ரியா ஃபோளி

தேதி: March 1, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (6 votes)

 

மைதா - ஒரு கப்
முட்டை - ஒன்று
மஞ்சள் தூள்
உப்பு
ஃபில்லிங் செய்ய:
ஸ்மோக்டு டூனா மீன் - ஒன்று (அ) 2 துண்டுகள்
உருளைக்கிழங்கு - ஒன்று
வெங்காயம் - கால் பாகம்
கிதியோ மிருஸ் - பாதி
வறுத்த கறி தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு - ஒரு தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய் - சிறிது தாளிக்க
பந்தன் / ரம்பை இலை - 2 சிறு துண்டுகள்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு


 

மைதாவுடன், முட்டை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
இதனுடன் தேவையான நீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.
மீனை சுத்தம் செய்து பொடித்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். உருளைக்கிழங்கு சேர்க்காமல் செய்வதென்றால் 2 மீன் துண்டுகள் பொடிக்கவும்.
வெங்காயம், கிதியோ மிருஸ், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், பந்தன் / ரம்பை இலை தாளிக்கவும். பின் வெங்காயம், கிதியோ மிருஸ், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் உப்பு, கறி தூள் சேர்த்து பிரட்டவும்.
தூள் வாசம் போனதும் தேங்காய் பால் விட்டு உருளைக்கிழங்கு மற்றும் பொடித்த மீன் சேர்த்து நன்றாக பிரட்டி வதக்கி இறக்கவும். ஃபில்லிங் தயார்.
தவாவை சூடாக்கி மாவை விட்டு ஆப்பம் போல மெல்லியதாக பரவும்படி செய்யவும்.
சிறுதீயில் ஒரு பக்கமாக வேக விட்டு எடுத்து விடவும். ஒரு ஓரமாக ஃபில்லிங் வைக்கவும்.
பிரியாமல் இருக்க படத்தில் உள்ளது போல முதலில் மடித்து கொள்ளவும்.
அப்படியே ரோல் செய்தால் மாலத்தீவு ஸ்பெஷல் ரியா ஃபோளி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரெசிப்பு சூப்பர்,டின் மீன்னா வெரைட்டியா? இல்லை மீனை சுத்தம் செய்து முள்ளில்லாமல் டின்னில் விற்பனைக்கு வருகிறதா?தெளிவு பண்ணுங்க.எனக்கு மீனின் முள்ளை கண்டால் பயம். நம் ஊரில் முல்லில்லாத வஜ்ஜிரமில் செய்யலாமா?

விஜி
கடைசி படம் அழகா இருக்கு..
விதவிதமான குறிப்புகள்.அசத்துங்க :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

விஜி அக்கா ரியா ஃபோளி டேஸ்டி அண்ட் சூப்பர் குறிப்பு படங்கள் பளீச் பளீச்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

விஜி,

ரியா ஃபோளி அழகா இருக்கு! குறிப்பு புதுசா இருக்கு! படங்கள் அத்தனையும் பளிச்சுனு சூப்பரா இருக்கு!! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

விஜி ரியா ஃபோளி படமும் குறிப்பும் அருமையா இருக்குங்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

விஜி வித்தியாசமான குறிப்பு:) படங்கள் பளிச்னு இருக்கு..
வாழ்த்துக்கள்:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

விஜி, இன்னிக்கு ரியா ஃபோளி செய்தேன். ஸ்மோக்ட் டூனா வுக்கு பதில் பொரித்த வஞ்சிரம் மீன் உதிர்த்து சேர்த்து செய்தேன். ரொம்ப டேஸ்டியா இருந்துச்சுங்க. ரொம்ப நன்றி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

விஜி,

கலர்புல் குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரியா ஃபோளி செய்தேன்..ரொம்ப நல்லா இருந்துச்சு.குறிப்புக்கு நன்றி.

Kalai