நண்டு குருமா

image

வழங்கியவர் : Manohari

தேதி : வெள்ளி, 29/09/2006 - 21:59

ஆயத்த நேரம் : 30 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 5 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • நண்டு - ஆறு
  • தேங்காய் - கால் மூடி
  • தயிர் - அரை கோப்பை
  • வெங்காயம் - இரண்டு
  • தக்காளி - இரண்டு
  • இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
  • பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
  • பச்சைமிளகாய் - இரண்டு
  • காய்ந்தமிளகாய் - ஆறு
  • தனியா - ஒரு மேசைக்கரண்டி
  • மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • பட்டை - ஒரு துண்டு
  • கிராம்பு - நான்கு
  • உப்பு - இரண்டு தேக்கரண்டி
  • எண்ணெய் - அரை கோப்பை
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

 

  • நண்டை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கொண்டு வெறும் சட்டியில் போட்டு இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு காய்ந்த மிளகாயுடன் தனியா, மிளகு சீரகம், பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  • இதனுடன் தேங்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • சட்டியில் எண்ணெயை ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • பிறகு இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். பிறகு அரைத்த மசாலாவை போட்டு வதக்கி தயிரை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்புத்தூளை தூவி நண்டை போட்டு கிளறி விடவும்.
  • இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி பத்து நிமிடம் கொதிக்கவைத்து இறக்கிவிடவும்.