ரெண்டாங் அயாம்

தேதி: February 20, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

நடுத்தர அளவு துண்டுகளாக்கிய கோழி - 300 கிராம்
கெட்டி தேங்காய் பால் - அரை கப்
இரண்டாம் தேங்காய் பால் - ஒரு கப்
அரைக்க:
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
மிளகாய் வற்றல் - 8 - 10 (காரத்திற்கேற்ப)
ஃப்ரெஷ் மஞ்சள் - ஒரு அங்குல அளவு
இஞ்சி - ஒரு அங்குல அளவு
ஃப்ரெஷ் காலங்கால் (ஃப்ரெஷ் சித்தரத்தை) - ஒரு அங்குல அளவு
லெமன் கிராஸ் - ஒன்று
எலுமிச்சை இலை - 3
மஞ்சள் இலை - ஒன்று (விருப்பப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
வறுத்து பொடிக்க:
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
மல்லி விதை - கால் தேக்கரண்டி


 

மிளகாய் வற்றலை வெந்நீரில் ஊற வைக்கவும். லெமன் கிராஸின் வெளிப்புறத்தில் உள்ள இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி தடிமனான அடிப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து லேசாக தட்டி வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக வைக்கவும்.
வாணலியை சூடாக்கி தேங்காய் துருவல், மல்லி விதை சேர்த்து சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் பொடித்து வைக்கவும்.
அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் மையாக அரைக்கவும். காலங்கால் கொஞ்சம் கடினமாக இருக்கும். சிறுதுண்டுகளாக வெட்டி சேர்த்து அரைக்கவும்.
அரைத்த கலவையை கோழித் துண்டுகளுடன் சேர்த்து கலந்து 20 நிமிடம் ஊற விடவும்.
ஊற வைத்த கோழியுடன் இரண்டாம் பால் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
நன்றாக கொதி வந்ததும் தட்டி வைத்திருக்கும் லெமன் கிராஸ், லேசாக கையால் கசக்கிய எலுமிச்சை இலைகள், மஞ்சள் இலை சேர்த்து மீண்டும் மூடி வேக விடவும்.
கோழித் துண்டுகள் முக்கால் பதம் வெந்ததும் பொடித்து வைத்துள்ள தேங்காய் பொடியை சேர்த்து கிளறவும்.
கோழி நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் முதல் பால் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேக விடவும்.
சுவையான இந்தோனேஷியன் ரெண்டாங் அயாம் தயார். சப்பாத்தி, சாதம் இரண்டிற்கும் நன்றாக இருக்கும்.

ஆங்கிலத்தில் காலங்கால் (Galangal Root), மலாயில் லெங்குவாஸ் என்பது நமது நாட்டு மூலிகையான சித்தரத்தை. இந்த சமையலுக்கு ஃப்ரெஷ் சித்தரத்தை பயன்படுத்த வேண்டும். கிடைக்கவில்லை என்றால் இஞ்சி மட்டும் பயன்படுத்தினால் போதும். வாசனை கொஞ்சம் குறையும் அவ்வளவுதான். ஆனால் சித்தரத்தைக்கு கொழுப்பை கரைக்கும் தன்மை உண்டு. இந்தோனேஷிய சமையலில் இதை அதிகம் பயன்படுத்துவார்கள்.

லெமன் கிராஸும் மருத்துவ குணம் உடையது. சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் உடல் துர்நாற்றம் அகலும். லெமன் கிராஸ் கிடைக்காவிட்டால் சிறிதளவு துருவிய எலுமிச்சை தோல் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் துருவும் போது தோலின் அடியில் இருக்கும் வெள்ளை பகுதி இல்லாமல் துருவ வேண்டும். இல்லை என்றால் கசப்பாகி விடும்.

பொங்கலுக்கு வாங்கும் மஞ்சள் செடியில் உள்ள மஞ்சளைத்தான் பயன்படுத்தியுள்ளேன். கிடைக்கவில்லை என்றால் சிறிது மஞ்சள் தூள் பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமை அருமை :) ரொம்ப சூப்பர். நீங்க சொல்லி இருக்கும் ஐட்டமெல்லாம் மாலேவில் கிடைக்குது. ட்ரை பண்ணீடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி அக்கா ரெண்டாங் அயாம் டேஸ்டி டிஷ் ரொம்ப நல்ல குறிப்பு அக்கா ...ரொம்ப வித்யாசமான பேரா இருக்கே இதோட பிண்ணணி என்ன அக்கா :-))

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

differnt name... , differnt kuripu, nan etho sweet polannu ninachu vanthen,..;) appuram partha chicken....=D super kuripu..:), neenga sonnathula 2 or 3 items marketla theidina kidachumnu ninaikiren, kidacha kandipa seithudaren..congrats kavi..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கவி சூப்பர் சூப்பர் அருமையான இந்தோனேஷியன் டிஷ் :) கண்டிப்பா செய்து பார்த்து சொல்றேன் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி..

சூப்பர் டூப்பர் :)
மாட்டிட்டு சொல்றேன்.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவி குறிப்பு அருமை:) ஆரோக்கியமான குறிப்பாவும் சொல்லி அசத்திட்டீங்க:))
வாழ்த்துக்கள் கவி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவி அசத்திட்டீங்க... வாழ்த்துக்கள்... கண்டிப்பா ஒருமுறை செய்து பார்க்கிறேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்