பீட்ரூட் சாலட்

தேதி: February 21, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

பீட்ரூட் - 3
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - ஒன்று
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
மயோனைஸ் - 2 மேசைக்கரண்டி
தேங்காய் பால் - 2 மேசைக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

குக்கரில் பீட்ருட், உருளைக்கிழங்கை 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் பீட்ருட் மற்றும் உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு காரட் துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித் தழை, பச்சை மிளகாயை சேர்க்கவும்.
பின் மயோனைஸ், தயிர், ஆலிவ் ஆயில், மிளகுத் தூள், உப்பு சேர்க்கவும்.
தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசைந்து விடவும்.
பீட்ரூட் சாலட் ரெடி. விரும்பினால் அவித்த முட்டை சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஆரோக்கியமான சாலட் ரெசிபி :) சுப்பர். சொன்ன மாதிரி முட்டை சேர்த்திருந்தா ஸ்லைஸ் பண்ணி கலர் காம்பினேஷனும் அட்டகாசமா இருந்திருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முசி குறிப்பு அருமை வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Nice

முசி அக்கா பீட்ரூட் சாலட் ஹெல்தி ஈஸி அண்ட் டேஸ்டி குறிப்பு நல்லா இருக்கு படங்கள் லாம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.வனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி...

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பீட்ரூட் சாலட் நல்ல ஹெல்தி குறிப்பு. வாழ்த்துக்கள் :)

Kalai

முசி சத்தான சாலட் கலர்ஃபுல்லா அழகா இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கலா:மிக்க நன்றி.
சுவர்ணா:மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.