பருப்பு ரசம்

தேதி: February 23, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (9 votes)

 

தக்காளி - ஒன்று
வேக வைத்த துவரம் பருப்பு - 2 கரண்டி
புளி - கோலி அளவு
நசுக்கிய பூண்டு - 2 பல்
ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள், மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
அரிசி களைந்த நீர் - தேவைக்கு
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நெய் - தாளிக்க


 

புளி, பருப்பு, தக்காளி, ரசப்பொடி, உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள், சிறிது கொத்தமல்லித் தழை சேர்த்து கரைத்து வைக்கவும்.
அதனுடன் அரிசி களைந்த நீரைச் சேர்க்கவும்.
நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின்பு கரைத்த நீரைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான பருப்பு ரசம் தயார்.

ரசப்பொடிக்கு இங்கே சொடுக்கவும் : <a href="/tamil/node/23352"> ரசம் பொடி</a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மணமிக்க ரசம் சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நாங்களும் இதே முறையில் ரசம் செய்வோம்.. மிகவும் அருமையான குறிப்பு ... வாழ்த்துக்கள்

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ரசம் சூப்பர் மிக அருமையான குறிப்பு - வாழ்க வளமுடன்

கவிதா அக்கா பருப்பு ரசம் சுலபமான சூப்பர் குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஸ்வர்ணா,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

சங்கீதா,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

சுதா,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

கனி,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

மிகவும் அருமைய இருக்கு தோழி