மட்டன் பெப்பர் ஃப்ரை

தேதி: February 21, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (10 votes)

 

மட்டன் - அரை கிலோ
தேங்காய் பால் - ஒரு மேசைக்கரண்டி
தாளித்து வதக்க:
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - 2 கொத்து
சன்னமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
நறுக்கிய தக்காளி - பாதி
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
பொடி வகைகள்:
மிளகுப் பொடி - 2 மேசைக்கரண்டி (இடித்தது)
மல்லிப் பொடி - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
சோம்பு பொடி - ஒரு தேக்கரண்டி (இடித்தது)
அரைத்து மேரினேட் செய்ய:
இஞ்சி, பூண்டு - தலா ஒரு தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - கைப்பிடியளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
புதினா இலை


 

முதலில் அரைக்க கொடுத்தவற்றை நன்கு விழுதாக அரைத்து மட்டனில் கலந்து ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து குக்கரில் மட்டனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேகும் வரை விசில் வரவிட்டு இறக்கவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு பின் வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின் மிளகுப் பொடி தவிர மற்ற பொடி வகைகளை சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி, வேக வைத்த மட்டனையும், அதன் ஸ்டாக்கையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து சிறிது வற்றும் வரை விடவும்.
தண்ணீர் வற்றியதும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறி மிளகுப் பொடியை தூவி இறக்கவும்.
சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் பெப்பர் ஃப்ரை ரெடி.

மட்டனை குக்கரில் வைக்காமல் கடாயிலேயே நன்கு வேகவிட்டு ட்ரையாக மாறும் வரை சமைப்பார்கள். சீக்கிரம் ஆக குக்கரில் வைத்துக் கொள்ளலாம். குக்கரில் இருந்து கடாய்க்கு மாற்றாமல், வெங்காயம் தக்காளியை குக்கரிலேயே வதக்கி மட்டனை போட்டு விசில் விட்டு எடுத்து பின் பொடி வகைகளை சேர்த்தும் ட்ரையாகும் வரை வதக்கி எடுக்கலாம். தக்காளி மற்றும் தேங்காய் பாலை சேர்க்க மாட்டார்கள். விரும்பினால் சேர்க்காமலும் செய்யலாம். நான் ரொம்ப ட்ரையாக செய்யாமல், கொஞ்சம் பிசைந்து சாப்பிட ஏதுவாக செய்து இருக்கிறேன். இன்னும் ட்ரை செய்தால் நன்றாக இருக்கும். மிளகு பொடி காரத்திற்கு ஏற்ப போட்டுக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இப்ப தான் நினைச்சுட்டே இருந்தேன்... எங்கடா ரம்யா குறிப்பு ரொம்ப நாளா காணோம்’னு. வந்துருச்சு. மட்டனெல்லாம் ஊருக்கு போனா தான். நல்லா இருக்கு குறிப்பு. சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி..

வனி
குறிப்பு கொஞ்சம் அனுப்பி வெச்சு இருக்கேன்.. அது வந்துட்டே இருக்கும் கொஞ்ச நாளைக்கு.. ரொம்ப நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ் சூப்பரா இருக்கு பார்க்கவே எனக்கு மட்டன் தான் பிடிக்கும் கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள் பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்யா அக்கா மட்டன் பெப்பர் ஃப்ரை சும்மா சூப்ப்ரா இருக்கும் போலயே ஈஸி மெதடா கூட இருக்கு அக்கா சூப்பர் குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்லாருக்கு.படங்கள் அழகு.வாழ்த்துக்கள்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரம்ஸ் மட்டன் பெப்பர்ஃபிரை பார்க்கவே காரசாரமா இருக்கு:))
போட்டோஸ் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரம்ஸ், வழக்கம் போல அதிக மளிகை பொருட்களை வச்சு பெப்பர் சிக்கனை காரசாரமா ப்ரை பண்ணியிருக்கீங்க :) ட்ரை பண்ணிட்டு சொல்றேன் பா.. மத்த மசாலாக்களை விட சிக்கனில் பெப்பர் போட்டு செய்தால் அதன் சுவையே தனி தான். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//ட்ரை பண்ணிட்டு சொல்றேன் பா.// - இந்த பொய்யயே இன்னும் எம்புட்டு நாள் சொல்வீங்க??? :O ரம்யா... நம்பாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, ரம்ஸ் இப்ப சமைச்சுட்டு இருப்பாங்கங்கற தைரியத்துல பதிவு போட்டுட்டு ஒடலாம்னு பார்த்தா.. வழி மறிச்சு நின்னதுமில்லாம ரம்ஸ்கிட்ட வேற மிளகா பொடி தூவுறீங்களா? வனி.. நீங்க இப்ப என்னை விட்டால்.. இந்த வாரமே உங்களோட செட்டிநாடு இறால் பிரியாணி செய்து படம் காட்டுவேனாம்.. எப்படி டில்.. ஓகேவா ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//ரம்ஸ், வழக்கம் போல அதிக மளிகை பொருட்களை வச்சு பெப்பர் சிக்கனை காரசாரமா ப்ரை பண்ணியிருக்கீங்க :)//

மட்டன் பெப்பர் ஃப்ரையை பெப்பர் சிக்கன்னு சொல்லியிருக்காங்க கல்பூ வீடாதீங்க ரம்ஸ் ;-)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

i m new to this site very useful site.. i tried this dish yesterday it came out very well very tasty..thank you so much...