கொண்டைக்கடலை மசாலா

தேதி: February 23, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (12 votes)

 

1. வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
2. உருளைக்கிழங்கு - 2
3. வெங்காயம் - 1
4. தக்காளி - 1
5. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
6. உப்பு
7. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
8. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
9. சிக்கன் மசாலா - 1 தேக்கரண்டி [விரும்பினால்]
அரைக்க:
10. பச்சை மிளகாய் - 3
11. கொண்டைக்கடலை - 1 பிடி
12. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
13. கறிவேப்பிலை - 2 கொத்து
14. கொத்தமல்லி - 1 பெரிய கைப்பிடி


 

கொண்டைக்கடலையை ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும். உருளை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
வேக வைத்த கடலை 1 பிடி சேர்த்து அரைக்க கொடுத்தவற்றை அரைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் உருளை சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி அரைத்த மசாலா சேர்த்து சிறிது நீர் விட்டு மசாலா வாசம் போக கொதிக்க விடவும்.
பின் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து தேவையான நீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும்.
சுவையான கொண்டைக்கடலை மசாலா தயார்.


இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சற்று அதிகமாக சேர்த்து அரைப்பதால் வாசம் அருமையாக இருக்கும். இதே போல் சிக்கனும் சமைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்