வெஜ் ப்ரெட் ரோல்

தேதி: March 1, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (13 votes)

 

1. சாண்ட்விச் ப்ரெட் - 12 துண்டுகள்
2. கேரட் பொடியாக நறுக்கியது - 1 கை
3. பீன்ஸ் பொடியாக நறுக்கியது - 1 கை
4. உருளைக்கிழங்கு - 1 பெரிது
5. கறிவேப்பிலை - சிறிது
6. கொத்தமல்லி - சிறிது
7. வெங்காயம் - 1/2
8. சாம்பார் பொடி - 2 - 3 தேக்கரண்டி
9. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
10. எண்ணெய் / வெண்ணெய் / நெய் - தேவைக்கு
11. உப்பு தேவைக்கு


 

காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்து வடிக்கவும். உருளையை வேக வைத்து மசிக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதில் வேக வைத்த காய்கறிகள் சேர்த்து பிரட்டி, தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
தூள் வாசம் போனதும் மசித்த உருளை சேர்க்கவும். கொத்தமல்லி தூவி நன்றாக பிரட்டி எடுத்து வைக்கவும். கலவை தயார்.
ப்ரெட் துண்டுகளை ஓரங்களை நறுக்கவும்.
ஒவ்வொரு துண்டாக எடுத்து பூரி கட்டையால் அழுத்தி தேய்க்கவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு தேய்க்கவும்.
இதன் நடுவே ஒரு பக்கமாக காய் கலவை வைத்து ஓரங்களை நீரால் ஈரம் செய்து அப்படியே இரண்டாக மடித்து மூடி ஒட்டவும்.
இவற்றை ஈரத்துணியில் மூடி 15 நிமிடம் வைக்கவும்.
தவாவில் எண்ணெய் / வெண்ணெய் / நெய் விட்டு மடித்த ப்ரெட் துண்டுகளை போட்டு எல்லா பக்கமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.
சுவையான வெஜ் ப்ரெட் ரோல் தயார்.


இந்த வகை குட்டீஸ்க்கு மிகவும் பிடிக்கும். ஓரம் வெட்டாமல் இருந்தால் ஒட்ட வசதியாக வராது. நான் ப்ரெட்டில் வெட்டிய ஓரங்களையும் சிலவற்றை பொடியாக நறுக்கி கலவையில் கலந்து கொண்டேன். குழந்தைகளுக்கு என்பதால் காரம் இது குறைவு தான், விரும்பினால் கூட்டிக்கொள்ளலாம். சாண்ட்விச் ப்ரெட் அளவு பெரிதாக மடிக்க வசதியாக இருக்கும். சாதாரண ப்ரெட்டிலும் செய்யலாம். நெய் பயன்படுத்த வேண்டும், ஆனால் குறைவாக பயன்படுத்த வேண்டும் என விரும்பினால் நெய் / வெண்ணெயை உருக்கி ப்ரெட் துண்டுகள் மேல் ப்ரஷ் செய்து வெறும் நான்-ஸ்டிக் தவாவில் பொரிக்கலாம். இப்படி செய்யும் போது ஒன்று போல் நெய் பரவியும் இருக்கும், அளவும் குறைவாக எடுக்கும்.
http://arusuvai.com/tamil/node/20368
இந்த குறிப்பில் உள்ள அதே முறை தான்... ஆனால் காய்கறிகள் என்பதால் ரோல் செய்யாமல் அப்படியே மடித்திருக்கிறேன். காய் அளவு அதிகம் வைக்க இயலும். இதில் ஸ்டஃபிங்காக சிக்கன் எலும்பில்லாதது, டூனா மீன், கொத்துகறி என எதை வேண்டுமானாலும் செய்து வைக்கலாம். ஸ்க்ராம்பில்டு எக் கூட காய் கலவையுடன் சேர்த்து வைக்கலாம். கீரை வகைகளும் பயன்படுத்தலாம். இதில் எதை செய்வதென்றாலும் இதே முறையில் முதலில் வதக்கி விட்டு ஸ்டஃப் செய்ய வேண்டும். சாம்பார் பொடிக்கு பதிலாக மிளகாய், தனியா கலவையும் பயன்படுத்தலாம். அல்லது கறி வகை என்றால் பச்சை மிளகாய் மற்றும் மிளகு சீரக தூள் கலவையும் சுவை சேர்க்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

veg bread role super....:) easy receipe....seikirama try panidaren...congrats..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மிக்க நன்றி :) ட்ரை பண்ணிடு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா