சாக்கோ ரோல்

தேதி: March 1, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (13 votes)

 

அவுட்டர் லேயர் செய்ய:
ஏரோ ரூட் பிஸ்கட் (அ) மேரி (அ) பிரிட்டானியா பிஸ்கட் - அரை பாக்கெட்
கோகோ பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
பவுடர் சுகர் - ஒரு தேக்கரண்டி
பால் - சுமார் ஒரு கப் (அ) தேவைக்கு
ஃபில்லிங் செய்ய:
இன்ஸ்டண்ட் காஃபி பவுடர் - அரை தேக்கரண்டி
ரூம் டெம்பரேச்சரில் வைத்த பட்டர் - கால் கப்
பவுடர் சுகர் - அரை கப்
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
வால்நட் - பொடித்தது


 

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பிஸ்கட்டை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஃபில்லிங் செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து கரண்டியால் நன்கு கலக்கி க்ரீம் பதத்தில் அடித்து தனியே வைக்கவும். வால்நட்டை மட்டும் தனியாக வைக்கவும்.
அவுட்டர் லேயர் செய்ய வேண்டிய கலவைகளை ஒன்றாக போட்டு கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்த்து பிசையவும்.
நன்கு ஒட்டாத பதத்தில் சப்பாத்தி மாவு போல வர வேண்டும்.
பின் அதை உருளையாக உருட்டி, ஃபாயில் பேப்பரில் திரட்டவும். மிகவும் மெல்லியதாக திரட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
காஃபி பட்டர் க்ரீமை அதன் மேலே வைத்து, கத்தியால் சமமாக தடவவும். பின் பொடித்த வால்நட்டை தூவி விடவும்.
அதை அப்படியே பக்குவமாக உருட்டி, பின் ஃபாயில் கொண்டு அதை சுருட்டி குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின் அதை வட்டமாக வெட்டி பரிமாறவும். சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு விரைவில் செய்ய கூடிய சாக்கோ ரோல் தயார். இதற்கு கண்டன்ஸ்டு மில்க் அல்லது மில்க் மெயிட் தேவை இல்லை. காஃபி க்ரீமுடன் சாப்பிட சுவையாக இருக்கும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ரம்ஸ்,
பார்க்கவே சூப்பரா இருக்குபா...நான் கண்டிப்பா கூடிய சீக்கிரம் செய்துபார்க்கப்போகிறேன்...:-)

ரொம்ப சூப்ப :) எனக்கு இந்த அளவுக்குலாம் பொறுமையா செய்ய வராது... அழகா செய்திருக்கீங்க. கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

wow, super choco role... seiarathukkum easy ya iruku, kandipa try panren. congrats ramya..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சூப்பர்வ் !!! படங்கள் அருமை அதிலும் கடைசி படம் அவ்வளவு அழகா இருக்கு. :-) எவ்வளவு நேர்த்தியாக, அழகா ரோல் பண்ணி இருக்கீங்க. வெரி நைஸ். வாழ்த்துக்கள் !!!!

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

ஓ..இதானா அது.,,,!!!
லவ்லி...கண்டிப்பா செஞ்சுட்டு சொல்றேன்...
மேரியும் ,சாக்கோவும் இல்ல வாங்கிட்டு செய்யறேன்
அழகோ அழகு !

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரம்ஸ், உங்களுக்கு 'ரோல்ஸ்' ரம்யா என்று பட்டம் சூட்டிட‌லாம்! :‍) நீங்க செய்த 'ஸ்விஸ் ரோல்ஸ்'ஏ இன்னும் என் மனசைவிட்டு போகலை, இப்போ 'சாக்கோ ரோல்ஸ்'!! :‍)

ரொம்ப‌ அழ‌கா இருக்கு ரம்ஸ்! படங்கள் அத்தனையும் பளிச், பளிச்!! சூப்பர்ர்!! சுலப‌மாவும் இருக்கு. அனேக‌மா இவர், 'ஸ்விஸ்'க்கு முன்னாடி முந்திக்குவார்னு நினைக்கிறேன், பார்க்க‌லாம். ;-) வாழ்த்துக்கள் ரம்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

அழகா இருக்கு. சுலபமாகவும் இருக்கிறதால கட்டாயம் ட்ரை பண்ணுவேன்.

‍- இமா க்றிஸ்

ரம்ஸ் சூப்பர் சூப்பர் பார்த்துக்கிட்டே இருக்கலாம் அப்படி இருக்கு வாழ்த்துக்கள் பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சாக்கோ ரோல்
ரம்ஸ் சாக்கோ ரோல் செய்துட்டேன்........:-) ரொம்ப நல்லா வந்தது,குட்டிக்கும் என்னவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.....(என்னவர் என்ன சொல்லுவார்னு கொஞ்சம் பயம் இருந்தது)பட் ஒன்னுக்கு இரண்டா வாங்கி சாப்பிட்டார்பா..தேங்க்ஸ்.....நான் செய்த படம் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கேன் சரியான்னு பாருங்க.

ரம்ஸ் சூப்பர் :) கடைசி படம் பார்த்தாலே சுவை தெரியுது:) கண்டிப்பா முயற்சிப்பேன்:)) வாழ்த்துக்கள்:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

akka idhu senju fridge store panni cut panadhuku aparam velilia vaikalama... etha senju ooruku ellam kondu pogalama akka... anga fridge kidaiyadhu

super Ramya..enna oru pakkuvam

சாக்கோ ரோல் ரம்யா அக்கா சூப்பர் குறிப்பு பார்க்கவே சோ டெம்ப்டிங் யம்மீஈஈஈ டிஷ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரம்யா,
யம்மி ரோல்ஸ்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா,
சாக்கோ ரோல் செய்தேன்...
யம்மி யம்மி!
செய்வதும் சுலபம் தான்...

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

nan 2 times sanju parthan ka.. its really tasty.. yen husband um puditchu iruku nu sonar..
I need a help.. any one tell me how to upload recipe in this website

Keep Smiling

Wow super Erika. Yummy