும்போது, ப்ரெட்டை வெளியில் எடுத்து கம்பி ட்ரேயில் வைத்து ஆறவிடவும்.
ப்ரெட் ந‌ன்றாக சூடு ஆறிய‌தும் விரும்பிய‌ வ‌டிவில் துண்டுகள் போட்டு சுவைக்க‌லாம். ப‌ட்ட‌ர், ஜாம் என‌ எதுவும் இல்லாம‌லே ருசியாக‌ இருக்கும் இந்த‌‌ மில்க் ப்ரெட்.

மேலே கொடுத்துள்ளது ப்ரெட் மேக்கரில் செய்யும் எளிய முறை. ப்ரெட் மேக்கர் இல்லாம‌ல், ரெகுல‌ர் அவ‌னில் ப்ரெட் செய்வது கொஞ்ச‌ம் நீள‌மான‌ செய்முறை.

அதற்கு, முதலில் சிறிது வெதுவெதுப்பான பாலில், ஈஸ்ட் கலந்து, பிறகு முட்டை, உருக்கிய வெண்ணெய், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கலந்துவிட்டு, பிறகு அதில் மாவை சிறிது சிறிதாக போட்டு கிளறி நன்கு அழுத்தி பிசையவேண்டும். அப்படி பிசைந்த மாவை ஒரு பவுலில் போட்டு, ப்ளாஸ்டிக் ஷீட் கொண்டு மூடி, சமையலறையில் கொஞ்சம் சூடான இடத்தில் பாத்திரத்தை வைக்கவேண்டும். 2 மணி நேரம் கழித்து, மாவு பொங்கி இரண்டு மடங்காக இருக்கும்போது, எடுத்து மீண்டும் (தேவைப்பட்டால்) சிறிது மாவு தெளித்து பிசைந்து, ப்ரெட் பேக் செய்யும் பேனில் போட்டு, மீண்டும் ஒரு 30 - 40 நிமிடங்கள் வைத்து விடவேண்டும். மாவு மீண்டும் பூத்து வந்ததும், ப்ரெட் பேனை, 375 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைத்து, சுமார் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ப்ரெட் பண்ணவெல்லாம் தனியா இருக்கா??? நான் பார்த்ததில்லை :) இனி விசாரிச்சு ஒன்னு வாங்கி வெச்சுடுறேன். சூப்பர். சுலபமாவும் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுப்பர் பா..படங்களை பார்த்தா அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

பிரட் அருமை வாழ்த்துக்கள் சுஸ்ரீ :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுஜா

ப்ரெட் அருமையா இருக்கு.. மாவை ப்ராசர் கொண்டு பிணைந்த மாதிரி தெரியலையே.. அதுவே பிசைந்துக் கொள்ளுமா? அந்த மெசின்லேயே மாவை போட்டு இருக்கிங்களே... நல்லா சாஃப்ட்டா இருக்கு பார்க்க.. சூப்பர்..வாழ்த்துக்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுஸ்ரீ ரொம்ப அருமையா இருக்குங்க ப்ரெட் :) இதுக்குன்னு தனியா இருக்குன்னு நீங்க சொல்லித்தான் தெரியும்
எனக்கும் ரம்ஸ் கேட்ட சந்தேகம் தான் பிசையாமலே வச்சிடலாமா!!
வாழ்த்துக்கள் சுஸ்ரீ :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

யம்மி பிரட்,குறிப்பு அருமை வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சுஜி, மில்க் ப்ரெட் பார்க்கும் போதே நல்லா சாஃப்ட்டா இருக்கு. ப்ரெட்டுக்கும் ரெடிமேட்ல மேக்கர் வந்துருச்சா.. நமக்கு (எனக்கு) தான் ஒன்னும் தெரியலயோ.. உலகம் அறியா பச்ச மண்னா இருக்கேனே :( அருள்,ரம்ஸ் கேட்ட அதே டவுட்டு தான் எனக்கும் சுஜி.. ப்ரெட் மேக்கர்ல எல்லா பொருளையும் கலந்துட்டா தானா மிக்ஸ் பண்ணிக்குமா? ப்ரெட் மேக்கர் எல்லா இடங்கள்லயும் கிடைக்குமா பா.. தெளிவான படங்கள் + விளக்கங்கள் அருமை பா.. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சூப்பர்,பிரெட் மேக்கர் என்ன brand? சின்ன sizele kedaikuma?

சுஸ்ரீ அக்கா சூப்பரா இருகு மில்க் ப்ரெட்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு முதல் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வனி,
முதல் பதிவுக்கு ரொம்ப நன்றி வனி! ஆமாம் வனி, ப்ரெட் செய்யவதற்கெனவே தனியா இருக்கு. ப்ரெட் மேக்கர் என்று தேடிப்பாருங்கள். ரொம்ப ஈசியா ப்ரெட் செய்துடலாம். இதில இன்னும் நிறைய ஐட்டம்ஸ் செய்யக்கூட ஆப்ஷன்ஸ் இருக்கு வனி. நன்றி!

--

வித்யா:
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

--

அருள்:
பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

--

ரம்ஸ்:
ஆமாம் ரம்ஸ், ப்ரெட் மேக்கரின் வசதியே அதான். தேவையான பொருட்களை எல்லாம் அளந்து போட்டுட்டா போதும், மத்ததெல்லாம் அது பாத்துக்கும்! :D அதிலேயே Knead, Rest & Bake என்று எல்லாமும் செய்யவதற்கான ஆப்ஷனும் இருக்கும். பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரம்ஸ்! :)

--

ஸ்வர்ணா:
பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! மேலே சொல்லி இருக்கேன் பாருங்க. ஆமாம், அதுவே பிசைந்து, மாவு இரட்டிப்பாகும்வரை வைத்து, ப்ரெட்டாக பேக்கும் செய்து கொடுத்துடும். அதனால ப்ரெட் செய்வது ரொம்ப‌வும் ஈசி! :)

--

முசி:
பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

--

கல்ப்ஸ்:
அதே அதே, ப்ரெட் செய்யறதுக்குனே தனியா இருக்கு கல்ப்ஸ்! :) ப்ரெட் மேக்கர்னு தேடிப்பாருங்க, நிறைய கிடைக்கும். இதில மாவைக்கொட்டி அதுவே பிசைந்து, வெயிட் செய்து, பேக் செய்யும் ஆப்ஷனும் இருக்கு. இல்லைன்னா, வெளியிலேயே நாம மாவுக்கலவையை கலந்து போட்டு, ஒன்லி பேக்கிங் மட்டும் செய்யறமாதிரியும் இருக்கு. (என்னோட பனானா ப்ரெட் குறிப்புல இருக்க மாதிரி). இந்த இரண்டு மட்டும் இல்லாம‌ இன்னும் வேற நிறைய ஐய்ட்டம்ஸ் செய்யறதுக்குண்டான ஆப்ஷன்ஸும் இருக்கு. நான் இனிமேதான் ஒவ்வொண்ணா ட்ரை பண்ணனும்! ;‍)
உங்களோட பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி!

--

தாரா:
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!
என்னோடது Cuisinart. செக் பண்ணிப்பாருங்க தாரா, நிறைய ப்ராண்ட்ஸ், டிஃபரண்ட் சைஸ்ல‌ இருக்கு. உங்களுக்கு வேண்டியமாதிரி கட்டாயம் கிடைக்கும்.

--

கனி:
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ