பட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன?

எனது அருமை அறுசுவைத் தங்கங்களே! சிங்கங்களே! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பட்டி ஆரம்பமாயாச்சு ...:-)

தோழி கவிசிவா அளித்த அருமையான விவாதிக்க தற்போது மிகவும் அவசியமான தலைப்பு...நமது நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும் விசயங்களைப் பற்றி பேச இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்பில் சிறிய மாற்றங்களோடு .....

**********************************************************************
பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்குள்ளாக காரணம் ..

1.பெண்களின் நடை உடை பாவனையே.,
2.பெண்களை போகப் பொருளாக பார்ப்பதாலே.,
3.பெண்களிடம் தட்டிக்கேட்கும் மனப்பான்மையின்மையே (தையிரியமின்மை)
************************************************************************

பொது இடம் என்பது பார்க், பீச், கோயில், குளம் என்பதோடு இல்லாமல் இன்றைக்கு பெண்களும் அதிகமாக பங்குகொள்ளும் பொது தளமாக இருக்கும் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தபட்டி பயங்கரமா பிச்சு உதற வசதியா நீதிமன்றக்களத்தை தேர்ந்தெடுத்தாச்சு.. தோழிகளே நீங்க கருப்பு கோட்டு போட்டு பிச்சு உதறப்போறீங்களோ இல்லை கிழிச்சு எறியப்போறீங்களோ எனக்கு தெரியாது ....நான் உங்ககிட்ட கேட்டுக்கறது ஒன்னே ஒன்னுதான்.. வேற என்ன ?? அறுசுவை விதிகளையும், பட்டியின் விதிகளையும் மீறாமல் உங்கள் வாதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

பட்டி விதிமுறைகள்:
யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்

வணக்கம் உஷா உங்களுக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும் :-) இப்படி போட்டாதான் உண்டு போல ஸ்மைலியதான் சொல்றேன்:-)

//ஜூடா ஒரு மசாலா டீயை குடிச்சு போட்டு என்னோட வாதத்தையும் கேட்டு போடுங்க.//...நீங்கதாங்க என்னோட நிலைமைய புரிஞ்சு வைச்சிருக்கீங்க மசாலா டீக்கு ரொம்ப நன்றிங்க:-)

//( நாலு சுவர் தாண்டி வரும்போதே, இந்த அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ) இதெயெல்லாம் விட்டு விட்டு வருவது நல்லது. ஆண்களுக்கு கிளர்ச்சி ஊட்டுவது, பெண்களின் நாணமே, வெட்கத்தால் வருமே வினை ! அப்படிங்கறது நான் கண்டுபிடிச்ச புது வாசகம்.//...புது வாசகம் நல்லாயிருக்குங்க:-) வினை விதைத்தவன் வினையும் அறுப்பான் இல்லையா ..இந்த பழய வாசகமும் மெய்யானால் சந்தோசமே :-)

//விஷம் என்று தெரிந்த பின்னர் அதை நாம் எவ்வாறு ஒதுக்கிகிரோமோ, அது போல , இந்த மனித ரூபத்தில் உள்ள மிருககங்களை , தீபந்தம் காட்டி விலக்க வேண்டும். அதற்கு 90% தைரியம் மற்றும் 10% புத்திசாலித்தனம் வேண்டும்.//...தையிரியமா? என்னயமாதிரி ஆளுங்க எல்லாம் யாருக்கோ எங்கோ பாதிப்புன்னு கேட்டதும் மேற்கொண்டு என்னாச்சுன்னு விசாரிக்ககூட பயந்து ஓடத்தானே தோணுது :-(

//அதே போல, இந்த பெண்களை கவர்ச்சிக்காக விளம்பரங்களில் பயன்படுத்துவது, ___ இது நம்மீது நாமே எச்சிலை துப்பு வது போன்றது. அந்த பெண்களின் சம்மதத்தோடு தானே விளம்பரங்கள் அரங்கேறுகின்றன. நம் பெண்களிடம் நோ சொல்லும் தைரிய மனப்பான்மை வந்து விட்டாலே , ஆண்கள் வாலை சுருட்டி ஓடி விடுவர். நாம் கொடுக்கும் இடம். நம் தலையிலேயே கை வைப்பார்.//..இதெல்லாம் தப்புன்னு புரிஞ்சுக்ககூடிய மனநிலையே இப்போதைய பெண்களுக்கு இல்லைன்னு சொல்லலாம்போல..வீட்டு சுவத்தில போஸ்டர் ஒட்டக்கூடாதுங்கறதுல ஜாக்கிரதையா இருக்கறவங்க தன் வீட்டு தொலைக்காட்சில அதுவும் தான் பார்க்கும் கண்ணியமான சீரியல் ஊடே எத்தகைய கேடுகெட்ட விளம்பரம் வந்தாலும் அது ஏதோ சாதாரண விசயம் என்பதுபோல் அல்லவா பாக்கறாங்க இப்ப.

//சிறிது தைரியம் + சாம்ரத்தியம் + பாரதியின் பெண்மையும் கலந்து இருப்போமானால் கண்டிப்பாக, நம் வாழ்க்கை நல்லாவே இருக்கும். அந்த கேடு
கெட்ட்வங்களின் எண்ணிக்கையும் குறையும்.//...மிகச்சரியா சொல்லியிருக்கீங்க உஷா..உங்கள் அடுத்த கட்ட வாதத்தில் இதைப்பத்தி கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா எங்களுக்கு உபயோகமா இருக்கும்.. வந்து சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன் :-) நன்றி உஷா:-)

தையிரியமும் சாமர்த்தியமும் கூடவே பாரதியின் பெண்மையும் கலந்து ...நிமிர்ந்த நடை , நேர்கொண்ட பார்வை கூறிய விழிகள் ஆஹா நினைக்கும்போதே மனசு சிலிர்க்குதே ., இதை செயல் படுத்தும்போது எப்படி இருக்கும்னு எண்ணிப்பார்க்க தோணுது இல்லையா தோழிஸ்...ஆனா இது தீர்வு இல்லைன்னு சொல்றீங்களா? அப்படினா உங்ககிட்ட இதைவிட வலுவான ஆதாரம் இருக்குமே..நீங்களும் உங்க வாதங்களைத் தொடரலாம் ...வாங்க :-)

Don't Worry Be Happy.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் :-)

//அடக்கம்,அமைதி,கட்டுப்பாடு,சாந்தம் இவையெல்லாம் பெண்களுக்கே உரித்தானது ஆனால் இப்ப இருக்கும் பொண்ணுங்களிடம் எங்க பார்க்கமுடியுது//....எப்படி பாக்க முடியும்? இல்ல எப்படி பாக்கமுடியும்னு கேக்கறேன்? அடக்கம் அடக்கம்னு நாம சொல்றத தப்பாபுரிஞ்சுட்டு..இந்த லொள்ளுபுடிச்ச பொம்மனாட்டிங்க அமைதி, கட்டுப்பாடு, சாந்தத்தையெல்லாம் இல்ல அடக்கம் பண்ணிபுட்டாங்க :-(

//எனக்கு சுதந்திரம் இருக்கு நான் எப்படி வேனாலும் ட்ரெஷ் போடுவேன்னு லோ நெக்,லோ ஹிப்னு திரிஞ்சிட்டு இருந்தா ஆண்கள் சும்மா இருப்பாங்களா
அதை படம் புடிச்சி அவங்க பார்ப்பது இல்லாமல் இனையத்திலும் போட்டுடுறாங்க
அப்புறம் குத்துதே குடையுதேன்னு வருத்தபட்டு என்ன பிரயோசனம் சொல்லுங்க
எதுவுமே கட்டுக்குள் இருந்தால்தான் அழகும்,நன்மையும்
எல்லைகள் மீறும்போது ஆபத்தும் எல்லை மீறிவரத்தான் செய்யும்//...முன்பெல்லாம் தெரியாத்தனமா ஸ்ட்ராப் வெளிய தெரிஞ்சாலே சங்கடப்பட்டு யாராவது பாத்துட்டாங்களோன்னு பயந்து மூடிமறைப்பாங்க., ஆனா இப்ப உள்ளாடையோட ஸ்ட்ரேப் வெளிய தெரியரமாதிரி போடறதுதான் ஃபேசனாம்:-(

//அது அவங்க தொழில் அதுக்காக பொது இடத்திலும் ஆபாசமாக உடுத்தினா நல்லாவா இருக்கும்
நடிகைகள் ஆபாசமா போடறாங்கன்னா அது அவங்க ஃபீல்டுக்கு தேவைபடுது,இன்னும் இது போல தொழிலில் இருப்பவங்களும் கவர்ச்சியா உடை உடுத்துறாங்கன்னு நாமும் பொது இடத்துக்கு அப்படி உடுத்திட்டு போகலாமா//....உண்மைதான் பாதுகாப்பு தேவைன்னு கருதரது நாமதானுங்களே அப்ப நாம இல்ல ஜாக்கிரதையா உடை உடுத்தனும். நல்லா சொன்னீங்க ஸ்வர்ணா:-)

//எங்கெல்லாம் பெண்களின் கட்டுப்பாடுகளும்,எல்லைகளும் மீறப்படுகிறதோ அங்கு பிரச்சனைகளும் அதிகரிக்குது என கூறி இப்போதைக்கு விடைபெறுகிறேன் நடுவரே.//..ஃப்ரீ சோ மாதிரி இருந்தா பாக்கறவன் பாக்கதானுங்க செய்வான் இல்லையா ஸ்வர்ணா .

என்ன சொல்லப்போறீங்க இவங்க எதிர்கட்சியினரே வாங்க வாங்க ஸ்வர்ணாவின் தாக்குக்கு பதில் தாக்கு போட வாங்க :-)

Don't Worry Be Happy.

மக்கள் மனசுக்குள்ள எவ்ளோ குமுறல்கள் இருக்குன்னு பட்டி பதிவுகள் படிக்கறப்போ நல்லாவே விளங்குது. ஆனா இதெயெல்லாம் இப்படியே ஆரப் போடாமே தங்கள் வாழ்க்கையிலும் கடை பிடித்தாங்கன்னா , இந்த சமூகத்தில் நடக்கும் நியாயமற்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வரும்.
எனக்கும் நிறைய எண்ணங்கள் கன்னா பின்னா வென்று ஓடி மறைகின்றன. எடிட்ங் ஓட்டிங் எல்லாம் நீங்க செய்து கோங்க . எப்படி தோணுதோ, வடிகட்டாம அருவியா கொட்டறேன். பார்த்து குளிங்க. அய்யோடா படிங்க/

# ஒரு பெண் இருக்கும் வசதியும் படைத்த சில குடும்பங்களை தவிர நிறைய வீடுகளில் பெண்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரு இளக்காரம் இருக்க தான் செய்யுது. இங்கு பதிவில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும், மனதில் எங்கோ ஒரு காயம் கண்டிப்பாக இருக்கும். தங்கள் வாழக்கையில்
*வீட்டில் முன்னுரிமை அளிக்க தயங்கியது
*அலுவலகத்தில் சக வேலையாளிடமிருந்து ஒரு கேவலமான அல்லது வக்கிர பார்வை
*பயணம் செய்யும் போது சக ஆண் பயணியால் ஏதேனும் பாதிப்பு வருமோ என்ற ஒரு இனம் புரியா பயம்
* அழகு படுத்தி கொள்ள வேண்டுமா , இல்லை அறிவோடு இருந்தால் போதுமா என்ற சந்தேககங்கள்
*என்னிகிருந்தாலும் ஒரு ஆணுக்கு அடங்கி தான் போயாக வேண்டிய கட்டாயம்
* இன்னும் தனித்து வாழும் பெண்களை ஏற்றுக் கொள்ளாத ஒரு சமுதாய அமைப்பு
*உடலளவில் என்றைக்காவது காதலனோடோ அல்லது மூடர்களாலோ எதாவது நேர்ந்ந்தால் தன்னை களங்கம் ஏற்பட்டவளாக கருதி தற்கொலை செய்து கொள்வது அல்லது மனதில் புழுங்கி சாவது , விரக்தியோடு அ குற்ற மனப்பான்மையோடு இருப்பது

*முக்கியமாக தைரியம் என்றால் அடங்கி போன அம்மாக்களுக்கும், தன பெண்ணை சூப்பரா வளர்க்க வேணும் என்ற அப்பாக்களுக்கும் இருக்கும் ஒரு தவறான ??? கண்ணோட்டம்.

, ஒரு ஆன் போன்று ட்ரஸ் செய்வது வீறு கொண்டு நடப்பது, தனியே எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் போக வைக்கும் அசட்டு தைரியம். படிப்பில் விடாப் பிடியாக படித்து முன்னேறி நிறைய சம்பளம் வாங்கி தான் சாதித்து விட்டோம் என்று ஒரு குறிப்பிட்ட காலம் வரை நெஞ்சு நிமிர்த்தி செல்வது, அதுவே காலா வெடிங் செய்து ஒரே காதல் மழை கணவருடன் செய்து சிறிதே காலத்தில் மூஞ்சியை திருப்பி கொண்டு இவனெல்லாம் மனுசனா என்று புலம்பி தள்ளுவது, என் குழந்தையை எப்படி வளர்க்கிறேன் பார் என்று அதற்கும் எல்லாவற்றை பற்றியும் எஹிர் மறை எண்ணங்களை விதைப்பது !----- இதுக்கு பேரு தைரியம் இல்லைங்க கண்டிப்பாக என் கோணத்தில் இது ஒரு அசட்டு துணிச்சல் தான்.

இன்னும் ஏராளம் இருக்கு நடுவரே

இதில் நமக்கு நல்ல கணவர் வாய்த்தாலும், ஒரு பெண் பிள்ளை பிறந்தவுடன் ஐயோ நல்ல புருஷன் கிடைக்கணுமே என்று எங்க தொடங்கும் மனது .

இதெல்லாம் பெண்ணின் மனதில் அவ்வபோது தோன்றி மறையும் எண்ணங்கள் !

எப்போது குழப்பம் ஏற்பட்டாலும் நம் உறவு முறைகளிடம் சொல்லி ,(பொறுத்து போம்மா ) எல்லாம் செரியாயிடும் என்ற எத்தகைய கொடிய பிரச்சினையாயிருந்தாலும் கிடைக்கும் ஒரு டீ பாலட் ஆன்சர்.

இது எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் என்ன.?

படிக்கும் பெண்ணாகிய உங்களுக்கும், எழுதும் பெண்ணாகிய எனக்கும் இதுவரை எந்த வித பெருத்த பாதிப்பும் உடளவில் வேறு ஆண் மகனிடமிருந்து ஏற்படாதவரை எல்லாமே ஒகே!
ஆனால் பிரச்சினையை சந்தித்தவர்கள் (விநோதிநியோ அல்லது நிற்பயாவோ ) ஒரு வேளை உயிரோடிருந்தால் கண்டிப்பாக மனதளவில் மிகவும் பாதிப்புகுள்ளகியிருப்பர்கள்.

நிற்பயா கடைசி வரை தைரியத்தை இழக்கவில்லை என்பது மிகப்பெரிய ஆறுதல் :

இத்தனை குழப்பத்திற்கும் என்ன காரணம்? பெண் தன்னை பற்றியும் , தேவையற்ற பயங்கள் பற்றியும் அறியவில்லை என்பதே.

இதில் பெண் என்பவள் கிராமத்து பெண்ணும், ஐ டி வேலை செய்யும் பெண்ணும் ஒரு புள்ளியில் தான் இருக்கிறார்கள் . படித்தவள், நாகரீகம் தெரிந்தவள், தன்னை பிரசன்ட் பண்ண தெரிந்தவள் ----இவளுக்கும், கிராமத்தில் க்ரூம் செய்யப்படாத பெண்ணுக்கும் இருக்கும் ஒற்றுமை---- அறியாமை என்பதே. எது புனிதம். எதற்கு நாம் படிக்கிறோம், கல்யாணம் என்பது என்ன. ( ஒரு ஆராய்ச்சியாளர் சொன்னது மரேஜ் இச் லைசென்ஸ்ட் செக்ஸ் ) என்பதே.

கல்யாணம் என்பது புல்லை குட்டி பெற்று, நம் வாழ்க்கையின் தனி மனித சொத்துக்களை பெருக்க என்பதே நிறைய பெண்களின் கனவாக இருக்கு: ஐ ஆம் சாரி நகர்புற பெரும்பான்மையான பெண்களுக்கு ஒரு ஆடம்பர வாழ்க்கையின் பின் தான் புல்லை குட்டி எல்லாம். சில கோட்பாடுகள் புரிவதே இல்லை.

ஒருவன் நம்மை தகாத நோக்கில் நெருங்க வரும் பொது மட்டும் தைரியமா இருக்கவேண்டும் என்று சொல்ல வில்லை , அதுவும் தேவை ஆனால் நம்மை காதல் வார்த்தைகளால் மயக்கும் ஆண்களிடமும் , கணவர் என்ற பேரில் ப்ளாக் மெயில் செய்து நம்மை வாட்டி வதைக்கும் தருணங்களில் இருந்து தைரியமாக விடு படவும் துணிச்சல் வேண்டும்.

இக்கால பெண்களுக்கும் அம்மாக்களும் கற்றுக்கொள்ள வேண்டியவை, பாசத்தை மீறி , பிரச்சினைகள் வந்தால் எவ்வாறு கையாள்வது என்பது தான்.
நடை உடை பாவனை என்றால் அதற்கு ஏதாவது இலக்கணங்கள் உள்ளதா, என் அம்மாவுக்கு அடக்கமாக தோன்றும் உடை உங்கள் அம்மாவுக்கு ஆபாசமாக தோன்றலாமே!

யாருக்கு , அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு ஏதாவது நேர்ந்தால் உச் கொட்டி விட்டு அடுத்த வேளை மசால் தோசைக்கு ரெடி செய்யும் நாம், இதே நம் வீடு ஆண் மகன் ஒரு வேளை அந்த ஆசிட் ஊற்றியிருந்தால் என்ன செய்வோம்.?!

நிற்பயாவின் உடலை ருசித்த புல்லுரிவகளின் குடும்பங்களில் உள்ள பெண்களும் !??
இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா ?
எப்படி அவர்களுக்கு வாதாட வக்கில் வைத்துள்ளார்கள்??:-(((( . தட்டி கேட்கும் துணிச்சல், நம் மருமகளுக்கு மகனால் அல்லது பிள்ளையால் வேறொரு பெண்ணுக்கு வந்தாலும்- இருக்க வேண்டும்,
வீர வசனங்கள் அப்போதும் எழ வேண்டும் .

பெண்களின் அடிமனத்திலேயே ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது. அது ஓடி போக தைரிய மனப்பன்ம்மை வீடு கட்டி குடியேற வேண்டும். வீடு கட்ட சில மாதங்கள் ஆகலாம். ஆனால் நிலையானதா இருக்கணும்.

இப்போதைக்கும் ஒரு ஹால்ட் விட்டுட்டு மீதி தோணியதை பின்பு வந்து சொல்றேன்.
இந்தாங்க
படிச்சாச்சா இந்த
பில்டர் காபியை குடிச்சுடுங்க.!

hai frds,sila pengal kelvigaluku pathil illama irukanga,plz ungaluku avanga kekura kelvigaluku pathil therunja plz ans panuga pa.plzzzzzzzzz.

நடுவருக்கு வணக்கம்.
பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்குள்ளாக 'முக்கிய' காரணம் பெண்களின் தட்டிக்கேட்கும் தைய்ரியமின்மையே!

சென்னை போன்ற மாநகரத்திலேயே ஒரு பெண் பொது போக்குவரத்தை பயன்படுத்துகிறாள் என்று வைத்துக் கொள்வோம், தினம் தினம் அவள் சந்திக்கும் பிரச்சனை எத்தனை எத்தனை? ஈவ் டீசிங் துவங்கி எத்தனையோ பிரச்சனைகள்....
சரி பேருந்தில் நெரிசலை பயன்படுத்தி ஒருவன் அவளிடம் தவறாக நடக்க முயலுகிறான் என்று வைத்துக் கொள்வோம், அவளால் உடனேயே தைரியமாக தட்டிக் கேட்க முடியுமா? அந்த ஒரு சில வினாடிகள் அவள் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன! இந்த பிரச்சனை இன்றோடு முடியாது, தினமும் அவள் காலையும் மாலையும் இது போன்ற பேருந்தை தான் பயன்படுத்தி ஆக வேண்டும். தனியாக தான் வீட்டில் இருந்து வந்து போக வேண்டும்....

சரி அவள் தைரியமாக கேட்கிறாள் என்றே வைத்துக் கொள்வோம். அந்த விஷயம் அவள் வீட்டை எட்டும் போது பாராட்டி பட்டம் தருவார்கள் என்கிறீர்களா? வீடு என்று இல்லை பொதுவாக பேருந்தில் உடன் பயணம் செய்பவர்களையே எடுத்துக் கொள்ளுங்கள் என்ன சொல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

தவறு என்று தெரிகிறது, ஆனால் தட்டி கேட்க ஏன் தயக்கம்? பயம்... !!!

இந்த தயக்கத்திற்கு பயத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன.... சினிமாவில் வரும் சிகப்பு மனிதன் / அந்நியன் / இந்தியன் போல் யாரேனும் இருந்தால் பயம் இருக்குமா? நம் சட்டங்கள் இது போன்றவற்றை சரியான முறையில் தட்டி கேட்கும் என்றால் பயம் இருக்குமா? இந்த சமுதாயம் பாதிக்கப்பட்டவர்களை சரியான முறையில் நடத்தும் என்றாலும் பயம் இல்லை... ஆனால் இவை எதுவும் இன்றோ நாளையோ நடக்க போவதில்லை...

கலாசாரம், பண்பாடு இன்னும் எத்தனையோ எத்தனையோ பெயர்களில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் நடந்துக் கொள்ள வேண்டிய விதங்கள் pre-define செய்து வைக்க பட்டிருக்கின்றன. இந்த வட்டத்தை தாண்டி வரலாம் சிலர் வரவும் செய்கின்றனர் ஆனால் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்களால் அது இயலாத விஷயம்..

இந்த பலவீனத்தை ஆண்களில் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதனால் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன.

அது தான் எத்தனையோ பழமொழிகள் / பொன் மொழிகள் வைத்திருக்கிறார்களே... முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் விழுந்தாலும்..... bla blah!

ஏன் இதையே பாரங்கல்லில் முள் விழுந்தாலும் முள்ளில் கல் விழுந்தாலும் நசுங்கி காணாமல்'போவது முள் தான் என்று சொல்ல வில்லை?
பெண்களை பலவீனமாக காட்ட தான் வேறு என்ன?

சமீபத்தில் நம் நாட்டின் தலை நகரத்தில் நடத்த பட்ட ஆய்வின் படி, கடந்த ஒரு சில மாதங்களில், வேலைக்கு செல்லும் மூன்றில் ஒரு பெண் இருட்டும் முன் வீடு திரும்ப தன் வேலை நேரத்தை குறைத்துக் கொண்டிருக்கிறாள் அல்லது வேலையையே விட்டு இருக்கிறாள். கடந்த சில மாதங்களில் மட்டும் டெல்லியில் அலுவலகங்களில் பணி புரியும் பெண்களின் உற்பத்தி திறன் (productivity) நாற்பது சதவிகிதம் குறைந்திருக்கிறது!

இதற்க்கு பின் இருக்கும் காரணம் என்ன? திடீரென பெண்கள் விழித்துக் கொண்டு ஆண்கள் தங்களை போக பொருட்களாக பார்க்கிறார்கள என்று புரிந்துக் கொண்டதாலா? இல்லை.... பயம்...!

பெண்களுக்கு எதிராக நடக்க படும் பெரும்பாலான சம்பவங்கள் குடும்ப கவுரவம், சமுதாயம் என்ற பல்வேறு காரணங்களுக்காக வெளியில் தெரிவதே இல்லை. அப்படியே வெளியில் தெரியும் விஷயங்களும் கோர்ட்டில் பென்டிங்கில் தான் இருக்கின்றன!!!

கொஞ்சம் பழைய ஸ்டாட்டிஸ்டிக்ஸ்... பெரிய சம்பவங்கள் என்றில்லாமல் பயணத்தின் போது ஏற்பட்ட தொந்தரவுகளை பற்றி நம் நாட்டில் ஒரு நகரில் பதிவான வழக்குகள் 41. அதில் மூன்று வழக்குகள் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்க்க பட்டுவிட்டன. நீதிமன்றம் ஒரு வழக்கை தள்ளுபடி செய்தது, ஒருவரை நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியது, மற்ற ஒரு வழக்கில் குற்றம் சாட்ட பட்டவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது. மற்ற 33 வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன... மூன்று வழக்குகள் இன்னமும் விசாரணை நிலையில் உள்ளன!!!!

சின்ன சம்பவம் பெரிய சம்பவம் என்றெல்லாம் தரம் பிரித்து பார்க்க முடியாது / கூடாது தான்... ஆனால் சிறு சம்பவங்களின் நிலையே இப்படி என்றால் மற்றவற்றை எண்ணி பார்க்கவே பயமாக இருக்கிறது!

பெண்களுக்கு சமுகத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டு கோப்புகளை தாண்டி வருவதே கடினம்... அப்படி வந்தாலும் குடும்பம், சமூகம், பின், காவல் நிலையம், நீதி மன்றம் என்று எங்கேயும் அலைகழிக்க தான் பட போகிறோம் எனும் போது, ஒரு தவறை தட்டி கேட்க தைரியம் எங்கிருந்து வரும்????

இதை பெண்கள் மட்டும் அல்லாது ஆண்களும் அறிந்துக் கொண்டிருப்பதால் தான் இந்த பிரச்சனையே....

2010 வரை நம் நாட்டில் மொத்தம் இருக்கும் பெண்கள் காவல் நிலையங்கள் 420. நம் நாட்டின் மக்கள் தொகை பற்றி சொல்ல வேண்டாம் தானே? இதில் எங்கே இருந்து தைரியம் வரும்?

சரி அப்படியே பெண் காவலரிடம் சொன்னாலும் எத்தனை பேர் வைஜெயந்தி ஐ பி எஸ் ரேஞ்சிற்கு உதவ வர போகிறார்கள்!!! இதே இதே மனநிலை தான் பெரும்பாலான பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு காரணம்!!!

:-(

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அன்பு நடுவரே,

டிபன் சாப்ட்டீங்களா , தெம்பா படிங்க

எதிரணியை எங்கே காணோம்?????!!!. சேர்த்து வெச்சு அடிபின்ன போராய் ங்களோ ? அப்படின்னு ஒரு பயம் இருக்க தான் செய்யுது (அதெல்லாம் வெளியில சொல்ல மாட்டோம்:-((( நீங்களும் இதை யாரிடமும் சொல்லிராதீங்க>

லெப்ட் ரைட் கட் பண்ணாம விஷயத்துக்கு வரேன்.

பெண் என்பவள் எப்படி வளர்க்க படுகிராள் ?

நல்லா வீட்டு வேலை செய்யணும் போற இடத்துல நல்ல பேரு வாங்கணும்.
கொஞ்சம் (சில இடங்களில் நிறைய ) விட்டு கொடுத்து போகணும்.
எதிர்த்து பேச கூடாது.
சமையல் பண்ண கத்துக்கணும். சடங்கு சம்பிரதாயங்களை ஏன் என்று கேட்காமல் கடை பிடிக்கணும்.

தனக்கு விருப்பம் என்ற ஒன்று இருக்கா இல்லையா என்று யோசிக்கவே கூடாது.
புருஷனோடு இருந்தால் மட்டுமே சமூகத்தில் மதிப்பு. ( இது நல்ல கணவருக்கு மட்டுமல்ல, குடி வெறியனா இருந்தாலும், பொம்பளை பொறுக்கியா இருந்தாலும்,இல்லை புள்ளை பெற்று கொடுக்கும் மெஷினா இருக்க வைக்கும் ஆணிடமும் , ஒரே போல தான். )

கல்யாண சந்தோஷத்தில் ஒரு குழந்தையை பெற்றுகொள்வதால் , அதன் பொறுப்பு முழுதும் பெண் தலியிலேயே விழுகிறது. அவ்ளோ தான் இனி நீ பழைய பண்டம் என்ற ரேஞ்சில் ஊரார், வீட்டார் எல்லாரும் பார்க்கும் ஒரு கேடு கெட்ட சமுதாயம்.
இதில் சமுதாயம் என்று சொல்வதில் பெண்களை மதிக்கும் நீங்களோ , நானோ அல்லது சில ஆண் மகன்களையோ சேர்க்கவில்லை ஏனென்றால் இவங்க எல்லாம் செர்தின்னா கூட 1% வராது, இந்திய சமூகத்தில், (பீகார் என்றாலும் பாப்பாரபட்டி என்றாலும் மக்கள் மனதில் பெண் இன்றும் ஒரு போக பொருள் தான் _____ என்னடா கட்சி மாறிட்டேன்னு பார்க்கறீங்களா < நோ நெவர் யுவர் ஆனர்

பெண்ணை போக பொருளாக முன்னிலை படுத்த்வதில் முக்கிய பங்கு பெண்களுக்கே , அதனாலே , அந்த கட்சியில் நான் இல்லை .

பூபடைந்ததும் பெண்ணை அலங்காரம் செய்து வயதுக்கு மீறிய கிளர்ச்சியை உண்டு பண்ணுவது யார். ? என் பெண்ணுக்கு அது தேவையில்லை என்று ஏன் பெண்ணை பெற்ற அம்மக்கள் சொல்வதில்லை, நான் வாழும் இந்த நகர் புறத்தில் கலயான மண்டபம் எடுத்து பேனர் வைத்து மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தும் போதும். அய்யகோ

பெண்களே, உங்களுக்கு புத்தியே வராதா ??? பின்பு உங்களுக்கு ஏதாவது கொடுமை நேர்ந்தால் கத்தி கூப்பாடு போட்டு என்ன பிரயோஜனம் , சிங்கத்தின் தலை என்று தெரிந்தும் வாயில் தலை நுழைத்த கதை தான் .

சோ இதில் என்ன தைரியம் வேண்டும் நம் தலிமுரையில் நாம் கொண்ட கோலங்கள், அடுத்த தலைமுறைக்கு கண்டிப்பாக அனுமதிக்க கூடத்து, இதற்கு உறவு முறைகளிடம் எதிர்ப்பு வந்தால், பெண் வாழ்க்கை பெரித, சுற்றம் பெரிதா என்று எண்ணி பார்க்க வேண்டும். இதை யோசிப்பதே தைரியம் தான்.

ஐயோ யார் என்ன பேசுவாங்களோ, நம்ம கொவரதை என்னவகுறது என்று நினைச்சிங்கன்னா, நீங்க இந்த ஆண்களை பற்றி புலம்புவதை தவிர வேற ஒன்னும் கிழிக்க போவதில்ல.

இதே ஒரு ஆன் எவ்வாறு வளர்க்க படுகிறான் ??

நல்லா படி , தைரியமா வீரமா இரு.
அடங்கி போகாத நீ ஆன் பிள்ளை.
கட்டிகிட போறவளை எங்களை மதிக்க சொல்லு. எங்களை மீறி அவ எதுவும் செய்திரா வண்ணம் பார்த்துக்கோ.
எப்படி இருந்தாலும் ஊர் அவளை தான் குத்தம் சொல்லும், நீ தகுதியற்றவனா இருந்தாலும் அதை வெளியில் காண்பிக்காதே, உடல் இச்சையை தீர்த்தாலும், அவளுக்கு தான் பாதிப்பு.
அதனால் இஷ்டம் போல இருக்கலாம். கொஞ்ச காலம் தாடி வைத்து திரிந்து விட்டு அப்புறம், உடல் பசியை போக்க இன்னொரு பெண் பார்க்கலாம்.

நீ பண்ணும் கொடுமை தாங்காமல் அவள் தனியே போனாலும், அவள் நடத்தை சரியில்லை என்று சொன்னால் அவளை விழா நாட்களில் அழைக்க இந்த ஊர் என்ற கேடு கெட்ட சமுதாயம் அவளை புறக்கனுக்கும். நீ சந்துல சிந்து பாடிட்டே வாழ்க்கையை ஓட்டிரலாம்.

இதெலாம் நேரடியாய் பெற்றவர்கள் சொல்லாமல், மறைமுகமாய் ஆதரவு தருவது.
இதிலும் ஆண்களை மட்டும் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் பெற்றவரில் பெண்ணும் அடக்கம் தானே.

அப்போ தைரியம் என்பது தட்டி கேட்கும் அல்லது, தவறுக்கு ஒத்துழையாமை, ( இதற்கு தான் என்ற அகந்தை--- திமிர் பிடித்தவள் என்ற பட்ட பெயர் புழக்கத்தில் உள்ளது ) சமூக கட்டமைப்பான குடும்ப அமைப்பை மீறுவது சில சூழ்நிலைகளால் எனும் போதும், ஒரு பெண்ணுக்கு ஆதரவு இன்னொரு பெண்ணிடமிருந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.

சீண்டும் ஆண்களை தட்டி கேட்டு தன சுயத்தோடு வாழு பெண்கள் இல்லாத சமுதாயம் இல்லை இது. நிறைய பேர் உள்ளார்கள், ஆனால் நமக்கு அவர்களை தெரிவதில்லை, இல்லை தெரியாதது போல நடிக்கிறோம், ஏனென்றால் விழாக்கள் சடங்குகள் போன்ற போலியான சந்தோஷத்தில் முகம் தொலைத்தவர்கள் நாம் .

ஒரு வேலை நமக்கு அல்லது நம் பெண் பிள்ளைக்கு எனும் போது வரும் பாருங்க ஒரு எதிர்க்கும் துணிச்சல் அது தாங்க இந்த கேள்விக்கு ஒரு பதில், மிருகமாகும் ஆண்களை பயம் கொள்ள செய்யும் ஒரு கண் தெரியா ஆயுதம்.

குடி போதையில் ரகளை செய்யும் ஆண்களை அடித்து துரத்திய கிராம பெண்டிர் நமக்குமுன்னுதாரணம் தான்.

இதோ போன வாரம், தினம் குடிக்கும் ஒரு ஆன் மகனை, மனைவி கட்டிலோடு கட்டி போட்டாளே , வட மாநிலத்தில்- அந்த துணிச்சல், படித்த மேல் தட்டு வர்க்க பெண்களிடம் வந்தால் போதுமானது.

போன வருடம் நானும் என் தோழியும் ஆட்டோ பிடிக்க ட்ராபிக்கான ஒரு இடத்தில் நின்ற பொது,ஒரு போலீஸ் ஆண் ??? வேண்டும் என்றே, எங்களை சீண்டி பார்த்து எல்லா ஆட்டோவையும் < ஏய் இங்க நிறுத்தாத ^ என்று எங்கள் பின்னாலேயே வந்து வம்பாய் ஒரு ஆட்டோவையும் பிடிக்க விடவில்லை.

சிறிது தூரம் நடந்த நாங்க ," ஹலோ போலீஸ் உங்க பேரு என்ன என்று சவுண்ட் கொடுத்து, பப்ளிக் சர்வன்ட் தானே நீங்க, கம்பல்யின் பண்றோம், வேணும்னே ஒரு பப்ளிக் கிட்டே வம்பு பண்றீங்களா ? என்று வாயசை ரைஸ் பண்ண காணாமலே போனான்.

இதில் தனியே இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நீங்கள் கேட்கலாம், அப்பவும் ஒரு சவுண்ட் கொடுத்து, இப்போ செல்போன் இருக்கு --போனில் பேசினாலே போதும் .

ஏனென்றாலே, இவர்களெல்லாம் நிஜத்தில் கோழைகள், சீண்டி பார்ப்போம், படியுதா என்று அலையும் ராட்சசர்கள் . முகத்தில் பய ரேகைகள் ஓடினால், கையை பிடித்து வாங்க மிஸ் நான் ஆட்டோ பிடிச்சு விடறேன் என்று சில்மிஷம் செய்யும் அரக்கர்கள் , இவர்களை எதிர்க்க கண்டிப்பாக தைரியம் வேண்டும் , அதை வளர்த்து கொள்ள நாம் எல்லாரும் முடிவு எடுக்க வேண்டும். ஈவ் டீசிங் பற்றி பெண்களுக்கு மட்டும் இல்லை பையன்களுக்கு கிளாஸ் எடுக்க வேண்டும்

இப்போதைக்கு பை

ஊப்ஸ் பேரை லீமான்னு போனபதிவில் தவறா எழுதினதுக்கு சாரிபா :-(

//நான் கல்லூரியில் படித்த போது நடந்தது அது இருபாலர் படிக்கும் கல்லூரி என் தோழியை ஒருவன் கிண்டல் செய்தான் பதிலுக்கு இவள் திட்டிவிட்டாள் அது அவனுக்கு ஈகோ வாகி அடுத்த நாள் அவன் நண்பர்களுடன் சேர்ந்து இவளை கேலி செஇது துப்பட்டாவை ப்டித்து இழுத்து விட்டான் முதல்வரிடம் புகார் செய்தால் அந்த் படித்த மேதை நீ ஏன் அவ்னை திட்டினாய் அதான் பிரச்சினைக்கு காரணம் என்றார் மேலும் பெற்றோரைக் கூப்பிட்டு அட்வைஸ் வேறு உங்க மகளை அடக்கி வைங்க இப்படி இருந்த எப்படி தைரியம் வரும் நடுவரே //....உங்க கல்லூரியிலும் இதே மாதிரி நடந்ததா..ம்ஹும் இதே மாதிரி எங்க கல்லூரியிலும் நடந்து இருக்குங்க...என்ன சொல்ல யாரை கண்டிக்கனுமோ அவங்களை விட்டுட்டு இப்படி பொண்ணுங்களை பாத்து அனுசரிச்சு போ, அனுசரிச்சு போன்னு சொல்லும்போது இந்த அனுசரனைங்கற வார்த்தைய கண்டுபிடிச்சவங்கள பாத்து நாலு அப்பு அப்பனும்போல இருக்குங்க :-(

Don't Worry Be Happy.

//ஆசிட் இருந்தாதானே முகத்தில வீசுறாங்கனு கேக்கலாம், அப்ப அதைய நிறுத்திபுடுங்க..
பொண்ணுங்க செண்ட் அடிச்சிசா ஆணுக்கு மனசுல சபலம் ஏற்படும் அதுனால, தினமும் வேப்பெண்ணைய தலைக்கு தேய்ச்சிட்டு, விளக்கெண்ய்ல மூஞ்சி கழுவிக்கலாம்..
கண்ணுக்கு மட்டும் கண்மை வெக்கிறதால எதிர்பாலினத்தை சபலம் கொள்ளச்செயூம் அதுனால கண்ண விட்டுட்டு முகம் பூரா மைய அப்பிக்கலாம்....
தீக்குச்சி இருந்தா ஆபத்து பொண்ணுங்களை சீரழித்துவிட்டு எரிச்சுடுவாங்க..அதுனால தீக்குச்சி தயாரிப்பையே நிறுத்திபுடலாம்..சிக்கிமுக்கி கல்லு பயன் படுத்தலாம், ஆனா பாருங்க நடுவரே அதுலயும் ஆப்த்து இருக்கு கல்லெடுத்து அடிச்சு கொல்லகூட தயங்க மாட்டாங்க ...அதுனால எந்த வகை கல்லுமே இருக்கக்கூடாது, கல்ல பூராவும் பொறுக்கி கொண்டுபோய் கடல்ல கொட்டிடுலாம்..:( //.........ரொம்ப கோவமா இருக்கீங்க அருள் காம்டவுன் காம்டவுன்..அருள்., நீங்க சொல்றதும் சரிதான் சில ஆண்கள் செய்யும் இப்படிப்பட்ட மட்டகரமான செயல்களுக்கு காரணமா டாஸ்மார்க்கையும், சினிமாவையும் , பெண்களின் உடைகளையும் சொல்லும்போது இப்படிதான் சொல்லத்தோணும் .

// பெண்கள் ரயில் நிலையங்கலிலும், பஸ்நிலையங்கலிலும் தங்கள் பச்சை குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் தவிக்கின்றனர் தெரியுமா நடுவரே??//....பொதுக்கழிப்பிடம் கட்டும் அரசாங்கம் பெண்கள் பெரும்பாலும் பேருந்தில் கூட்ட நெரிசலோடு பயணம் செய்யும் நம்ம நாட்டுல இதுக்கும் வழிவகை செய்தா நல்லா இருக்கும் .

நீங்க இங்கே சொன்ன பல செய்திகள் மிகவும் வேதனைதரக்கூடயதா இருக்கு., படிக்கும் எனக்கே இப்படி என்றால் இந்தக் கொடுமையை அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும்:-(

இதெல்லாம் காரணம் இல்லைன்னு வாதாட தயரான்னு எதிரணியப்பாத்து கேட்க வேண்டிய சூழ்நிலை :-( பட்டி என்பதால் வேறு வழியில்லை கேட்டுதானே ஆகவேண்டும் இல்லையா..

Don't Worry Be Happy.

வணக்கம், வணக்கம் உங்களுக்கும் என் அன்பான வணக்கங்களும் வாழ்த்துக்களும் :-)

//பாரதியார் சொல்வது போல - ‘பேசாப் பொருளையும் பேசத் துணிந்தேன்” நடுவரே.//...அப்படி ஆக்கிட்டாங்க :-( அட்லீஸ்ட் நம்ம பசங்க வளரும்போதாவது இதெல்லாம் பாக்காம கேட்காம இருக்கனும்:-(

//உடை மட்டும் காரணமா? இல்லையே. பஸ்ஸில் போறப்ப, கிராமங்களைக் கடக்கும்போது, ஆற்றில் குளிச்சுட்டு, ஒரு முந்தானையை உடலைச் சுற்றிக் கட்டி, இன்னொரு முந்தியை மரத்தில் கட்டி, ஈரத் தலையை ஆற்றிக் கொண்டிருக்கும் பெண்மணியைப் பார்த்திருப்பீங்க.

பாதி குளிச்சுட்டு, அப்படியே வந்த மாதிரி, ட்யூப் ட்ரெஸ் போட்டிருக்கும் பெண்களின் படங்களையும் பார்த்திருப்பீங்க.

இரண்டு இடங்களிலும் அவங்க நோக்கம் என்ன? ஒன்று - டெய்லி ரொடீன். அந்தப் பக்கம் போகும் எந்த ஆணையும் அந்தக் காட்சி பாதிக்காது.

ஆனா, இந்த ட்யூப் ட்ரெஸ் போட்ட படங்கள் - முற்றும் துறந்த முனிவனையும் - என்னைப் பார் என் அழகைப் பார் என்று சொல்லாமல் சொல்லி, எக்ஸ்போஸ் பண்ணுவதுதானே.//..ஹெட்ஸ் ஆஃப் சீதாம்மா.... உடை மட்டுமே காரணமாகாது அந்த உடையை உடுத்தும் உள்நோக்கமே இப்படிபட்ட குற்றங்களுக்கு காரணம்னு இதவிட அழகா யாரால எடுத்து சொல்ல முடியும்.

//எல்லா நாட்டு சட்ட திட்டங்களிலும் - இதற்கு மேல் குறைத்தால் அது சட்டப்படி குற்றம் என்று இருப்பதால் - போனால் போகிறது என்று மறைக்க வேண்டிய இடங்களை மட்டும் மறைக்கிறாங்க - அப்படித்தானே.//....அழகுன்னா எதுன்னு தெரியாத இப்படிபட்ட பெண்கள் செய்யற வேலை இது ., அப்புறமா இப்படி ஆயிருச்சு அப்படி ஆயிருச்சுன்னு சொல்லி போராட்டம் பண்ணி எல்லாரோட கவனைத்தையும் திருப்பி ஃபேமஸ் ஆகவேண்டியது:-(

//எப்பவும் போல இப்பவும் ஒரு விஷயம் திரும்பவும் சொல்றேன். இங்க பட்டியில் நான் பங்கெடுத்துகிட்டாலும் சரி, பார்வையாளராக இருந்தாலும் சரி, இங்க சொல்லப்படும் கருத்துக்களை மைண்ட்ல வச்சிட்டுதான் இருக்கேன் நடுவரே.(மைண்ட்ல வைச்சிக்கிறேன் வசனத்தை - காதல் படத்துல வரும் டைரக்டர் சொல்ற வாய்ஸ்ல படிச்சுக்குங்க நடுவரே)//....என்னடா ஒருத்தருமே இந்தபட்டியில் நடுவர மிரட்டலையேன்னு நினைச்சேன்...மைண்ட்ல வைச்சிக்குவேன்னு ஒத்த வார்த்தய சொல்லி இப்படி பயமுறுத்திட்டீங்களே அவ்வ்வ்வ்வ் :-(

//நடுவரே, உங்களுக்கு நினைவிருக்கும்னு நினைக்கிறேன். ஆண்கள் ராமனா, ராவணனா என்ற தலைப்பில் நீங்க பேசியிருந்த விஷயம் என் மனசில் அப்படியே பதிஞ்சிருக்கு//...தேங்க்ஸ் சீதாம்மா .. என்னபண்ண இப்படி பட்ட விசயங்கள் இங்கே நடக்காதுன்னு தையிரியமா இருந்தப்ப அதெல்லாம் தப்புன்னு இங்கே நடந்த பல குற்றங்கள் என்னை அப்படி பேசவைச்சது .

//என்ன ஒன்று - எங்கேயோ ஒரு பெண்ணால், உள்ளிருக்கும் மிருகத்துக்கு அடிமையான ஆண், வேறொரு அப்பாவிப் பெண்ணை, பலிகடா ஆக்கி விடுகிறான்.//...வேற யார்கிட்டயோ வால ஆட்ட முடியாம சுருட்டி வைச்சிருக்கரவ அப்பாவியா மாட்டர பொண்ணுக்கிட்ட கைவரிசையக் காட்டறான்..ச்சே

//சினிமா நடிகையையும் மாடல் பெண்ணையும் குறைந்த உடை, அங்க அசைவுகளுடன் பார்க்கிற ஆணால், அந்தப் பெண்களுக்கு நேரடியாக எந்தப் பாதிப்பும் இல்லை. அவங்க பாதுகாப்பா இருப்பாங்க. ஆனால், வேறெங்கோ இதே பாதிப்பில், நினைப்பில் தன்னுடைய பாதுகாப்பை கவனத்தில் கொள்ளத் தவறிய பெண், பாவம் உயிரையும் இழக்கிறாள். தாங்க முடியல நடுவரே.//...என்னாலயும் தாங்க முடியலை சீதாம்மா ..என்னிக்கு இதையெல்லாம் நம்ம பொண்ணுங்க புரிஞ்சுக்க போறாங்களோ அன்னிக்குதான் விடிவு காலம்..

நடை உடை பாவனை இதனாலதான் பொதுஇடங்களில் இப்படி பட்ட குற்றங்கள் நிகழ காரணம்னு கரக்ட்டா பொது இடம் என்று பட்டி தலைப்பில் சொன்னதை மனசுல வைச்சு தன் பக்கம் இருக்கும் நியாயத்தை புட்டு புட்டு வைச்சிட்டாங்க.. இதே போல் எதிரணியினரும் பொது இடத்தில் நடக்கும் இப்படிபட்ட குற்றங்களை முன்னிருத்தி பேசனும்னு கேட்டுக்கறேன் :-)

Don't Worry Be Happy.

பெண்களை ஆண்கள் சீண்டுவது அவர்களிடன் தைரியம் இல்லாததாலேயே எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை நடுவரே ! ஆண்களின் வேட்டை இப்போது மட்டும் தான் இந்த லேகின்ஸ் காலகட்டத்தில் மட்டுமே தான் நடக்கிறதா என்ன ??:-((

இந்த கணினி பயன்பாடும் , தொலைக்காட்சி பயன்பாடும் வந்த வுடன் எல்லாமே அதிகரித்துவிட்டது போன்ற ஒரு பிரமை வேண்டுமானால் இருக்கலாம் என்னை பொருத்தவரை !

அக்காலத்தில் உடைகளில் கவர்ந்து இழுக்கும் வண்ணமே இருந்தன , அதை நாம் இழுத்து போர்த்திய உடை என்று நினைக்கிறோம். உண்மையில் பல கிராமங்களில் , ஹிரிஜன மக்களுக்கு (பெண்களுக்கு ) மேலாடை அணிய தடை இருந்தது உங்களுக்கு தெரியுமா ?

அவர்கள் உரல் குத்துவதை பார்த்து அவர்களிடம் எத்தனையோ மேல் (male ) மக்கள்
;-(((((((தவறாக நடந்ததும் எந்த ஊடக வெளிச்சமும் இல்லாததால் அங்கேயே சுற்றித்திரிகின்றன .
போர்த்திய பெண்களை அவர்களின் இயலாமையை ( சமூக கட்டுப்பாடுகளினால் ) பயன்படுத்தி சூறையாடியவர்கள் பல பேர்.

பெண்களின் ரகசியங்கள் வெளி வராததற்கு காரணம் இது தெரிந்து போராட ஆரம்பித்தால் , தன குழந்தை மனதளவில் இந்த சமூகத்தால் உதாசீனப்டுத்தப்ட்டு பாதிப்படைவார்கள் என்பது தான்.

வலுக்கட்டயத்தினால் தன அக்காவின் கணவருக்கே மாலையிட்டது கூட ஒருவகையில் ஆண்கள் சீண்டுவது தான் . பெண்ணை உடல் ரீதியாக அவளின் விருப்பம் இன்றி தொட அவளின் தைரியமின்மை என்ற பலவீனமே காரணம்.

தற்கால பெண்கள் , நடை உடை பாவனை மாறிவிட்டால் இது போன்ற சம்பவங்கள் குறைந்து விடுமா ??? எனக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. ட்ரஸ் கோட் என்று ஒன்று இருக்குமானால் அது ஸ்கூல் யூனிபார்ம் போன்று அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

மார்கெட்டில் இவ்ளோ வெஸ்டர்ன் அவுட்பித்ஸ் விற்க யார் காரணம் அடம் பிடிக்கும் பெண்களா வாங்கி தரும் பெற்றோர்களா --இருவருமே தான் .

எப்போது ஒரு விஷயம் கொண்டாடப்படுகிறது?? , பல பேரால அங்கீகரிக்க படும்போது
இப்போ தொலைகாட்சியில் ஒரு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்க்கிறோம் என்றால் , அது பல பேரால் பாராட்ட படும் போது , ஒவ்வொரு குழந்தைக்கும் ச்சே நானும் அது போலே ஆக வேண்டும் என்று தோன்றுவது இயற்கை தானே ,.. கலாசாரம் ட்ரசிங் சென்ஸ் என்று வாய் கிழிய பேசும் பெற்றோர்கள் அல்லது மற்றோர்கள் , அந்த குழந்தைகள் உடலை எக்ஸ்போஸ் பண்ணும் சில உடைகளை போட்டு வரும்போது எங்கே போனார்கள் .????

வெட்ககேடான விஷயம் என்னவென்றால் அந்த ஆடம்பர புகழினால் பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகித்தான் இருக்கிறார்கள். வெளியில் தெரியாமல் மூடி மறைத்து பொய் சிரிப்புடன் , தன்னை எல்லா ஆணும் மதிகிறார்கள் என்ற ரேஞ்சில் நடந்து நம் குழந்தைகளுக்கு ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்துகிராரல்
( போன வாரம் பேப்பரில் சிதார் மேதை ரவிசங்கரின் பெண் தன அப்பாவின் ஸ்டூடன்ட் இனால் தான் சிறு வயதில் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டதாகவும், சில காரணங்களினால் இதை அப்போது வெளியில் பெற்றோரே சொல்ல வில்லை என்று பேட்டி கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார் .

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு பெண் பதின் பருவத்தை எட்டியவள் மேனி அழகு தெரியும் படி போட்டாலே நமக்கு கண் எரிகிறது . அன்றொருநாள் மிகவும் பிரபலமான பாடகி , தன க்ளீவேஜ் தெரிய , அதில் கூலிங் கிளாஸ் வேறு மாட்டிகொண்டு குழந்தைகளை ஜட்ஜ் பண்ண வந்துட்டாங்க. இதில் அந்த காம்பியர் பொண்ணு , அவங்க கவுன் போன்ற ட்ரஸ் ஐ பற்றி ஒரே புகழாரம்.

ரெண்டு பேர்த்தியும் விடுங்க, இதில் பார்க்கும் நம் வீட்டு பெண்ணுக்கு நாம் வேண்டாம் என்று சொன்னாலும் , ச்சே எல்லாரும் எவ்ளோ ப்யூடிபுள் என்று சொல்றாங்க , இந்த அம்மாக்கு ஏன் இது புரியலை என்று தானே தோன்றும்.

அவளுடைய கேள்விக்கு பதில் என்ன ? அவர்களுக்கு எல்லாம் பாலியல் தொல்லைகள் வராதா ? தற்கால பெண்களுக்கு தான் பார்க்கும் புகழடைந்த பெண்களே இன்ஸ்பிரேஷனா இருக்கு பொது அவர்களே இவ்வாறு இருந்தால் நாம் சொல்லும் கருத்துகள் எவ்வாறு மனதில் ஏறும்.

சோ இதிலும் கூட துணிச்சல் எதற்கு வேண்டும் . படித்து புகழடைந்தாலும் நம்மால் அடுத்தவருக்கு அருவருப்பு அடைய வைக்கும் கிளர்ச்சியூட்டும் பாகங்கள் தெரிய உடை உடுத்துவது என்றைக்காவது நமக்கு பேராபத்து நிகழ ஒரு வாசர்கால் என்று புரிய வைக்க வேண்டும்.

இது போன்ற (அட்வைஸ் என்று வேறு இழிவு படுத்துவார்கள் ) விஷயங்களை கொண்டு வர இதோ மனதை திடப்படுத்தி கொள்கிறோமே அதுக்கு பேர் தான் தைரிய மனப்பான்மை .

ஏதோ பொண்ணு கேட்டு விட்டால் என்று வாங்கி தருவதோ, இல்லை இதெல்லாம் போட்டா மானம் போயிடும் என்று திட்டுவதோ வேலைக்காகாது. அதே போல் அவ்வாறு உடை உடுத்தும் யாரையும் முதலில் நாம் அங்கீகாரம் கொடுக்க கூடாது .

அப்புறம் வரேன் மை லார்ட்

மேலும் சில பதிவுகள்