help pannunga thozhis

என்னுடைய பெயர் கிருத்திகா. எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு ஆசை இல்லை ஆசை என்பதை விட லட்சியம் என்றே சொல்லலாம். முதியோர் இல்லம் வச்சு நடத்தனும் முதியோர்களை நல்லா பாத்துக்கணும் என்று ஒரு ஆசை அதுக்கு என்ன பண்ணனும் ஹெல்ப் பண்ணுங்க தோழிகளே

ஹாய் கிருத்திகா,
வாழ்த்துக்கள். உங்கள் லட்சியம் எளிதில் நிரைவேரட்டும். எனக்கும் இதே லட்ச்சியம் தான் பா

கிருத்திகா சிஸ்டர்,

உங்கள் லட்சியம் உண்மையாகவே பாராட்டக்குரியது. பிறருக்கு உதவும் குணம் கொண்ட உங்களுக்கு வாழ்வில் எல்லாம் வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன் . கண்டிப்பாக நம் தோழிகள் தெரிந்த விஷயத்தை கூறுவார்கள். இதை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது , இருந்தாலும் தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்,

முதலில் உங்கள் அருகில் உள்ள முதியோர் இல்லங்களை நேரடியாக சென்று பார்த்து தயங்காமல் , உங்களுடைய சந்தேங்கங்களை கேளுங்கள் . நல்ல விஷயத்துக்காக தானே கேட்கறீங்க , கண்டிப்பாக உங்களுக்கு தேவையான தகவல்களை தருவார்கள். அதன் நல்லது, கெட்டது, பிரச்சனை, செலவு போன்றவற்றை ஆராய்ந்தபின் உங்கள் குடும்பத்திரனிடமும் கலந்து ஆலோசித்து தொடங்குங்கள். தேவைபட்டால் சட்ட ஆலோசனைகளும் பெறுங்கள்.

உங்களுக்காக மேலும் சில தகவல்கள் கூகுளில் இருந்து,

* தொண்டு நிறுவனங்கள் அரசில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* முக்கியமாக நீங்க நடத்தபடும் இல்லம் ஜாதி, மத, இன பேதமின்றி அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும்.
* லாப நோக்குடன் செயல்படக் கூடாது.
* நிறுவனம் அனைத்து வசதிகளுடன் நலப்பணிகளை செயல்படுத்த தேவையான பணியாளர்களுடன் நிலையானதாக இருக்க வேண்டும்.
* சுத்தமான குடிநீர், தனித்தனி படுக்கைகள், அதற்குறிய பொருட்கள் அனைத்தும் வழங்க வேண்டும்.
* பொழுது போக்கு, இறை வழிபாடு, வரவேற்ப்பு, மருந்து, இருப்பு, சமையலறை பொருட்கள் வைப்பு போன்றவற்றுக்கு தக்க வகையில் தனித்தனி அறைகள் பராமரிக்க வேண்டும்.
* குறைந்தது ஒரு சமூகப் பணியாளர், உதவியாளர், காவலர், சமையலர் மற்றும் துப்பரவாளர்கள் ஆகிய பணியாளர்கள் இருக்க வேண்டும்.

இதெல்லாம் இருந்தால் மட்டுமே அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும்ன்னு போட்டு இருந்தது. எதற்கும் நீங்கள் நான் மேலே சொன்ன மாதிரி உங்கள் அருகில் உள்ள கருணை இல்லங்களை அணுகி தெரிந்து கொள்வது தான் சிறந்தது.

உங்கள் எண்ணம் சீக்கிரம் கை கூட நான் இறைவனை வேண்டி கொள்கிறேன்.

“முதியோர் இல்லம் என்பது ஒதுக்கப்பட்ட மக்களுக்காக என்னும் நிலை & நினைப்பு மாறணும்.
அவர்கள் வயதுக்கேற்ற ஒரு நட்பு வட்டம் உருவாகுவதையும், நண்பர்களா மகிழ்ச்சியா அவுங்க வாழும் இடமாவும் இருக்கணும்.”- இது என் தனிப்பட்ட கருத்து. கூடிய விரைவில் இந்த மாதிரியான ஒரு முதியோர் இல்லம் நீங்க நடத்த என்னுடைய வாழ்த்துக்கள் . :-))

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மேலும் சில பதிவுகள்