பாப்கார்ன் சிக்கன்

தேதி: February 25, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

சிக்கன் - கால் கிலோ
மிளகுப் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் பொடி - தேவைக்கு
சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் கறிவேப்பிலை ஃப்ளேக்ஸ் - தேவைக்கு
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
முட்டை - ஒன்று
மைதா மாவு - கைப்பிடியளவு
காரன் மாவு - கைப்பிடியளவு


 

எலும்பில்லாத சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மைதாவுடன் காரன் மாவைக் கலந்து இரு பாகமாக பிரித்து அதில் ஒரு பாக மாவில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து வைக்கவும்.
பொடி வகைகளை சிக்கனில் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும்.
நன்கு பிரட்டி ஊற வைக்கவும்.
பின் ஊற வைத்த சிக்கனை உப்பு சேர்க்காமல் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எடுக்கவும்.
அதனை முட்டையில் முக்கி எடுக்கவும்.
பின் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கலந்த மாவில் பிரட்டி எடுத்து, அதிகமாக இருக்கும் மாவை சலித்து வெளியேற்றவும்.
பின் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பாப்கார்ன் சிக்கன் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரம்யா அக்கா : வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர் குறிப்பு ரொம்ப நாளா ட்ரை பன்னனும் நு நினைச்சுட்டு இருந்த டிஷ் இப்போ செய்முறையோட விளக்கங்களோட ஈஸியா இருக்கு கட்டாயம செய்துட்டு சொல்லுரேன் ரொம்ப நல்ல குறிப்பு அக்கா சூப்பர்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாவ்... சூப்பர். அப்படியே கடைசியா தட்டுல இருக்க எல்லாம் எனக்கு தான்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

wow very nice. last picture is sooooogood.

சூ.....ப்பர் ரெசிபி. ரொம்ப அழகா, அருமையா இருக்கு. எளிமையாகவும் இருக்குது. நன்றி.

அன்புடன்,
ஹலீமா

பாப்கார்ன் சிக்கன் சூப்பர். ரம்ஸ் காரன் மாவுனா கான் ஃப்ளார்ரா.

ரம்ஸ் குறிப்பு மிக அருமை, கண்டிப்பா முயற்சிசெய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்லதொரு கண்டுபிடிப்பு.படங்களும் அருமை.சூப்பர்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

சூப்பர் டிஷ் பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு

பாப்கார்ன் சிக்கன் சூப்பர்.வாழ்த்துக்கள்.

நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ..

கனி
செய்து பார்த்து சொல்லுங்க..மிக்க நன்றி..

வனி
எல்லாம் அப்படியே பார்சல் செய்து அனுப்பிடறேன்..:)
மிக்க நன்றி..

மஞ்சு
மிக்க நன்றி

ஹலீமா
ரொம்ப நன்றிங்க..

வினோ
ரொம்ப நன்றி..
காரன் மாவு , காரன் பளார் ரெண்டும் :ஒண்ணுதான் )

அருளு
செய்து பார்த்து சொல்லோனும்.. :)
நன்றி

பிரியங்கா
ஹிஹிஹி.. மிக்க நன்றி

வினா
மிக்க நன்றி ..

கலை
ரொம்ப நன்றி.. கலை

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....சுவையோ சுவைன்னு படத்தைப்பார்த்தவுடனேயே சொல்லத் தோணுது.

இப்போ ஒரு கோயில் கொடியேற்ற விரதம்!
முடிஞ்சதும் செய்து அசத்திட வேண்டியதுதான்..

Maturity is not when we start speaking “BIG” things!
It is when we start understanding “small” things!

பார்க்கவே நிச்சயம் சூப்பரா இருக்கும்னு தெரியுது சண்டே செய்துட்டு சொல்றேன் ரம்யா.

ரம்யா,

சூப்பர்..அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாவ் ரம்ஸ்... பாப்கார்ன் சிக்கன் சும்மா அசத்துது போங்க!... வெளில வாங்கி சுவைத்திருக்கிறோம், இதுவரை வீட்டில ட்ரை பண்ணலை. இனி செய்திட வேண்டியதுதான். படங்கள் எல்லாமும் பளிச் பளிச்!! :) வாழ்த்துக்கள் ரம்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

சூப்பர் ரம்யா..நானும் இதேபோலத்தான் செய்வேன்.ஆனா இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்ததில்லை.இப்படியும் செய்துபார்க்கிறேன்.வாழ்த்துக்கள் :)

Kalai

ரம்ஸ் பாப்கார்ன் சிக்கன் அருமையோ அருமைப்பா அப்படியே எனக்கே எனக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாப்கார்ன் சிக்கன் ரொம்ப நல்லா இருந்துச்சு ரம்யா.வாழ்த்துக்கள் :)

Kalai