குண்டு கைகளை எப்படி குறைப்பது

அன்பு தோழிகளே,
எனது கைகள் (Arms)மிகவும் குண்டாக உள்ளது,நானும் எல்லா வேலைகளையும் நானேதான் பார்க்கிறேன்,ஆனாலும்,கைகள் குறைய மாட்டேங்குது,நெட்டில் தேடிபார்த்தால் உடற்பயிற்சிகள் தான் விதவிதமாக உள்ளது,உபகரணங்கள் இல்லாமல்,எளிமையான முறையில் செய்யும் பயிற்சிகள் இருந்தால் கூற முடியுமா??

எனக்கும் அதே பிரச்சனை தான்.யாராவது உதவி செய்றாங்களா என்று பார்ப்போம்.

மஞ்சு & லலிதா,

நெட்டில் பார்த்த அதே முறையில் டம்பிள்ஸ்(Dumbells) உபயோகிப்பதற்க்குப் பதில் இரண்டு வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு செய்யலாம், இப்படியே முதலில் ஒரு லிட்டர் பாட்டிலில் ஆரம்பித்து பின் மெதுவாக பெரிய பாட்டில்களை உபயோகிக்கலாம்.

எனது கைகள் மிக மிக பெரிதாக உள்ளது எப்படி குறைப்பது

ஹாய் மஞ்சு, குடிக்கும் தண்ணீரில் எப்போதும் பெருஞ்சீரகம் போட்டு வைத்து அந்தத் தண்ணீரையே குடியுங்கள்.

மேலும் பால் சேர்க்காத டீயில் (வேண்டுமானால் க்ரீன் டீ) பெருஞ்சீரகத்தைக் கொஞ்சமாகப் போட்டு காலை மாலை இரு வேளையும் குடித்து வந்தாலும் கையில் உள்ள ஊளைச்சதைகள் வெகுவாகக் குறைந்து கைகள் அழகாகக் காட்சியளிக்கும்.

கைகளை முன்னோக்கியும் பின்னோக்கியும் தனித்தனியாகவும் சேர்த்தும் சுற்றலாம். இந்தப் பயிற்சியைத் தினமும் காலை மாலை 20 நிமிடங்கள் செய்தால் போதும். கைகள் அழகாகிவிடும்.

அதற்குமேல், எண்ணெய், இனிப்பு, உப்பு அதிகமுள்ள பதார்த்தங்களைக் குறைத்துச் சரியான டயட்டை மேற்கொண்டால் இன்னும் நல்லது.. நன்றி

அன்புடன்,
சுபா

மஞ்சு

தினமும் காலை ல ஈஸியான எக்ஸர்சைஸ் செய்துட்டு வந்தாலே குண்டு கை மட்டும் இல்ல உடலும் ஸ்லிம் ஆகும்

1. இரண்டு கால்களையும் சேர்த்து நேராக நிற்கவும்.

2. இரண்டு கைகளையும் எடுத்து இடுப்பில் வைக்கவும்.

3.இடுப்பில் உள்ள கைகளை எடுக்காமல் வலது பக்கமும், இடது பக்கமும் வளையவும்.

4. இதே போல ஒரு பக்கம் 15 முறையும் மறுபுறம் 15 முறையும் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் கைகலில் உள்ல தேவையற்ற கொழுப்பு குறைந்து விடும்

5. கைகளை உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் உங்கள் உடம்பிற்க்கு பின்னால் கொண்டு செல்லவும் இவ்வாறு செய்யும் போது கைகளில் உள்ள சதைகள் நல்ல வடிவ பெறும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்