பட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன?

எனது அருமை அறுசுவைத் தங்கங்களே! சிங்கங்களே! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பட்டி ஆரம்பமாயாச்சு ...:-)

தோழி கவிசிவா அளித்த அருமையான விவாதிக்க தற்போது மிகவும் அவசியமான தலைப்பு...நமது நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும் விசயங்களைப் பற்றி பேச இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்பில் சிறிய மாற்றங்களோடு .....

**********************************************************************
பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்குள்ளாக காரணம் ..

1.பெண்களின் நடை உடை பாவனையே.,
2.பெண்களை போகப் பொருளாக பார்ப்பதாலே.,
3.பெண்களிடம் தட்டிக்கேட்கும் மனப்பான்மையின்மையே (தையிரியமின்மை)
************************************************************************

பொது இடம் என்பது பார்க், பீச், கோயில், குளம் என்பதோடு இல்லாமல் இன்றைக்கு பெண்களும் அதிகமாக பங்குகொள்ளும் பொது தளமாக இருக்கும் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தபட்டி பயங்கரமா பிச்சு உதற வசதியா நீதிமன்றக்களத்தை தேர்ந்தெடுத்தாச்சு.. தோழிகளே நீங்க கருப்பு கோட்டு போட்டு பிச்சு உதறப்போறீங்களோ இல்லை கிழிச்சு எறியப்போறீங்களோ எனக்கு தெரியாது ....நான் உங்ககிட்ட கேட்டுக்கறது ஒன்னே ஒன்னுதான்.. வேற என்ன ?? அறுசுவை விதிகளையும், பட்டியின் விதிகளையும் மீறாமல் உங்கள் வாதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

பட்டி விதிமுறைகள்:
யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்

வணக்கத்திற்கு மிக்க நன்றி ரம்யா., உங்களுக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும் :-)

அய்யகோ ., நான் என்ன செய்வேன்?? ஆரம்பத்திலேயே நடுவரை இம்புட்டு பயமுறுத்தலாமா அம்மணி?? :-( என்ன கொடுமை இது.. நான் இந்த ஆட்டத்துக்கு வரலை நடுவரை இப்படி படி படின்னு படிக்கவைச்சு கொடுமைபடுத்தறது பாவம் சொல்லிட்டேன் :-( கல்யாணம்னா பொண்ணுதாம்பா அதிக அலங்காரத்தோட இருக்கனும்.. பட்டினா நடுவர்தான் அதிக பாயிண்ட்ஸ் சொல்ல்னும்..இப்படி நடுவருக்கு பாயிண்ட்ஸே வைக்காம வாதாடற கொடுமை இங்கதான் நடக்கும்..:’(

//சில இடங்களில் பெண்களே பெண்களை பார்த்து ச்சி என முகம் சுளிக்க வைக்கும் அளவு, நடை உடை பாவனைகளை மேற்கொள்வது//...

//சிறிய பையனையும் விடறது இல்லை.. இதுக்கு என்ன காரணம்.. பெண்களை போக பொருளா பார்ப்பது உண்மை தான், ஆனா சிறு பசங்களையும் பாலியல் இச்சைக்கு உட்படுத்துவது என்பது எதற்கு... மனஷனோட புத்தி, மிருகத்துக்கும் மேல போயி நிக்குது, கேவலமான ஜந்துவா சதை பிண்டத்தை மட்டுமே பார்க்குற நிலைக்கு தள்ளபடுகிறது.. // ...இப்படியும் நடக்குதான்னு கேக்கறவங்க பேஜ் 3ங்கறா இந்தி படத்த பாருங்கபா ..ஒரு லேடி ரிப்போர்ட்டரோட ஸ்டோரி..சாதாரணமா போற கதை திடீர்னு இப்படி ஒரு சாக் நியூஸோட நகரும்போது அய்யோ இப்படியும் நடக்குமான்னு மனசு ஆடிப்போனாக்கூட இப்படிபட்ட படங்களாலதான் குற்றம் நடக்குதுன்னு சொல்லாம இதுமாதிரி படங்கள பாத்தாவது கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கலாம்னு தோணுது..

//போக பொருளா பார்க்கிறானா? அவன் சாக்கடை.. அப்படி தான் பார்ப்பான்.. அவனை கட்டி வெச்சு உதைக்க வேணாம்..?

நீ இப்படி ட்ரஸ் போட்ட அதான் சீண்டினேன் என்கிறானா? சபல புத்தி உள்ளவன் அப்படி தான் சொல்வான்.. தோலுரிச்சு உப்பு கண்டம் போட வேண்டாமா?

ஆசிட் ஊத்துவியா? அதே ஆசிட்டை அவனுக்கும் ஊத்தி மருத்தவம் பார்க்காம தனி அறையில அடைக்க வேண்டாம் ?

பலாத்தகாரம் செய்வானாம்.... யாரும் நினைத்து பார்க்க முடியாத தண்டனை கொடுக்க வேண்டாம்.. ?

குழந்தையின் வாழ்க்கையை கேடுப்பானா ? நிக்க வெச்சு சுட வேண்டாம்... ?// ..இப்படிபட்ட குற்றங்கள் செய்த ஆளுங்களுக்கு எப்படிபட்ட தண்டனை வழங்குறாங்க ..குற்றவாளி செய்தகுற்றத்தை என்னி மனம்வருந்தி திருந்தி வாழும்வகையில் தண்டனையாம்??..என்னய்யா நினைச்சுட்டு இருக்காங்க இவங்க? மனம்திருந்தி எப்படி? செஞ்ச குற்றம் என்ன கைய வெட்டினதா தானும் வலி தெரிஞ்சு அய்யோ கைய வெட்டினா இப்படி வலிக்குமான்னு தெரிஞ்சு மனம்திருந்த ?? தெருவுல கட்டி வைச்சு கல்லால அடிச்சாலும் இவனுக்கு எங்க தெரியப்போகுது மனசு பட்ட கஷ்டம்? குழந்தைக்கு என்னய்யா தெரியும்? கண்ண உருட்டி நாக்க கடிச்சு சும்மானச்சுக்கும் பயம் காட்டினாலே மிரண்டு போயி கதறுமே...என்ன மனுசனுங்க__? நீங்கள்லாம்..ச்சே.

//ஒரு முறை எதிர்பார்க்க முடியாத அடியை கொடுத்தால், அடுத்த முறை இதை போன்ற தவறு நடக்காது மெல்ல குறைய தொடங்கும்... தட்டிக் கேட்காமல் விட்டால், போக பொருளா , உடையானு நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.. காட்டாறு என பொங்கி அநீதிகளை தட்டி கேட்காத நிலையே இது போன்ற பிரச்சனைக்கு முற்றிலும் காரணம் என அடித்து சொல்லுவேன்.. சாரி.. கொஞ்சம் இல்லை ரொம்பவே உணர்ச்சிவசபட்டுட்டேன்..//..உணர்வுகளை வெளிப்படுத்தும்போது உணர்ச்சி வசப்படுவது இயல்புதானே ரம்யா..இதைதான் மத்த பெண்களும் செய்யனும்னு சொல்றோம்..இனி சேலைல முல்லுபட்டா அடுத்த சேலையிலும் படாம இருக்க அந்த முல்ல தீயில போடுங்கன்னு சொல்றது சரிதானே இல்லையா..கண்டிப்பா திருந்தி வாழற மாதிரி தண்டனை இல்லாம மத்தவ பயந்து வாழற தண்டனையா இருக்க தட்டிக்கேட்போம்..வாழ்த்துக்கள் ரம்யா .

Don't Worry Be Happy.

நடுவரேமாலை வணக்கம். எதிர் அணியினர் சொன்னாங்க தைரியமின்மை தான் காரணம் என்று ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிரேன் நான் கல்லூரியில் படித்த போது நடந்தது அது இருபாலர் படிக்கும் கல்லூரி என் தோழியை ஒருவன் கிண்டல் செய்தான் பதிலுக்கு இவள் திட்டிவிட்டாள் அது அவனுக்கு ஈகோ வாகி அடுத்த நாள் அவன் நண்பர்களுடன் சேர்ந்து இவளை கேலி செஇது துப்பட்டாவை ப்டித்து இழுத்து விட்டான் முதல்வரிடம் புகார் செய்தால் அந்த் படித்த மேதை நீ ஏன் அவ்னை திட்டினாய் அதான் பிரச்சினைக்கு காரணம் என்றார் மேலும் பெற்றோரைக் கூப்பிட்டு அட்வைஸ் வேறு உங்க மகளை அடக்கி வைங்க இப்படி இருந்த எப்படி தைரியம் வரும் நடுவரே சொல்லுங்கள் பி ஒரு திருத்தம் என் பெயர் லீமா

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

நடுவர் அவர்களே!! எதிரணித்தோழி கூறியிருக்காங்க, தைரியலட்சுமிய துணைக்கு வெச்சுகலாம்னு சொல்லியிருக்காங்க... உங்களையும் என்னையுமாட்ட இளம்பெண்களா இருந்தா(கராத்தே, குங்ஃபு, ஜூடோ, சிலம்பம், களரி..Etc) தைரியலட்சுமிக்கே செக்யூரிட்டி கார்டா வேலை பார்க்கலாம்.
ஆனா பால்மணம் மாறாத பச்சைகுழந்தைகளும், பல்லு போன பாட்டிகளும் என்ன செய்வாங்க நடுவரே???
ஆசிட் இருந்தாதானே முகத்தில வீசுறாங்கனு கேக்கலாம், அப்ப அதைய நிறுத்திபுடுங்க..
பொண்ணுங்க செண்ட் அடிச்சிசா ஆணுக்கு மனசுல சபலம் ஏற்படும் அதுனால, தினமும் வேப்பெண்ணைய தலைக்கு தேய்ச்சிட்டு, விளக்கெண்ய்ல மூஞ்சி கழுவிக்கலாம்..
கண்ணுக்கு மட்டும் கண்மை வெக்கிறதால எதிர்பாலினத்தை சபலம் கொள்ளச்செயூம் அதுனால கண்ண விட்டுட்டு முகம் பூரா மைய அப்பிக்கலாம்....
தீக்குச்சி இருந்தா ஆபத்து பொண்ணுங்களை சீரழித்துவிட்டு எரிச்சுடுவாங்க..அதுனால தீக்குச்சி தயாரிப்பையே நிறுத்திபுடலாம்..சிக்கிமுக்கி கல்லு பயன் படுத்தலாம், ஆனா பாருங்க நடுவரே அதுலயும் ஆப்த்து இருக்கு கல்லெடுத்து அடிச்சு கொல்லகூட தயங்க மாட்டாங்க ...அதுனால எந்த வகை கல்லுமே இருக்கக்கூடாது, கல்ல பூராவும் பொறுக்கி கொண்டுபோய் கடல்ல கொட்டிடுலாம்..:( நடுவரே வேதனையா இருக்கு,

"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" எவ்வளவு ஆழமான வார்த்தைகள்..
அப்படித்திருந்தலயா திருடின கைய ஒடச்சு அடுப்பில வெக்கணும், இல்ல தெருவில சுத்துற நாய்க்கு போடணும்...
முதல்ல நாம என்ன வேணா பண்ணலாம், எப்படி வேணா இருக்கலாம்னு நினைக்கிற எண்ணத்தை மாற்றணும்,, அந்த எண்ணத்துக்கான ஆணிவேர்ல ஆசிட் ஊத்தி பொசுக்கணும்..அதுக்கு ஒரே வழி கடுமையான சட்டம்தான்..
வளர்ந்த நாடுகள்லயும் குற்றங்கள் இருக்க போய்தானே சட்டங்கல் கடுமையாக்கப்படிருக்கும்..ஏன் நாம மட்டும் இப்படியே காலங்காலமா பல்வேறுவிஞ்சானிகளையும், மருத்துவர்களையும், தொழிலதிபர்களையும் காமக்கொடூரன்கலுக்கு பழிகொடுத்துக்கொண்டிருக்கிறோம்..
பெண்கள் என்ன கோயிலுக்கு நேர்ந்துவிட்டிருக்கும் ஆடுகளா?? சமயம் வந்தா வெட்டுறதுக்கு...
இன்னிய காலகட்டத்தில பெண்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதே பயமா இருக்கு..

கோவையில் எல்லன் ஹாஸ்பிட்டல் தெரியும்னு நினைக்கிரேன் நடுவரே தங்களுக்கு..
அங்கு கடந்த 10 வருடங்களுக்கு முன் ஒரு பிச்சைக்காரி ஒருவர் சுத்திக்கொண்டிருப்பார், ,, கடவுளே இதை எழுதவே கை கூசுகிறது நடுவரே :( அந்த பிச்சைக்கார பெண்மணி மூன்று முறை நிறைமாத கர்ப்பிணியாக நடமாடியதை கண்ணால் கண்டேன் நடுவரே!! அட நாய்களா பிச்சைகாரியையும் விட்டுவெக்க மாட்டீங்களா?? சில சமயம் காணாமல் போயிருப்பார், திரும்வவும் அந்த சிக்னலில் பிச்சையெடுத்துக்கொண்டிருப்பார்.. என்ன ஒரு வேதனையான விஷயம் பாருங்கள்:(
நடுவரே பேப்பரில் வந்த ஒரு விஷயம் இது போட்டொவுடன் கூடிய செய்தி..
இளம் கன்றுகுட்டியை இரு வடமாநில இளைஞர்கள் சேர்ந்து கொடுமைபடுத்தி இறந்தே விட்டது அக்கன்று.. கத்தாமல் இருக்க வைக்கோல் கூட்ட வைத்திருந்த தடியை வாயில் குறுக்காக வைத்ததனால், அது இறந்துவிட்டது .. ஒரு பெண்ணாக எனக்கு இதை எழுதவே கை கூசுகிறது,,,

இந்த நடமாடும் பாவிகளுக்கு பயந்து எத்தனை பெண்கள் ரயில் நிலையங்கலிலும், பஸ்நிலையங்கலிலும் தங்கள் பச்சை குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் தவிக்கின்றனர் தெரியுமா நடுவரே??
அதையும் செல்போனில் படம் பிடித்து வெளியிட தயாராக இருக்கும் நரிக்கூடத்டிடமிருந்து நம் பெண்சமுதாயம் எப்படி மேலுக்கு வரும் நடுவரே????

தூக்கு தண்டனையை எதிர்க்கும் மனித உரிமை ஆர்வலர்களே, ஒரு நிமிடம் சிந்தியுங்கள் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் இக்கதி எப்பவேணாலும் நேரும் என....
வேதனையுடன் என் உரையை முடிக்கிறேன் நடுவரே!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

நல்ல தலைப்பைத் தந்த கவிசிவாவுக்கு நன்றி.

மனசில நினைச்சதெல்லாம் சொல்றதுக்கு ஒரு சந்தர்ப்பம் இப்ப.

இன்றைய சூழ்நிலையில் ரொம்பவும் அவசியமாக, எல்லா விதமான கருத்துக்களையும் பேசி, விவாதிக்க வேண்டிய தலைப்பு இது.

பாரதியார் சொல்வது போல - ‘பேசாப் பொருளையும் பேசத் துணிந்தேன்” நடுவரே.

இந்தத் தலைப்புல உடை ஒரு காரணமா என்று கேட்டிருந்தீங்கன்னா, கண்டிப்பா இந்தத் தலைப்பை எடுத்திருக்க மாட்டேன்.

நடை, உடை, பாவனைன்னு சொன்னதுக்கு நன்றி.

உடை மட்டும் காரணமா? இல்லையே. பஸ்ஸில் போறப்ப, கிராமங்களைக் கடக்கும்போது, ஆற்றில் குளிச்சுட்டு, ஒரு முந்தானையை உடலைச் சுற்றிக் கட்டி, இன்னொரு முந்தியை மரத்தில் கட்டி, ஈரத் தலையை ஆற்றிக் கொண்டிருக்கும் பெண்மணியைப் பார்த்திருப்பீங்க.

பாதி குளிச்சுட்டு, அப்படியே வந்த மாதிரி, ட்யூப் ட்ரெஸ் போட்டிருக்கும் பெண்களின் படங்களையும் பார்த்திருப்பீங்க.

இரண்டு இடங்களிலும் அவங்க நோக்கம் என்ன? ஒன்று - டெய்லி ரொடீன். அந்தப் பக்கம் போகும் எந்த ஆணையும் அந்தக் காட்சி பாதிக்காது.

ஆனா, இந்த ட்யூப் ட்ரெஸ் போட்ட படங்கள் - முற்றும் துறந்த முனிவனையும் - என்னைப் பார் என் அழகைப் பார் என்று சொல்லாமல் சொல்லி, எக்ஸ்போஸ் பண்ணுவதுதானே.

எல்லா நாட்டு சட்ட திட்டங்களிலும் - இதற்கு மேல் குறைத்தால் அது சட்டப்படி குற்றம் என்று இருப்பதால் - போனால் போகிறது என்று மறைக்க வேண்டிய இடங்களை மட்டும் மறைக்கிறாங்க - அப்படித்தானே.

பெண் குழந்தைகளுக்கு 7 - 8 வயசு ஆகிடுச்சுன்னாலே, அது தூங்கும்போது - உடை விலகினால் கூட - நல்லா இழுத்து விடு, அப்படி என்ன தடிமாட்டுத் தனம் என்று கண்டிப்பதும், 10 வயசு ஆகிட்டா - குளிச்சுட்டு வரும்போது - துண்டு/பாவாடையைக் குறுக்கே கட்டு என்று சொல்லித் தருவதும் எதற்காக?

வீட்டில் இருக்கும் அப்பா, அண்ணன், தம்பி மேல நம்பிக்கை இல்லாமயா, சொல்லுங்க.

பின்ன எதற்காக இதை சொல்லிக் கொடுத்து வளர்க்கிறோம்?

”டு நாட் எக்ஸ்போஸ்” - இந்த விஷயம் பல் தேய்க்கிற மாதிரி, சுத்தம் சுகாதாரம் மாதிரி, சாப்பாடு வேளா வேளைக்கு சாப்பிடுகிற மாதிரி, அடி மனசில் அழுத்தம் திருத்தமாகப் பதியணும் - அதற்காகத்தான்.

எப்பவும் போல இப்பவும் ஒரு விஷயம் திரும்பவும் சொல்றேன். இங்க பட்டியில் நான் பங்கெடுத்துகிட்டாலும் சரி, பார்வையாளராக இருந்தாலும் சரி, இங்க சொல்லப்படும் கருத்துக்களை மைண்ட்ல வச்சிட்டுதான் இருக்கேன் நடுவரே.(மைண்ட்ல வைச்சிக்கிறேன் வசனத்தை - காதல் படத்துல வரும் டைரக்டர் சொல்ற வாய்ஸ்ல படிச்சுக்குங்க நடுவரே)

நடுவரே, உங்களுக்கு நினைவிருக்கும்னு நினைக்கிறேன். ஆண்கள் ராமனா, ராவணனா என்ற தலைப்பில் நீங்க பேசியிருந்த விஷயம் என் மனசில் அப்படியே பதிஞ்சிருக்கு

//நடுவர் அவர்களே என் பையன் பிறந்த போது நல்லவனாக வளர்த்தனும்னு நினைச்சேன் ஆனா என் பொண்ணு பிறந்த போது எப்படி இவள் இந்த நயவஞ்சகர்கள்கிட்ட தன்னைக் காப்பாத்திக்கப்போறாளோன்னுதான் நினைச்சேன் நடுவரே! இதையே இப்ப இருக்கிற முக்கால்வாசி பெற்றோர் நினைக்கிறதுனாலயோ என்னவோ இப்போ பெண்குழந்தைகள் ஸ்கூலுக்கு அடுத்து ஓடுறஇடம் தற்காப்புகலையைக் கற்கும் இடத்துக்குதான்.//

இது நீங்க சொன்னதுதான்.

எந்தப் பெற்றோரும் தன் பையன் பெண்களை மதிக்கணும் என்றுதான் நினைக்கிறாங்க. சொல்லிக் கொடுக்கிறாங்க. ஆனாலும் சில ஆண்கள் இப்படி நடப்பதன் பல காரணங்களில் ஒன்று - கவனிங்க நடுவரே - பல காரணங்களில் ஒன்று - நடை உடை பாவனையும்தான்.

என்ன ஒன்று - எங்கேயோ ஒரு பெண்ணால், உள்ளிருக்கும் மிருகத்துக்கு அடிமையான ஆண், வேறொரு அப்பாவிப் பெண்ணை, பலிகடா ஆக்கி விடுகிறான்.

அதாவது எங்கே அவன் ஜம்பம் பலிக்கிறதோ - அங்கே அவன் கைவரிசையைக் காட்டுகிறான்.

சினிமா நடிகையையும் மாடல் பெண்ணையும் குறைந்த உடை, அங்க அசைவுகளுடன் பார்க்கிற ஆணால், அந்தப் பெண்களுக்கு நேரடியாக எந்தப் பாதிப்பும் இல்லை. அவங்க பாதுகாப்பா இருப்பாங்க. ஆனால், வேறெங்கோ இதே பாதிப்பில், நினைப்பில் தன்னுடைய பாதுகாப்பை கவனத்தில் கொள்ளத் தவறிய பெண், பாவம் உயிரையும் இழக்கிறாள். தாங்க முடியல நடுவரே.

இன்னும் நிறைய சொல்றேன், மீண்டும் வருகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

//ஆண்கள் பெண்களை போகப்பொருளாக பார்க்கும் நிலை இருக்கும் வரையிலும், அவளை சகமனுஷியாகவும் உணர்வுள்ள மனுஷியாகவும் எண்ணாத நிலை இருக்கும் வரையிலும் பெண்கள் குட்ட குட்ட குனியாமல் நிமிர்ந்து நின்று தட்டிக் கேட்டாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. //....ஆமாம் திமிர் பிடிச்சவன்னு அவப்பெயரும் சேர்த்துள்ள வரும் :-(

//மனித உரிமை ஆர்வலர்களே உங்களிடம் ஒரு கேள்வி. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி எறியப்பட்டு உயிரை இழந்தாளே அந்த பெண் அவள் மனித இனம் இல்லையா? அவளுக்கு வெளியில் சுதந்திரமக சென்று வர உரிமை இல்லையா? அப்போது எங்கே போனது உங்கள் மனித உரிமை கூக்குரல்கள்? //..இவங்கலும் இப்ப விளம்பரம் தேட ஆரம்பிச்சிட்டாங்களோ??:-(

//ஆனால் பாதிக்கப்பட்ட இந்த பெண் அடைந்த தண்டனை... மன உளைச்சல், சமூகத்தின் குற்றச்சாட்டுகள்... இப்படிப்பட்ட நிலையில் தட்டிக் கேட்பதால் மட்டும் என்ன பயன் இருந்து விடப்போகிறது. இல்லை எந்த பெண்ணுக்குத்தான் துணிச்சல் வரும்?//....இந்தமாதிரி விசயத்துக்குதான் சகிப்புதன்மைன்னு ஒன்ன பொண்ணுங்களுக்கு புகுத்தினாங்களோ??

//போதையில்தான் அவன் தவறு செய்கிறான் அதனால் டாஸ்மாக்கை மூடு என்கிறார்கள். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பது சரி. ஆனால் தன் தவறுக்கெல்லாம் போதையின் மீதும் பெண்ணின் உடையின் மீதும் குற்றம் சுமத்தும் ஆண்களுக்கு என்று எந்த சுயக்கட்டுப்பாடும் தேவை இல்லையா அல்லது சுயக்கட்டுப்பாடின்றி இருப்பது அவர்களின் பிறப்புரிமையா?//....குடிகாரனுக்கு நடுரோடு எது ரோட்டோரம் எதுன்னு பாத்து விழத்தெரியுது..இது மட்டும் கண்ணு தெரியலையோ? நல்லா இருக்கு கதை.

//தவறு செய்யும் ஆண்களே உங்கள் தவறை நீங்களும் உணருங்கள். திருத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நாளை உங்கள் வீட்டுப் பெண்ணுக்கும் இந்த நிலை வரலாம். அப்போது அதை பற்றி கேள்வி எழுப்ப தார்மீக ரீதியில் உங்களுக்கு எந்த உரிமையும் இருக்காது. உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னின்னு நினைக்காதீங்க. அடுத்தவங்களுக்கு வருவதும் ரத்தம்தான் என்பதை உணருங்கள்.//...இதையெல்லாம் நினைச்சுப்பாப்பாங்கன்னு நம்பறீங்களா என்ன?

//மாற்றங்கள் வீட்டிலிருந்து துவங்க வேண்டும். ஆண் பெண் பேதமின்றி குழந்தைகளை வளர்க்க வேண்டும். ஆண் குழந்தையின் மனதில் பெண் என்பவள் உனக்கு கீழானவள் என்ற எண்ணத்தை விதைக்காமல் அவளும் உனக்கு இணையானவள் என்பதை வலியுறுத்தி வளர்க்க வேண்டும்.// ...ரொம்ப கரக்ட்டுங்க கவி..ஆம்பளைபய அழலாமான்னு சொல்லி அவனை கல்நெஞ்சனாக்கறத முதல்ல கைவிடனும் பெற்றோர்களும் சமுகமும்.

மொதல்ல அவங்க அவங்க வீட்டபாருங்க, வீட்டில மாற்றம் ஏற்படுத்தினா சமூகத்தில மாற்றம் வந்த மாதிரின்னு கவிசிவா அருமையான தீர்வும் சொல்லிட்டாங்க...ஒருவேளை கவி சொல்றதும் சரிதானோ? நடை உடை பாவனையும், தட்டிகேட்கும் கட்சியும் ஒத்துக்கிட்டு ஆமாம்னு சொல்லப்போறீங்களா? இல்ல இல்லைன்னு மறுவாதம் பண்ணப்போறீங்களா? கவியின் எதிர் கட்சியே என்ன சொல்லப்போறீங்க? வாங்க உங்க வாதங்களை வையுங்க....

Don't Worry Be Happy.

//நடிகர் சிவகுமார் அவர்களும் ஓவியக்கல்லூரியி பயின்றவர்தான், சினிமாவில் இருப்பவர்தான், ஆனால் எவ்வளவு கண்ணியமான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்.//.எப்படி கட்டுபாடோடு வாழ வேண்டும் என்பதில் இவர் ஒரு எடுத்துகாட்டு..உதாரணபுருசன் எனலாம்.

//அதான் ஒருமுறை ஜெயிலுக்கு போய்ட்டு வந்தாச்சு, இனி நமக்கென்ன ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலுனு திரியுதுங்க. அதுனால தண்டனைய கடுமையாக்கணும்.//....அட்லீஸ்ட் இவனுக்கு கிடைச்ச தண்டனைய பாத்தாவது மத்தவங்க குற்றம் செய்யாம இருப்பாங்கல்ல.

//உனக்கென்னடா ஆண்பிள்ளை , நீ பெரிசான பொண்ணுங்க கியூவில நிப்பாங்க, அந்த பொண்ணு உன்னையே வாட்ச் பண்ணுது இப்படியெல்லாம் சொல்லி சொல்லி வளர்க்கும் போது, அந்த ஆண்குழந்தைகளுக்கு, ஓ நாம உயர்ந்தவன், பெண்கள்னா நம்மைவிட தாழ்ந்தவங்க அப்பீடீங்கிற எண்ணம் உருவாயிடுது. முதல்ல அதை மாற்றணும்.//...ரொம்ப சரியாச் சொன்னீங்க அருள்.

//கூலிவேலைக்கு போற ஆணுக்கு அதிக சம்பளம் , பெண்ணுக்கு குறைந்த சம்பளம்.. மேலும் அங்க சும்மா சுத்தி திரியுற மேற்பார்வையாளர், கரண்டிய கையில பிடிச்சிருக்கிற கொத்தனார் வரைக்கும் வீசும் ஏளனப்பேச்சுக்கும், பார்வைக்கும் செவிமடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கு இன்றைய காலகட்டத்திலும் பெண்களின் நிலை..:((//...என்ன பண்ண பெத்த குழந்தைகளை தகப்பானால பாத்துக்க முடியலைன்னு அப்படியே விட்டுரமுடியுமா? பாசத்துக்கு அடிமைங்கறது பெண்ஜென்மம் மட்டும்தானே .

அருமையான வாதத்தை வைத்து உங்க கட்சிக்கு பலம் சேர்த்திருக்கீங்க வாழ்த்துக்கள் அருள்....இவங்க எதிர்கட்சி என்னமே சொல்லப்போறீங்க ? சட்டு புட்டுன்னு கோட்ட மாட்டிக்கினு வந்து நில்லுங்க ..

Don't Worry Be Happy.

தட்டி கேட்க்காமை
நடுவரே
வீட்டில் இருந்தே நல்ல பழக்கங்களை மனதில் விதைக்க வேண்டும்.. பெண் என்பவள் போக பொருள் அல்ல என சொல்லி வளர்க்க வேண்டும்.. ஆண்களாய் பார்த்து திருந்தாவிட்டால், தண்டனை கொடுத்தும் பலனில்லை..நல்ல உடைகள் அணிந்தும் பலனில்லை என்றெல்லாம் எதிரணி தோழிகள் சொல்கிறார்கள்.. முற்றிலும் உண்மை.. ஆண்கள் மனதில் விதைக்க வேண்டும்.. ஒழுக்கத்தை வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும்.. நானும் அதை வரவேற்கின்றேன்.. ஆனால் சொல்லிக் கொடுப்பது எல்லாம் சிறிய பசங்களுக்கு வேணா ஒத்துப் போகும். என் வீட்டில் 5 வயது சிறுவன் இருக்கிறான் என்றால், நானும் பெண்ணை மதிக்க கத்து கொடுக்கிறேன்..எதிரணி தோழிகள் சொல்வதை போலவே.. ஆமோதிக்கிறேன்..ஆனால் இன்று வளர்ந்த ஆசாமிகளின் மனதை எப்படி மாற்றுவது?

மெடிடேஷன் சொல்லி கொடுத்து விளக்கவுரை கொடுக்க போகிறோமா?

பெண் என்பவள் இவள் தான் ,புரிந்துக் கொள் மானிடா என அவர்களின் மன கண்ணை திறக்க போகிறோமா?

இல்லை அவனுக்கு அவன் செய்த தவறை உணர வைத்து, நீ இப்ப ரொம்ப நல்லவனாயிட்டா ராஜா, இனி பெண்களை மதி என விட போகிறோமா?

அப்படி செய்வேதேன்றால் இதை எல்லாம் செயல்படுத்துபவர் யார் ? யாருக்கு அத்தனை பொறுமையும் நேரமும், கொடூரர்களுடன் பழகி புரிய வைக்கும் மன நிலையும் இருக்கிறது..

இன்று ஒரு பெண்ணின் வாழ்க்கையை அடியோடு கெடுத்து, சித்திரவதை செய்தவன் தான், நாளை நல்லவனாக மாற போகிறானா? போக பொருளாய் பார்த்த நான் இனி சகோதரியாய் பார்ப்பேன் என சொல்ல போகிறானா? சரி அவ்வாறு சொல்வதானாலும் 10 ல எத்தனை பேரு மாறுவான்? மாறினாலும் 10 ல எத்தனை பேர் அதில் நிலைத்து இருப்பான் சொல்லுங்க நடுவரே ...

பெண்ணை போக பொருளா பார்க்கிறார்கள்.. பார்ப்பது தவறு.. அதனால் தான் இத்தனை நிகழ்வுகளும் நிகழ்கின்றன என்பது சரி.. ஆனால் அதை எப்படி கையாளுவது ? போக பொருளாய் பார்க்கிறவனின் மனம் மாற வேண்டும்..ஆமாம்.. சரி தான்.. எப்படி எப்போது.. அதற்குள் இன்னும் நான்கு நிகழ்வுகள் அரங்கேறி விடுமே..

தட்டி கேட்பது இல்லாம தான் நடுவரே இத்தனை பிரச்சனை.. தட்டி கேட்டார்கள்.. மீண்டும் பழைய நிலை வந்துவிட்டது தான்.. ஆனால் அந்த தட்டிக் கேட்டதிற்கு என எழுச்சிகள் இருந்ததா இல்லையா ? அது இல்லாமல் தான் இத்தனை பிரச்சனை.. மனம் மாற வேண்டும்.. என சொல்லி கொண்டு இருப்பதை விட, தட்டி கேட்டு அதற்கு எந்த ஒரு நியாமும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.. நடுவரே.. எத்தனை நாள் தட்டி கேட்டு அதற்கு சரியான நியாயம் கிடைக்காமல் போகும் ? 10 நிகழ்வுக்கு நடக்கலாம்.. மக்கள் இப்பவெல்லாம் விழித்து உள்ளனர். பதினோன்ல இருந்து தட்டி கேட்கும் நீதி இல்லை என்றால் புரட்சி கூட நடக்கலாம்.. யாருக்கு தெரியும்..? இப்படி தட்டி கேட்டு தண்டனை கொடுக்கப்பட்டிருந்தால், 10 ஆண்டுகளுக்கு முன்பே எல்லா பிரச்சனையும் ஒரு அளவு சரியாகி இருக்கலாம்.. யாருக்கு தெரியும்.?. ஒழுக்கத்தை மனதில் விதைத்து பெண்களை மதிக்க கற்றுக் கொடுத்திருந்தாலும் எல்லாம் சரியாகி இருக்கும் தான்.. ஆனால் எத்தனை ஒழுக்கங்களை கற்றுக் கொடுத்தும் மாறும் மனிதன் இருக்கிறான் இல்லையா? சரி 100லே 99 பேரு பெண்களை போக பொருளா பார்க்காதவன் தான்...எதிரணி தோழிகள் சொன்னதை போல, சமூகத்தில் ஆரோக்கியமான சிந்தனை வந்துவிட்டது.. ஆனால் அதில் ஒருவன் கூடவா சபல புத்தி கொண்டு சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து இருக்க மாட்டான்... அந்த ஒருவனையும், எங்களின் வாதத்திற்கு இணங்க தட்டி கேட்டு கொட்டி பாருங்கள்.. தட்டி கேட்பதின் மகத்துவம் புரியும்.. அதற்காக 99 பேர்கள் போக பொருளாய் பார்க்காமல் நாங்க சொன்னதை போல இருக்கிறார்கள் அது தான் பிரச்சனை இல்லை என சொல்ல கூடாது... ஒருவன் செய்யும் தவறு தானே எல்லாரையும் கஷ்டபடுத்துகிறது.. அது தான் நம் நாட்டில் நடந்து கொண்டும் உள்ளது.. ஆயிரம் நல்ல செயலை செய்.. ஒரு தவறு செய்து விட்டால், எல்லாம் மாறி விடுகிறது இல்லையா? அது போல தான், அங்கே அங்கே விளையும் களையை பிடுங்கி தான் எறிய வேண்டும்.

போக பொருளாய் பார்க்க கூடாது.. ஆரோக்கியமான எண்ணம் வேண்டும் என்று தான் எல்லோரும் நினைக்கிறோம்.. அட அது இருந்திட்டால் தான் பிரச்சனை இல்லையே .. அது இல்லை எனும் போது, உங்கக்கு ஆரோக்கியமான எண்ணம் இல்லையே என அவனிடம் பேசுவதும், அவனை நல்லவனாக மாற்ற முயல்வது சரியா? இல்லை ஒரு தவறு செய்ய நினைக்கும் போது, பாரதி கண்ட புதுமை பெண்ணாக , மன உறுதி கொண்டு தட்டி கேட்பது சரியா?

தட்டி கேட்க தட்டி கேட்க, சிறிது சிறிது தான் மாற்றம் வரும்..
வீட்டில் ஒழுக்கத்தை கற்பி.. தவறே இல்லை..
சமூகததில் பெண்களுக்கு அநீதி எனில் தட்டி கேள், வேறு வழியேயில்லை..

இப்படி தட்டிக் கேளாமல், தனிப்பட்ட மனிதன் மனதிலேயே ஒழுக்கம் குறைவது தான் காரணம் என்று நாம் பேசிக் கொண்டிருந்தால், அது தான் தெரிதில்ல அப்பறம் என்ன என அவன் இடித்து கொண்டே தான் நம் வாழ்க்கையில் பயணிப்பான்..

தட்டி கேட்க்காமை :
எங்கே எல்லாம் தட்டி கேட்காமல் இருக்கிறார்கள்.. அதானால் என்ன விளைவு வருகிறது.. ?
* 8 வயது என பிள்ளை வளர்ந்து விட்டால், எக்ஸ்போஸ் செய்யாமல் உடை அணியணும் என சொல்லிக் கோடு.. மீறினால் தட்டி கேள்.. அடடா நாம் பிள்ளையை அடக்க வேண்டாம் என நினைத்தால், பின் ஒரு நாளில் பிரச்சனை வரும் .. மற்றவர் கண் நல்லா இருக்கா, இல்லையோ.. மற்றவருக்கு ஒழுக்கம் இருக்கோ இல்லையோ.. ஆனால் உன் பிள்ளையை பார்த்து வளர்த்து.. இப்படி ட்ரஸ் போடுவது நம் உரிமை மகளே என சொல்லாமல், கண்ணியமாய் உடை அணிவது நம் கடமை மகளே என சொல்லி வளர்த்து..அவ்வாறு உடுத்தவில்லை எனில் தட்டி கேட்க வேண்டும்..

* என்ன தான் நண்பர்களுக்குள் பாலினம் இல்லை என்று பேசினாலும் , அப்பா, அண்ணனுடம் பழகுவதிலும், ஆண் நண்பர்களுடன் பழகுவதிலும் ஒரு வரைமுறை உள்ளது என சொல்லி கொடு.. மீறினா, தட்டி கேள்.. தட்டிக் கேட்காமை தான் ஒழுக்கத்தை கெடுக்கிறது..

* பெரிய பென்களை ஒழுங்கான உடை அணிய செய்ய வேண்டும், வயதுக்கு வந்த பிள்ளைக்கு கண்ணியமான உடை தான், அவளை பற்றிய நல்ல எண்ணத்தையும் பார்த்த நொடியில் பெற்று தரும்.... உடையை காரணம் சொல்வது சாக்கு தான்.. அதை நாமும் ஒரு சாக்காக எடுத்துக் கொள்ளாமல், கண்ணியமாய் உடை அணிய செய்யலாமே.. இல்லை என்றால் தட்டி கேள்..

* சென்சார் போர்ட் எதுக்கு இருக்கு.. அசிங்கமான ஆடை, ஆபாச பேச்சு, வன்முறை, சமூக ஒடுக்குமுறை என பல காரணங்களுக்காக இருக்கிறது..ஆனால் இப்பவும் சில படங்களை பார்த்தால், சென்சார் போர்ட்கிட்ட போயி தான் வருகிறதா என குழப்பம்.. ரெட்டை அர்த்தம், அசிங்கமான உடையை கொடுத்து நடிக்க செய்வது.. அசிங்கமான பாடல்கள் எல்லாமே இருக்கத் தான் செய்கிறது.. சரி குழந்தையை நல்ல விதமாக வளர்க்கிறோம்.. ஆனால் இந்த சினிமா என்ன சொல்லிக் கொடுகிறது.. இதையும் தட்டி கேட்க வேண்டும்.. படத்தையும் , அதில் ரெட்டை வசனம் பேசிய நடிகரையும் தட்டி கேட்டார்கள்.. படம் பெயரையும், நடிகரின் பெயரையும் நான் இங்கு சொல்லவில்லை.. ரெட்டை அர்த்த வசனம் மற்றும், அசிங்கமான ஆடை உடுத்திய நடிகை.. இன்று அவர்கள் பொது மன்னிப்பு கேட்டு உள்ளார்கள்.அந்த நகைசுவை நடிகர் தனக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் ரெட்டை அர்த்த காமடியை மக்கள் ரசிக்கிறார்கள் என்று தான் இதுவரை நினைத்தேன்.. ஆனால் இப்போ எல்லாரும் திட்டி தீர்க்கிறார்கள்.. இனி கொஞ்சம் வார்த்தைகளை பார்த்து டயலாக்குக்கு பயன்படுத்துங்கள் என சொல்லி உள்ளாராம்.. . அசிங்கத்தை சினிமாவில் காட்டும் இதை போன்ற விஷயங்களும் பாலியல் செயல்பாடுகளை தூண்டும் விதம் தான் ...சொல்லுங்க நடுவரே..கும்பத்தோடு படம் பார்க்க வரும் போது, முகத்தை திருப்பி கொள்ளும் அளவு காட்சி வந்தால், தட்டி கேட்க வேண்டும் நடுவரே.. காது கூசும் ரெட்டை அர்த்த நகைச்சுவை வந்தால், முகம் சுளித்து திட்ட வேண்டும் நடுவரே.. ரசித்தால் எதிர் காலம் என்னவாகும்.. ?

*அப்புறம் இப்ப ஒரு புது பழக்கம் எல்லாருக்கும்.. ஒரு பாராட்டுனாவோ, திடிரென பார்த்த சந்தோசம்னாவே கட்டி பிடிப்பது.ஆண் பெண் எதிர்பால் என்றாலும் சரி, தெரிந்தவர் தெரியாதவர் என்றாலும் சரி...அது எதுக்கு..? உடனே அந்த ரெண்டு பேரு மனசுல தப்பில்லை..சாதாரணமா கட்டிபிடித்த இதை ஏன் குறையா நினைக்கணும்னு வேற சொல்வாங்க. மனசுல தப்பில்லை என எல்லாருக்கும் தெரியும்..அதுக்காக கட்டிபிடிக்கணும் என்றும் அவசியம் இல்லையே .. இது நம் கலாசாரமே இல்லை..
அத்தனை எக்சைட் ஆனா ஒரு ஹேன்ட் ஷேக் செய்து கொள்ளலாமே..அதுவும் அத்தியாவசியம் என்றால்.. இது எல்லாம் நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள் என தெரிய வேண்டும் .. இதில் எத்தனை பேர் எந்த வக்கிர எண்ணமும் இல்லாமல் இப்படி செய்கிறார்கள் என தெரியும்? அவர் மனதில் என்ன இருக்கு என கண்ணாடி கொண்டா பார்க்க முடியும்.. ?

* தவறு ஒன்று நிகழும் போது தட்டி கேட்டால், பாலியல் கொடுமை மட்டும் இல்லை.. எல்லா வித பிரச்சனைகளும் தீர்வு காணும்.. சரி பெண்களை போக பொருளா யாரும் பாக்கல... உடல் அளவு ஆண்களை விட பலவீனமானவள் என அடிக்கவும்,வேறு மாதிரியும் நடத்த தொடங்கினால், என்ன செய்வது..? காம பொருளா பார்க்காமல் வேறு விதமாய் பார்த்தால் என்ன செய்வது.. இதுவே தட்டி கேட்டா வேறு வழியே இல்லை.. ஒழுங்கா தான் நடத்தி ஆகணும்..

பள்ளிக்கு போகணும்னா 8.30 குள்ள போகணும்.. இல்லைனா கேள்வி கேட்பாங்க.. அந்த கேள்வியும், பயமும் இல்லைனா 10 மணிக்கு போலாமே..

அலுவலகத்தில் பணியை சரியா செய்யலைனா கேள்வி கேப்பாங்க.. வேலையை விட்டே எடுப்பாங்க

சாலை விதியை மீறினால் கேள்வி கேட்ப்பாங்க.. பணம் கட்ட சொல்வாங்க..

தப்பு செய்தால்,தண்டனை

இப்படி நாம செய்யற சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஒரு ஹுக் இருக்கு.. அடிப்படையாவே பள்ளிக்கு நேரமா வரணும் என்பது உன் மனதில் இருக்க வேண்டும் .. சாலைன்னு இருந்தா அதில் கவனா போகணும்னு உனக்கே தெரியனும். சம்பளம் வாங்கினா அதுக்கு ஏற்ற வேலை செய்யனும்னு உனக்கே சிந்தனை இருக்கணும்னு மட்டும் நாம பழக்கபடுத்தல.. எல்லாத்துலையும் ஒரு க் வெச்சு அதை மீறும் போது, கேள்விகளும், வெச்சு இருக்காங்க.. காரணம்.. எல்லார் மனமும் ஒன்று போல இல்லை.. எத்தனை பண்பா வளர்ந்தாலும், மனிதன் மனம் மாற கூடிய ஒன்று.. ஆனால் ரூல்ஸ் என்பது சிஸ்டம் என்பது மாறாதது..

அதை போல தான்..பெண்களின் விஷயத்திலும் , சமூகத்தில் தானே விழிப்புணர்வு வந்து மாறும் என சொல்ல முடியாது.. ஆரோக்கியமான எண்ணத்தை உருவாக்கும் விதத்தில் தான் உருவாக்க முடியும்..இங்கேயும் சட்டம், தண்டனை, எல்லாமே இருக்க தான் செய்கிறது.. ஆனால் இன்னும் வன்முறை, எரிப்பு, ஆசிட் வீச்சும் இருந்து கொண்டே தானே இருக்கு.. எந்த அளவு பிரச்சனை இருக்கோ, அந்த அளவு ஸ்ட்ராங்கான முடிவு எடுத்தால் தானே கட்டுப்படும் நடுவரே.. ? அதற்கு தேவையான முதல் சவுக்கு கயிறு தான் தட்டி கேட்பது. தட்டி கேளாமையின் காரணமே வன்முறை வளர காரணமாகிறது..
நடுவரே... போக பொருளா பெண்களை பார்த்து பாலியல் தொல்லை தருவதும், உடை நடை பாவனை சம்மந்தப்பட்டு பெண்ணை ஒடுக்குவதும், நடந்துக் கொண்டே தான் இருக்கும்.. ஆண்கள் மனதில் தாராளமாக ஆரோக்கியமான சிந்தனையை கொண்டு வரலாம்.. ஆனால் அது வரை பாரதி கண்ட புதுமை பெண் என தட்டி கேட்டு வெட்டி சாய்த்தால் தான் எல்லா பிரச்சனைக்கும் முடிவு வரும்..தவறு செய்யும் ஆண்களை தட்டி கேளாமல் , தான் தோன்றி தனமாய் திரியும் பெண்களை தட்டி கேளாமல் , அநீதிகள் அரங்கேறும் போது வேடிக்கை பார்க்கும் காவல் துறையை தட்டி கேளாமல் , நல்ல விதத்தில் பெற்றோர்கள் வளர்த்தினாலும் அசிங்கமான எண்ணங்களை சொல்லி கொடுக்கும் மீடியாக்களை தட்டி கேளாமல், தறி கேட்டு நடக்கும் அரசை மக்கள் தட்டி கேளாமல், எங்கேயும் எதையும் சாதிக்க முடியாது..

எனவே தட்டி கேளாத அலட்சிய போக்கும், தைரியமின்மையே பாலியல் வன்முறைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது என அடித்து சொல்வேன்..

நடுவரே.. இங்கே எல்லாம் நான் மீடியா, போலிஸ், அரசாங்கம் என எல்லாவற்றையும் இழுக்கிறேன் என நினைக்க வேண்டாம்.. பாலியல் வன்முறை தொடர நான் மேற்கூறிய அனைவருக்கும் கண்டிப்பாக தொடர்பு உள்ளதை.. அதை பற்றி பேசாமல் வெறுமனே பாலியல் வன்முறை பற்றி மட்டும் பேச முடியாது.. வேரிலிருந்து நுனி வரை பேசி கொட்டி தீர்க்க வேண்டிய தலைப்பு இது.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவரே நான் பட்டியில் கலந்துகொள்ளவில்லை இருந்தாலும் சொல்லவேண்டிய சிலதை சொல்லிட்டு போயிடலாம்னு வந்தேன்..இது இரண்டுமே காரணமாக கூட இருக்கலாம் என்று சொல்லலாம் தவிற இது தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது.
முக்கியமான ஒன்றை நாம் யாருமே தொடுவதே இல்லை அதான் காரணம்..அதாங்க சரக்கு!!
சரக்கடிச்சா பெத்த அம்மா எது தான் பெத்த மகள் எது கட்டின பொண்டாட்டி எதுன்னு வித்யாசமெல்லாம் தெரியாது..சரக்கு ஏறிட்டா ஆறாம் அறிவு என்ற ஒன்றுக்கு வேலை இருக்காது.
நாடெங்கும் தண்ணி தண்ணின்னு தண்ணியால் மிதப்பதால் தான் இந்த ப்ரச்சனைகள் தொடருது..ஆண்பிள்ளைகள் இந்த குடிப்பழக்கத்துக்கு அடிமையாகாமல் வளர்த்தி எடுப்பதுவே வருங்கால சமுதாயத்திற்கு நாம் செய்யும் உதவி...நல்லது கெட்டது புரியவைத்து வளர்க்கலாம்.
எல்லா டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூடச்சொல்லி பாருங்க நாட்டில் என்னவெல்லாம் மாற்றம் நிகழுதுன்னு
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு அதே முறையில் அவர்களை சித்திரவதை செய்வது தான் சிறந்த மருந்து..வேண்டாம்னு சொல்றவங்க தன் பிள்ளைக்கு என்ற ஒரு நிலையில் வைத்து சிந்திக்காததால் தான் அப்படி சொல்லிகிட்டு திரியுறாங்க

பெண்களுக்கு உடையில் என்ன அப்படி ஒரு கஞ்சத்தனம்..நீங்க தான் போடுவீங்களா நாங்களும் போடுவோம்னு இப்ப ஆம்பிளப்பசங்களும் இறங்க போய் ஜீன்சை இடுப்பில் அளவெடுப்பதில்லை அங்கிருந்து நாலு இன்ச் கீழ தான் நிக்கும் பேன்ட் உள்ளாடை எல்லாம் வெளிய தெரியணும் என்பது தான் சட்டம்..அது முழுக்க கழண்டு கீழ வுழாம இருக்க காலை விரிச்சு வெச்சு நின்னுக்கணும் அப்றம் கடசீயா ரெண்டு விரலை விரிச்சு காட்டி போஸ் கொடுக்கணும்..விக்டரி தான் போங்க
இப்போ இந்த பொம்பள பிள்ளைகளிருந்து கிளவிங்க வரைக்கும் போட்டு இம்சை படுத்தும் ஒரு கண்றாவி அந்த லெக்கிங்க்ஸ்...ஒரு குர்தாவை போட்டாவது லெக்கிங்ஸ் போட்டு தொலையுங்களேன் குட்டி சட்டை போட்டுகிட்டு லெக்கிங்ஸை போட்டால் எப்படி இருக்கு தெரியுமா.குளியலறையை திறந்து பாத்த மாதிரி இருக்கு.
நிறை குடம் நீர் தழும்பல் இல்.நிஜம் தான் நல்லா படிச்சு நாலும் தெரிஞ்ச பொண்ணுங்க ஒழுங்கா தான் இருப்பாங்க இந்த அரைவேக்காடுகள் பண்ணும் கூத்து இருக்கே..நான் ரொம்ப மாடேர்ன் என்று காட்டிக்கவே இந்த உடம்போட ஒட்டின துணியை போட்டுகிட்டு காலில் போட்ட செருப்பில் இருந்து கீழ விழுந்தே உயிர் போயிடும் போல இருக்கும் அதையும் போட்டு குதிரை மாதிரி நடப்பது யாரை காட்ட??ஆண்களை வம்பிழுக்கவே தான்
வன்முறையில் வந்து நிக்கும்போது தான் நமக்கெல்லாம் கண்ணுல தண்ணி வருது ஆனால் அலுவலகங்களில் கூட இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் இப்படியெல்லாம் உடுத்திகிட்டு திருமணமான ஆண்களை கூட வலையில் வீழ்த்தி எத்தனை குடும்பங்கள் சின்னாபிண்ணமாகுது
வன்முறையில் ஈடுபடும் ஆண்களை மட்டுமல்ல இப்படியெல்லாம் திரியும் பெண்களை கொய்யாகுச்சியை உடைச்சு சீவி பச்சையா நாலு போடணும்

வாழ்த்துக்கு மிக்க நன்றி கனிமொழி உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் :-)

//கடந்த ஆண்டு 700க்கும் அதிகமான பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இதுதான் மிகவும் அதிகம் என்று போலீஸ் ஆய்வு தெரிவிக்கிறது காரணம் ஆண்கள் பெண்களை போதை பொருளாக பார்ப்பதால் தானே.//...உண்மைதான் கனிமொழி..நாட்டை எதேதோ விசயத்திற்கு முன்னே கொண்டு செல்லாமல் இப்படிபட்ட கீழ்த்தரமான விசயங்களுக்கு முன்னேறுதுன்னு நினைச்சு பாக்க ரொம்ப கவலையாவும் கேவலமாவும் இருக்கு..எங்கேதான் போகுது நமது புண்ணிய பாரதம் :-(

//பெரியவங்க சின்ன பொன்னுங்கனு பலாத்கார சம்பவங்கல படிக்கும் போது இவங்களாம் என்ன மனுஷங்கனு தானே தோனுது இந்த மாதிறி ஆனவங்க பொன்னுஙகல போகப் பொருளாக பார்ப்பதால் தான் இன்னமும் பல இடங்கள ல பெண்கல் வீட்டிலே முடங்கி கிடக்குராங்க//....முன்னெல்லாம் சிறிய வயதினர் தன்வீட்டு தெரு தள்ளி பக்கத்து தெரு என்று எங்கும் சுதந்திரமாக விளையாடி சுற்றித் திரிந்தனர். ஆனால் இன்றோ வீட்டுக்குள்ளேயே விளையாடும் கதி ஆயிற்று., வீடியோ கேம்ஸ் மூலம் குழந்தையை ஆடிப்பாடி விளையாட விடாமல் கட்டுபடுத்தி ( கைதியாக்கி?!) வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கும்படி ஆயிற்று :-(

//மனிதனா இருந்தா சுயக்கட்டுப்பாடு வேணும் அந்த மாதிரி இல்லாதவங்கலாம் மனித பிறவியே கிடயாது // ...ரொம்ப சரி கனிமொழி.. அருமையான வாதம் ..யோசிக்கவேண்டிய பல விசயங்களை எங்களுக்கு புரியும் விதத்தில் தெளிவுபட சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்.

போகப்பொருளே காரணம் என்பதை இவர்களின் அன்பு எதிர்கட்சியினர் உணர்ந்து கொண்டார்களா? இல்லையா இதுக்குமேல உங்க கட்சிக்கிட்ட ஆதாரம் இருக்கா அப்படி என்ன அவ்வளவு பெரிய ஆதாரம்? சொல்லுங்க காத்துட்டு இருக்கேன்.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்