தக்காளி குருமா

தேதி: March 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (12 votes)

 

தக்காளி - 3
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
அரைத்த தேங்காய் விழுது - 2 கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
தாளிக்க:
ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, புதினா, எண்ணெய்


 

எண்ணெயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, வெந்ததும், தேங்காய் விழுது சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான தக்காளி குருமா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

super ah panirukinga mam

maha

கவி தக்காளி குருமா ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி தக்காளி குருமா அருமை:)
வாழ்த்துக்கள்:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சூப்பர் குருமா :) சுலபமான குருமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

மஹாலக்ஷ்மி,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஸ்வர்ணா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அருள்,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

i like it very much ... super...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"