பட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன?

எனது அருமை அறுசுவைத் தங்கங்களே! சிங்கங்களே! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பட்டி ஆரம்பமாயாச்சு ...:-)

தோழி கவிசிவா அளித்த அருமையான விவாதிக்க தற்போது மிகவும் அவசியமான தலைப்பு...நமது நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும் விசயங்களைப் பற்றி பேச இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்பில் சிறிய மாற்றங்களோடு .....

**********************************************************************
பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்குள்ளாக காரணம் ..

1.பெண்களின் நடை உடை பாவனையே.,
2.பெண்களை போகப் பொருளாக பார்ப்பதாலே.,
3.பெண்களிடம் தட்டிக்கேட்கும் மனப்பான்மையின்மையே (தையிரியமின்மை)
************************************************************************

பொது இடம் என்பது பார்க், பீச், கோயில், குளம் என்பதோடு இல்லாமல் இன்றைக்கு பெண்களும் அதிகமாக பங்குகொள்ளும் பொது தளமாக இருக்கும் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தபட்டி பயங்கரமா பிச்சு உதற வசதியா நீதிமன்றக்களத்தை தேர்ந்தெடுத்தாச்சு.. தோழிகளே நீங்க கருப்பு கோட்டு போட்டு பிச்சு உதறப்போறீங்களோ இல்லை கிழிச்சு எறியப்போறீங்களோ எனக்கு தெரியாது ....நான் உங்ககிட்ட கேட்டுக்கறது ஒன்னே ஒன்னுதான்.. வேற என்ன ?? அறுசுவை விதிகளையும், பட்டியின் விதிகளையும் மீறாமல் உங்கள் வாதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

பட்டி விதிமுறைகள்:
யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்

சபாஷ் சரியான தீர்ப்பு.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

ஆழமானா கருத்துகளுடன் அருமையான பதிவுகளுடன் மிகவும் சரியான தீர்ப்பு ****

சொன்ன அத்தனை விஷயங்களை படிகும் போதே நம்ம ரியல் லைஃப் ல நடந்த சம்பவங்கள் தான் நினைவுக்கும் வந்தது !!!!!!!!

நீங்க சொன்ன விளக்கங்களை படிச்ச்துமே புதுசா ஒரு வேகம் வந்தா மாதிரி இருந்துச்சு.......

இனியும் நம்ம கண் முன்னால் நடக்குர அசிங்கத்தை சகிச்சுட்டு போகாமா தட்டி கேட்கனும் அது தான் அவங்க மாதிரி ஜென்மங்களுக்கு குடுக்குர சாட்டை அடி மாதிறி இருந்துச்சு ஒவ்வொரு வரிகளும்

தீர்ப்பு ரொம்பவே சரிதான்.... :-))

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அருமையான தீர்ப்பு ஜெய்! கடுமையான வேலைப்பளுவுக்கு இடையிலும் நன்கு அலசி ஆராய்ந்து தீர்ப்பு சொல்லியிருக்கீங்க. தட்டிக் கேட்கும் தைரியத்தை நம் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கணும்னு ஆழமான, காலத்துக்கு ஏற்ற தீர்ப்பு ஜெய். நூற்றுக்கு தொண்ணூறு பேர் நாம் எதிர்த்தால் சத்தமில்லாமல் அடங்கி விடுவார்கள். தைரியம்தான் இன்றைய முதல் தேவை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஜெய்.

என் அனுபவம் ஒன்னையும் சொல்லலாம்னு நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன் என் இரவு ரயிலில் அப்பர் பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த என்னிடம் மிடில் பெர்த்தில் இருந்த ஒரு பொறுக்கி வாலாட்டினான். இத்தனைக்கும் அவனது மனைவி அவனுக்கு எதிர் பெர்த்தில் படுத்திருந்தார். பார்க்கவும் புதுமணதம்பதிகள் போல இருந்தார்கள். சத்தமே இல்லாமல் எழுந்து உட்கார்ந்து அவன் கையை பிடித்து வைத்து பெல்ட்டால் நாலு போடு போட்டேன். சத்தம் கேட்டு எழும்பிய அவன் மனைவி என்னங்க என்னாச்சு என்றாள். எனக்கு இருந்த கோபத்தில் அவனையே கேள்னு சொல்லிட்டு படுத்துட்டேன். அதன் பின் நான் தாம்பரத்தில் இறங்கும் வரை தலையில் முக்காடு போட்டு படுத்தவன் எழும்பவே இல்லை :)

ஆனால் சில ஜென்மங்கள் எத்தனை அடி வாங்கினாலும் திருந்தவே மாட்டேன் என்று அலையுதுங்க. எங்க ஊரில் ஒருத்தனை பல பெண்களும் பல சந்தர்ப்பங்களிலும் அடித்திருக்கிறார்கள். ஒருமுறை ஊரே கூடி விளக்குமாற்றால் வெளுத்து வாங்கியது. ஆனால் அந்த ஜென்மம் இன்று வரை திருந்திய பாடில்லை..

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெய்
அருமையான தீர்ப்பு..
தீர்ப்பு எதுவானால் என்ன.. உங்களின் அழகான விளக்கம் கிடைக்குதே ..
உங்களின் கோபத்தையும் நன்றாக வெளிகாட்டி இடித்துரைத்து சொல்லி இருகிங்க.எனக்கு பல சூழலில் தெருவில் நடக்கும் போது எல்லாம் சின்ன சின்ன சம்பவம் நடந்துள்ளது.. நானும் கோபப்பட்டு திட்டி தான் இருக்கேன்.

நாம எல்லார் முன்னாடியும் சத்தம் போடுவோம்னு எதிர்ப்பார்க்காத ஆளுங்க.. சத்தம் நாம் போட ஆரம்பிச்சதும், நிலைகுலஞ்சு போயி பயந்ததையும் பார்த்து இருக்கேன்.அதை தெனாவெட்டா பார்த்தவனையும் பார்த்து இருக்கேன்..

பட்டியில் வாதாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
வேலை பளுவிலும் பட்டியை சிறப்பாக நடத்திச் சென்ற நடுவருக்கும் பாராட்டுக்களுடன் கலந்த நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்க தீர்ப்பு படிச்சதும் எனக்கே என் மேல் கோவமாக வந்தது. நானும் அப்படி தான் பயம் என்ற பெயரில் பேச வேண்டிய நிறைய இடத்தில் என்னுடைய பயத்தினால் பேசாமல் இருந்திருக்கிறேன். இப்பொழுது தான் புரியுது அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று. இனி ஒருபோதும் நான் பயம் என்ற பெயரில் என்னை நானே அசிங்கபடுத்தி கொள்ளமாட்டேன். ஒரு சாக்கடை நம் மேல் அசிங்கமான பார்வையை வீசினால் அப்பவே அவனை பார்வையால் சுட்டெரிக்க வேண்டும், ஒரு அசிங்கமான செயலை செய்து நம்மை அசிங்கபடுத்தினால், அவனை தோலை உரித்து காய போடணும்,பயம் தான் பெண்களுக்கு முதல் எதிரி, அதை முதல் தூக்கி எறியணும் .தட்டி கேட்கும் திறன், தைரியம், மன உறுதி இதெல்லாம் ஒரு பெண்ணுக்கு வந்து விட்டால் அவளை அவளே காப்பாற்றி கொள்வாள், அவளுக்கு யாருடைய உதவியும் தேவைபடாது, இப்படி பல விஷயங்களை இன்று உங்க தீர்ப்பு எனக்கு கற்று கொடுத்து இருக்கிறது.

இந்த பட்டி உண்மையிலேயே மிகவும் சிறப்பு மிகுந்தது!!!. தலைப்பை தந்த கவிசிவா அக்காக்கு மிகுந்த பாராட்டுகள்!!! பட்டியில் அனைவருடைய வாதமும் மிக சிறப்பு. முக்கியமாக ரம்யா அக்கா கொடுத்த பதிவுகள் ஒவ்வொன்றும், அசிங்கமான செயலை செய்பவனுக்கெல்லாம் சாட்டை அடி கொடுக்கிற மாதிரி இருந்தது.

//போக பொருளா பார்க்கிறானா? அவன் சாக்கடை.. அப்படி தான் பார்ப்பான்.. அவனை கட்டி வெச்சு உதைக்க வேணாம்..?

நீ இப்படி ட்ரஸ் போட்ட அதான் சீண்டினேன் என்கிறானா? சபல புத்தி உள்ளவன் அப்படி தான் சொல்வான்.. தோலுரிச்சு உப்பு கண்டம் போட வேண்டாமா?

ஆசிட் ஊத்துவியா? அதே ஆசிட்டை அவனுக்கும் ஊத்தி மருத்தவம் பார்க்காம தனி அறையில அடைக்க வேண்டாம் ?

பலாத்தகாரம் செய்வானாம்.... யாரும் நினைத்து பார்க்க முடியாத தண்டனை கொடுக்க வேண்டாம்.. ?

குழந்தையின் வாழ்க்கையை கேடுப்பானா ? நிக்க வெச்சு சுட வேண்டாம்... ?//

இனியும் பயந்து இருந்தால் நம் போன்ற பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நம்மை நாம் தான் காத்து கொள்ள வேண்டும் நமக்காக யாரையும் எதிர்பார்த்து கொண்டு இருக்க கூடாது.

உண்மையிலயே இந்த பட்டி பெண்கள் எல்லாரும் எப்படி இருக்கணும், எப்படி இருக்க கூடாதுன்னு அழகா சொல்லி கொடுத்து இருக்கு. இந்த மாதிரியான சமுதயாத்திற்கு தேவையான பல தலைப்புகளை நம் பட்டிமன்றம் பேச வேண்டும். பட்டியில் கலந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!! நல்ல ஆழமான தீர்ப்பை கூறி நம் மனதை பல படுத்திய நடுவர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!! :-)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

ஜெய் தீர்ப்பு அருமை மட்டுமல்ல உண்மையும்கூட,
தட்டி கேட்க ஆளிருன்ந்தால் சுருட்டிக்கிட்டு போவானுங்க,எந்த தைரியத்தில் டெல்லி சம்பவம் நடந்தது?எந்த தைரியத்தில் தருமபுரி சம்பவம் நடந்தது?எந்த தைரியத்தில் கோவை சம்பவம் நடந்தது?இதில் தண்டனை கொடுக்க கால தாமதம்வேறு!!
ஒரு தெருவில் 10ஆண் இருந்தால் 20 பெண் இருப்போம்,தைரியமாக கையில் துணியை எடுத்தாலும் அது நமக்கு ஆயுதமே.முதலில் பெண் மனதில் தைரியம் வேன்டும் எப்படிப்பட்ட சூழலிலும் தப்பிக்க அது வழி செய்யும்......
அனைவரையும் யோசித்து தைரியபடவைக்கும் தீர்ப்பு,கலந்துக்க முடியாமைக்காக மிகவும் வருந்துகிறேன்...:-((

ஜெய் அருமையான தீர்ப்பு துவைத்து எடுத்து அலசி காயப்போட்டுட்டீங்க :)
ஒவ்வொறு வரிகளூம் நச் நச், தீர்ப்பை படிக்கும் பெண்களுக்கு தைரியம் தானாக வரும் அப்படி இருக்கு வர்த்தைகள் வாழ்த்துக்கள் ஜெய் :)))
பல வேலைகளுக்கு இடையில அருமையான ஆழ்ந்து சிந்திச்ச தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்