பட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன?

எனது அருமை அறுசுவைத் தங்கங்களே! சிங்கங்களே! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பட்டி ஆரம்பமாயாச்சு ...:-)

தோழி கவிசிவா அளித்த அருமையான விவாதிக்க தற்போது மிகவும் அவசியமான தலைப்பு...நமது நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும் விசயங்களைப் பற்றி பேச இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்பில் சிறிய மாற்றங்களோடு .....

**********************************************************************
பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்குள்ளாக காரணம் ..

1.பெண்களின் நடை உடை பாவனையே.,
2.பெண்களை போகப் பொருளாக பார்ப்பதாலே.,
3.பெண்களிடம் தட்டிக்கேட்கும் மனப்பான்மையின்மையே (தையிரியமின்மை)
************************************************************************

பொது இடம் என்பது பார்க், பீச், கோயில், குளம் என்பதோடு இல்லாமல் இன்றைக்கு பெண்களும் அதிகமாக பங்குகொள்ளும் பொது தளமாக இருக்கும் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தபட்டி பயங்கரமா பிச்சு உதற வசதியா நீதிமன்றக்களத்தை தேர்ந்தெடுத்தாச்சு.. தோழிகளே நீங்க கருப்பு கோட்டு போட்டு பிச்சு உதறப்போறீங்களோ இல்லை கிழிச்சு எறியப்போறீங்களோ எனக்கு தெரியாது ....நான் உங்ககிட்ட கேட்டுக்கறது ஒன்னே ஒன்னுதான்.. வேற என்ன ?? அறுசுவை விதிகளையும், பட்டியின் விதிகளையும் மீறாமல் உங்கள் வாதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

பட்டி விதிமுறைகள்:
யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்

//ஆனால் சொல்லிக் கொடுப்பது எல்லாம் சிறிய பசங்களுக்கு வேணா ஒத்துப் போகும். என் வீட்டில் 5 வயது சிறுவன் இருக்கிறான் என்றால், நானும் பெண்ணை மதிக்க கத்து கொடுக்கிறேன்..எதிரணி தோழிகள் சொல்வதை போலவே.. ஆமோதிக்கிறேன்..ஆனால் இன்று வளர்ந்த ஆசாமிகளின் மனதை எப்படி மாற்றுவது?//...நானும் இதேதாங்க நினைச்சேன் ..இப்படி ஐஞ்சு வயசு குழந்தைக்கு சொல்லி அவன வளர்த்து அப்புறம் குற்றம் ஆகாம தடுத்து ..ம்ம்ம் அப்போ இருபது வருசம் இப்படியேதான் இருக்கப்போறாமா?? நல்லா கேளுங்க உங்க எதிரணியப்பாத்து..உங்ககூட சேர்ந்து நானும் கேக்கறேன் :-)

//பெண் என்பவள் இவள் தான் ,புரிந்துக் கொள் மானிடா என அவர்களின் மன கண்ணை திறக்க போகிறோமா?

இல்லை அவனுக்கு அவன் செய்த தவறை உணர வைத்து, நீ இப்ப ரொம்ப நல்லவனாயிட்டா ராஜா, இனி பெண்களை மதி என விட போகிறோமா?//..ஹிப்னாடிக்ஸ் பண்ணுவங்களே அதுமாதிரி இல்லையா..அப்போ அடுத்த ஜெனரேசனுக்கு நல்லா காசு சம்பாரிக்க ஒரு தொழில் வந்துருச்சுடா சாமி :-)

//அதற்காக 99 பேர்கள் போக பொருளாய் பார்க்காமல் நாங்க சொன்னதை போல இருக்கிறார்கள் அது தான் பிரச்சனை இல்லை என சொல்ல கூடாது... ஒருவன் செய்யும் தவறு தானே எல்லாரையும் கஷ்டபடுத்துகிறது.. //..ஒருத்தனுக்கு மட்டும் வரும் பன்னிக்காய்ச்சலுக்கு மட்டும் நமக்கும் வந்துருமோ நமக்கும் வந்துருமோன்னு என்ன பாடுபடறாங்க இதைமட்டும் கண்டுக்காம எப்படியா இருக்கத்தோணுது :-(

//அது இல்லை எனும் போது, உங்கக்கு ஆரோக்கியமான எண்ணம் இல்லையே என அவனிடம் பேசுவதும், அவனை நல்லவனாக மாற்ற முயல்வது சரியா? //..இது ஆண்களுக்காக அவங்க ஏற்படுத்திக்கிட்ட ஒன்னு மன்னிச்சு ஏத்துக்க திருத்தி வாழுன்னு ..

// ஒரு தவறு செய்ய நினைக்கும் போது, பாரதி கண்ட புதுமை பெண்ணாக , மன உறுதி கொண்டு தட்டி கேட்பது சரியா?//...........இதாங்க சரி அடி உதை உதவற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் .

//உன் பிள்ளையை பார்த்து வளர்த்து.. இப்படி ட்ரஸ் போடுவது நம் உரிமை மகளே என சொல்லாமல், கண்ணியமாய் உடை அணிவது நம் கடமை மகளே என சொல்லி வளர்த்து..அவ்வாறு உடுத்தவில்லை எனில் தட்டி கேட்க வேண்டும்..//...சூப்பர் ரம்யா தட்டிக்கேட்கனும், எல்லா இடத்திலேயும் தட்டிக்கேட்கனும் ரொம்ப சரி ரம்யா :-)

//*அப்புறம் இப்ப ஒரு புது பழக்கம் எல்லாருக்கும்.. ஒரு பாராட்டுனாவோ, திடிரென பார்த்த சந்தோசம்னாவே கட்டி பிடிப்பது.ஆண் பெண் எதிர்பால் என்றாலும் சரி, தெரிந்தவர் தெரியாதவர் என்றாலும் சரி...அது எதுக்கு..? உடனே அந்த ரெண்டு பேரு மனசுல தப்பில்லை..சாதாரணமா கட்டிபிடித்த இதை ஏன் குறையா நினைக்கணும்னு வேற சொல்வாங்க. மனசுல தப்பில்லை என எல்லாருக்கும் தெரியும்..அதுக்காக கட்டிபிடிக்கணும் என்றும் அவசியம் இல்லையே .. இது நம் கலாசாரமே இல்லை..//...இதெல்லாம் இப்ப வர ரியாலிட்டி சோ பண்ற அலும்பு மொதல்ல இந்த ரியாலிட்டி சோல இப்படி நடக்ககூடாதுன்னு தட்டிக்கேட்கனும் .

// அது வரை பாரதி கண்ட புதுமை பெண் என தட்டி கேட்டு வெட்டி சாய்த்தால் தான் எல்லா பிரச்சனைக்கும் முடிவு வரும்..தவறு செய்யும் ஆண்களை தட்டி கேளாமல் , தான் தோன்றி தனமாய் திரியும் பெண்களை தட்டி கேளாமல் , அநீதிகள் அரங்கேறும் போது வேடிக்கை பார்க்கும் காவல் துறையை தட்டி கேளாமல் , நல்ல விதத்தில் பெற்றோர்கள் வளர்த்தினாலும் அசிங்கமான எண்ணங்களை சொல்லி கொடுக்கும் மீடியாக்களை தட்டி கேளாமல், தறி கேட்டு நடக்கும் அரசை மக்கள் தட்டி கேளாமல், எங்கேயும் எதையும் சாதிக்க முடியாது..//..ரொம்ப கரக்ட்டுபா அவன நிருத்த சொல்லு நான் நிருத்தரேன்னு சொல்லி தள்ளிப்போடாம , உன் கண்ணுக்கு தப்புன்னு படறத தட்டிக்கேளுன்னு சொல்றது ரொம்ப சரி ரம்யா பாராட்டுக்கள் :-)

//நடுவரே.. இங்கே எல்லாம் நான் மீடியா, போலிஸ், அரசாங்கம் என எல்லாவற்றையும் இழுக்கிறேன் என நினைக்க வேண்டாம்.. பாலியல் வன்முறை தொடர நான் மேற்கூறிய அனைவருக்கும் கண்டிப்பாக தொடர்பு உள்ளதை.. அதை பற்றி பேசாமல் வெறுமனே பாலியல் வன்முறை பற்றி மட்டும் பேச முடியாது.. வேரிலிருந்து நுனி வரை பேசி கொட்டி தீர்க்க வேண்டிய தலைப்பு இது.//...கண்டிப்பா ரம்யா., குறிப்பிட்ட ஒரு அரசாங்கத்தையோ ஒரு சமூகத்தையோ மீடியாவையோ தாக்கிப்பேசலையே நாம.

ஒரு டம்ளர் பாயசத்துல ஒரே ஒரு துளி விசம்தான் சேர்த்திருக்கேன் குடிங்கன்னு சொன்னா குடிச்சுருவோமா நாம அப்படி இருக்கும்போது 99 பேர்ல ஒருத்தந்தான் இப்படின்னு சொல்றத மட்டும் எப்படிங்க ஒத்துக்க முடியும் அவனையும் தட்டிக்கேளுங்கன்னு சொல்றாங்க ரம்யா சொல்றதும் சரிதானே இல்லையா .,இல்லவே இல்லைன்னு சொல்றீங்களா அப்ப நீங்க சொல்றதும் சரியாதான் இருக்கும் வாங்க வந்து சொல்லுங்கப்பா :-)

Don't Worry Be Happy.

//நடுவரே நான் பட்டியில் கலந்துகொள்ளவில்லை இருந்தாலும் சொல்லவேண்டிய சிலதை சொல்லிட்டு போயிடலாம்னு வந்தேன்..// ....என்னங்க இப்படி சொல்லீட்டீங்க :-(பட்டியில கலந்துக்கலைனாலும் பட்டி சம்பந்தமா சில கருத்துக்களை சொன்னதுக்கு மிக்க நன்றி :-)

ஆண்கள் கெட காரணமா இருக்கறது, தம்மா, தண்ணியா ந்னு இன்னொரு பட்டியும் நடத்தனும்போல இருக்கே :-) பட்டி தலைங்களெல்லாம் கொஞ்சம் கவனிச்சுக்கங்கபா :-)

//பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு அதே முறையில் அவர்களை சித்திரவதை செய்வது தான் சிறந்த மருந்து..வேண்டாம்னு சொல்றவங்க தன் பிள்ளைக்கு என்ற ஒரு நிலையில் வைத்து சிந்திக்காததால் தான் அப்படி சொல்லிகிட்டு திரியுறாங்க//...எக்ஸாட்லி தளிகா :-(

//பெண்களுக்கு உடையில் என்ன அப்படி ஒரு கஞ்சத்தனம்..நீங்க தான் போடுவீங்களா நாங்களும் போடுவோம்னு இப்ப ஆம்பிளப்பசங்களும் இறங்க போய் ஜீன்சை இடுப்பில் அளவெடுப்பதில்லை அங்கிருந்து நாலு இன்ச் கீழ தான் நிக்கும் பேன்ட் உள்ளாடை எல்லாம் வெளிய தெரியணும் என்பது தான் சட்டம்..அது முழுக்க கழண்டு கீழ வுழாம இருக்க காலை விரிச்சு வெச்சு நின்னுக்கணும் அப்றம் கடசீயா ரெண்டு விரலை விரிச்சு காட்டி போஸ் கொடுக்கணும்..விக்டரி தான் போங்க//...அய்யோ அய்யோ அதுவும் இந்த டிவி காம்யர்ஸ் பண்ற கொடுமை இருக்கே அப்பப்ப கீழே நழுவற பேண்ட்ட தூக்கி வேற விட்டுட்டு என்ன கொடுமை இதெல்லாம் :-(

//ஒரு குர்தாவை போட்டாவது லெக்கிங்ஸ் போட்டு தொலையுங்களேன் குட்டி சட்டை போட்டுகிட்டு லெக்கிங்ஸை போட்டால் எப்படி இருக்கு தெரியுமா.குளியலறையை திறந்து பாத்த மாதிரி இருக்கு.//...உடல்வாகுக்கு ஏற்ற உடைன்னு ஒன்னு இப்ப இல்லாமயே போச்சு எல்லா சைஸ்லேயும் உடை வந்து இப்படி கண்றாவிய எல்லாம் பாக்கவைக்குது :-(

//வன்முறையில் வந்து நிக்கும்போது தான் நமக்கெல்லாம் கண்ணுல தண்ணி வருது ஆனால் அலுவலகங்களில் கூட இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் இப்படியெல்லாம் உடுத்திகிட்டு திருமணமான ஆண்களை கூட வலையில் வீழ்த்தி எத்தனை குடும்பங்கள் சின்னாபிண்ணமாகுது
வன்முறையில் ஈடுபடும் ஆண்களை மட்டுமல்ல இப்படியெல்லாம் திரியும் பெண்களை கொய்யாகுச்சியை உடைச்சு சீவி பச்சையா நாலு போடணும்//....சொந்த சோகம் தாங்க முடியலை நிம்மதியா கோயிலுக்கு போனாக்கூட இதுங்க பண்ற அட்டகாசம் அங்க ஒடைக்கற தேங்காய இவங்க மண்டையிலேயே உடைக்கனும் ...இனிமே இப்படி போடுவியா போடுவியான்னு சொல்லி சொல்லி போடனுமாக்கும் .

வெல்டன் தளிகா:-) தொடர்ந்து பட்டிக்கு வாங்க நீங்க வந்தாதாங்க இப்படி ஓபனா பொண்ணுங்க தப்பையும் பேச முடியும் ;-)

தளிகாவோட வாதத்திற்கு அதாவது நடை உடை பாவனை யின் வாதத்திற்கு எதிர் வாதம் இருக்கா இவங்க எதிரணியிடம் அப்படி இருந்தா பட்டியில வந்து தாராளமா சொல்லலாம் . நீங்க சொல்ற ஒவ்வொருவிசயமும் பெண்களுக்கு மிகமிக தேவையான ஒன்னுங்கறதை மட்டும் மறந்துடாதீங்க .. பெண்களின் விழிப்புணர்வுக்காக தயவுசெய்து பட்டியில் அனைவரும் பங்கு கொள்ளுங்கன்னு பட்டி நடுவர் என்பதைவிட உங்களின் சக மனுசிங்கற முறையில் கூப்பிடறேன் நன்றி :-)

Don't Worry Be Happy.

நீங்க எந்த அணிக்காக வாதாடறீங்க என்பதை தலைப்பில் இட்டு வாதாடினால் படிப்பவர்களுக்கு வசதியாகவும், புரிஞ்சுக்கவும் முடியும்னு நினைக்கிறேன் :-)

//*வீட்டில் முன்னுரிமை அளிக்க தயங்கியது
*அலுவலகத்தில் சக வேலையாளிடமிருந்து ஒரு கேவலமான அல்லது வக்கிர பார்வை
*பயணம் செய்யும் போது சக ஆண் பயணியால் ஏதேனும் பாதிப்பு வருமோ என்ற ஒரு இனம் புரியா பயம்
* அழகு படுத்தி கொள்ள வேண்டுமா , இல்லை அறிவோடு இருந்தால் போதுமா என்ற சந்தேககங்கள்
*என்னிகிருந்தாலும் ஒரு ஆணுக்கு அடங்கி தான் போயாக வேண்டிய கட்டாயம்
* இன்னும் தனித்து வாழும் பெண்களை ஏற்றுக் கொள்ளாத ஒரு சமுதாய அமைப்பு
*உடலளவில் என்றைக்காவது காதலனோடோ அல்லது மூடர்களாலோ எதாவது நேர்ந்ந்தால் தன்னை களங்கம் ஏற்பட்டவளாக கருதி தற்கொலை செய்து கொள்வது அல்லது மனதில் புழுங்கி சாவது , விரக்தியோடு அ குற்ற மனப்பான்மையோடு இருப்பது

*முக்கியமாக தைரியம் என்றால் அடங்கி போன அம்மாக்களுக்கும், தன பெண்ணை சூப்பரா வளர்க்க வேணும் என்ற அப்பாக்களுக்கும் இருக்கும் ஒரு தவறான ??? கண்ணோட்டம்.//....பெண்களை அடிமைகளாக நடத்தும்போது அந்த அடிமைத் தனத்திலிருந்து வெளிபட்டு பலிவாங்குவதுன்னு தவறா நினைச்சு அவளுக்கு அவளே குழிய வெட்டிக்கறாங்க இல்லையா உஷா.. உங்க எல்லாப் பாயிண்ட்சுமே ஏட்டில் எழுதவேண்டிய பாயிண்ட்ஸுதான் , எடிட்டிங் செய்ய தேவையே இல்லைங்க. எல்லாப் பாயிண்ட்சும் போட்டு என் கருத்தையும் உங்க மூலமா சொல்லனும்னு ஆசைதான் ஆனா இப்ப நேரம் இல்லாததால உங்க கருத்துக்களை என் மனசில மட்டும் இறுத்தி வைச்சிக்கறேன் பாராட்டுக்கள் உஷா அருமையான கருத்துக்கள்., நல்லா ஜல்லடை போட்டு ஜலிச்சு எடுத்துருக்கீங்க :-)

Don't Worry Be Happy.

இன்றும் நாளையும் எனக்கு இங்க வார இறுதியா இருப்பதனால் இரண்டு நாள் பட்டிக்கு நடுவருக்கு மட்டும் லீவுகொடுங்கோ .... வரும் சனி வந்து தோழிகளின் வாதங்களுக்கு பதில் எழுதறேன் ...தயவு செஞ்சு மன்னிச்சு என் நிலையை புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன். ஆனா அதுக்காக நீங்களும் லீவு போட்டறக்கூடாது அப்புறம் நடுவர் அழுதுடுவேன் :-( நன்றி:-)

Don't Worry Be Happy.

இன்றய பெண்களிடம் தைரியம் இல்லை....வெளியில தெரிந்தால் மானம் போயிரும்னு பயப்புடுறாங்க...அதுவே ஆண்களுக்கு சாதகம இருக்கு..

Nalam Virumbi....

பட்டி பக்கம் கொஞ்சம் எட்டி பாருங்க :-(((
வந்து பதிவிட்டு போகும்படி, நடுவர் சார்பா மைக் செட் போட்டு கூபுடுறேன்.

ஓடியாங்க, கலர் சோடா குடிச்சிகிட்டே பேசுங்க '

வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம்

நடுவரே! பெண்களின் நடை உடை பாவனைதான் காரணம் என்றால் அப்படி நடக்கும் பெண்களுக்கு மட்டும்தானே இந்த கொடுமைகள் நடக்கணும். ஏன் பச்சிளம் குழந்தைக்கும் விவரம் அறியா சிறு பெண்ணுக்கும், கண்ணியமான நடை உடை பாவனை உள்ள பெண்ணுக்கும் இக்கொடுமை நடக்கிறது? ஆணின் மனதில் உள்ள பிரச்சினை அது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்ச்சிகள் ஒன்றுதான். ஆனால் காலங்காலமாக கற்பு ஒழுக்கம் என்று பெண்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டு ஆண்களுக்கு அது தேவையே இல்லாதது போன்ற பாவனையில் வளர்க்கப்பட்டதுதான் இன்றைய நிலைக்கு காரணம். ஒரு ஆண் பெண்ணிடம் தகாத முறையில் நடந்தால் அந்த பெண் கற்பிழந்தவள் கற்பழிக்கப்பட்டவள் என்ற பட்டங்கள் வாரி வழங்கப்படும் இதே சமூகத்தில் அந்த ஆணுக்கு வழங்கும் பெயர் என்ன? ஒன்றுமே இல்லை. அவனை குற்றவாளியாக கூட பார்ப்பதில்லை. அவனது செயலையும் நியாயப்படுத்த பெண்ணின் நடை உடை பாவனையையே குற்றம் சொல்லி அவனை தப்பிக்க வைக்கிறது சமூகம். காரணம் ஆணாதிக்க சமூகத்தில் பெண் இன்றும் போகப்பொருளாகத்தான் பார்க்கப் படுகிறாள். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் சமூகத்தின் அடிமனதில் இந்த எண்ணம்தான் ஊறிக்கிடக்கிறது நடுவரே!

பெண்கள் தட்டிக் கேட்பதில்லை என்கிறார்கள். சமீபத்திய செய்தியில் கேள்விப்பட்டிருப்பீர்கள் சூரியநெல்லிப் பெண் கேஸ் என்று. 1996ம் ஆண்டு 14வயது பெண்ணுக்கு நடந்த கொடுமை. அவளும் பெற்றோரும் நீதி கேட்டு போராடுகிறார்கள். 2013லும் நீதி கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்தான் நடுவரே! என் நாட்டில் சாதாரணப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லாத போது எந்த பெண் நடுவரே தட்டி கேட்பாள்.

வினோதினிகளும் வித்யாக்களும் அமானத்களும் சூரியநெல்லிப் பெண்களும் நம் நாட்டில் ஆயிரக்கணக்கில் நடுவரே! இவர்கள் அனைவரின் நடை உடை பாவனைகளிலும் என்ன குற்றம் கண்டார்கள்? எதிர்த்து நிற்க கூட முடியாத அளவுக்கல்லவா அந்த கிராதகர்கள் செய்து விட்டார்கள்.

ஆசிட்டை பெண்ணின் மீது வீசுவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது. நான் உன்னை காதலிக்கிறேன் உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு கவலை இல்லை நீயும் என்னை காதலித்துதான் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆண்கள் மனதில் வரக் காரணம் என்ன? பொறுக்கித்தனத்தை ரவுடியிசத்தை ஹீரோயிசமாக காண்பிக்கும் கேடு கெட்ட சினிமாக்கள் மற்றும் பெண் என்பவள் உணர்வற்ற தனக்கான போகப் பொருள் என்ற ஆழ்மன எண்ணம்தானே?!

என்று நம் சமூகம் பாலின வேற்றுமை காட்டாத ஆரோக்கியமான சமூகமாக மாறுகிறதோ அன்று இப்பிரச்சினைகள் அத்தனைக்கும் விடிவுகாலம் பிறக்கும். அதுவரை எத்தனை சட்டங்கள் போட்டாலும் பெண்கள் கட்டுப்பெட்டியாக நடந்து கொண்டாலும் இந்த கொடுமைகைள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே!!
மது, மாது, சூது.... தெரியாமதான் கேட்கிறேன் மது,சூதுக்கு இடையில உயிருள்ள ஆறறிவுள்ள பெண்ணினத்தை சேர்த்தியிருப்பது எதில் சேர்த்தி??
சினிமாவில் ஆணுக்கு உடல்மூடுமள்வுக்கு உடை கொடுத்து பெண்ணுக்கு அரைகுறையாக உடுத்தி வேடிக்கை பொருளாகக்காட்டும் ஈனச்செயலை எப்பொழுது நிறுத்தப்போகிறார்கள் சமூக மேம்பாடு பற்றி பேசும் இயக்குநர் அறிஞர்கள்??
சாலையில் ஒரு பெண் கம்பீரமாக நடந்து போகமுடியுமா நம்நாட்டில்???
ஆணைவிட பெண் படித்திருந்தாலும் தப்பு, உயர்ந்த பதவியில் அமர்ந்தாலும் தப்பு ஏன் இந்த மாசுபடிந்த எண்ணம்??

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவர் சொந்த அலுவலில் சிக்கிய காரணத்தால் செவ்வாய் (நாளை) அன்று பட்டியின் தீர்ப்பு வரும் என் அறிவித்திருக்கிறார் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதலில் இவ்வளவு நாள் காக்க வைத்தற்க்கு மன்னிக்கவும்:-( எனக்குத் தெரியும் பட்டிக்கு பதிவு போட்ட பிறகு நடுவரின் பதில் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளத்தான் ஆர்வம் மிகுந்திருக்கும். ஏனெனில் இங்கே பதிவிடும் ஒவ்வொருபதிவும் எத்தனை உற்சாகத்துடனும், திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இருப்பினும் நம்முடைய பதிவு பிறருக்கு பிடித்திருக்கிறதா என்பதை அறியும் பின்னூட்டம் இங்கே இருக்காது. அது நடுவரின் பதிவில் மட்டுமே வெளிப்படும் என்பதால் தான்.., ஒரே ஒரு பதிவுதான் எனினும் பதிவிட்டதற்கு பின்பு நடுவரின் பதில் என்ன என்பதில் தெரிந்துக்கொள்ளும் ஆவலில் பல தடவை இப்பக்கத்தை ( பங்குபெறும் பட்டியின் பக்கத்தை )பார்வையிடுவேன்.. அதே போல்தான் தோழிகளும் இருந்திருப்பீர்கள். நீங்கள் அனைவரும் எத்தகைய சூழலில் இருந்து இங்கு பதிவு போட்டிருப்பீங்கன்னு எனக்குத்தெரியும். உடனுக்குடன் பதிவு போட முடியும் என்ற தையிரித்தில்தான் பட்டியின் நடுவராக வர சம்மதித்தேன். இடையில் வார இறுதி விடுமுறையும், இன்னபிற அலுவல் காரணமாகவும் இவ்வளவு தாமதம் ஏற்படுத்தியதற்கும் மன்னிக்கவும். பட்டியின் விறுவிறுப்பு குறையக் காரணம் ஆனதற்கும் நடுவரை மன்னிக்கவும்.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்