ஐஸ்டு லெமன் டீ

தேதி: March 4, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

பொடியாக நறுக்கிய லெமன் க்ராஸ் - 2 - 3 மேசைக்கரண்டி
டீ தூள் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)
தேன் - சுவைக்கு (விரும்பினால்)


 

லெமன் க்ராஸ் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து ஒன்றரை கப் நீர் விட்டு பாதியாக குறையும் வரை கொதிக்க விடவும்.
பின் டீ தூளை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். டீ தூள் போட்ட பின் கொதிக்க விட வேண்டாம்.
3 - 5 நிமிடம் கழித்து கலவையை வடிகட்டவும். அப்படியே லெமன் க்ராஸ் சுவை மாறாமல் குடிக்க விரும்பினால் இதையே சூடாகவோ, ஆற வைத்து ஐஸ் கட்டி சேர்த்தோ குடிக்கலாம்.
இன்னும் சற்று லைட்டாக மாற்றி, சுவை கூட்ட: கலவையுடன் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்.
ஒரு கப்பில் தேன் விட்டு, டீ கலவை எந்த அளவு விடுகிறோமோ அதில் பாதி அளவு குளிர்ந்த நீர் விட்டு சில ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பரிமாறவும். குளிர்ச்சியான, மணமான, சுவையான ஐஸ்டு லெமன் டீ தயார்.

லெமன் க்ராஸ் பல உடல் உபாதைகளுக்கு நல்ல மருந்து. அவற்றில் சில சளி, இருமல், தொண்டை புண், பேக்டீரியல் இன்ஃபெக்‌ஷன், கொலஸ்ட்ரால் போன்றவை. அது மட்டுமின்றி இதை அருந்துவதால் உடல் ரிலாக்ஸ் ஆகவும், நல்ல தூக்கம் கிடைக்கவும் செய்யும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி அட்டகாசம் ஐஸ்டு லெமன் டீ பார்த்துக்கிட்டே இருக்கலாம் கடைசி படம் அழகோ அழகு :) வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

டீ போட்டு அறுசுவைக்கு அனுப்பிட்டு ஊருக்கு கிளம்பியாச்சா? 3 ரோஸஸ் குடிச்சு அலுத்துபோய் வேறு மாற்றுவழி தேடிக்கொண்டிருந்தேன். இதை முயற்சிக்கலாம் போல் படுது.சீக்கிரமே குடித்துப்பார்த்துட்டு அனுபவத்தையும் பதிவுசெய்யறேன் :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

beautiful ... enakku oru tea parcel....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

படம் எல்லாம் அட்டகாசமா இருக்கு வனி. 5* :)

‍- இமா க்றிஸ்

போட்டோ ரொம்ப அழகா இருக்கு,ஹெல்தி குறிப்பு கொடுத்ததற்கு நன்றி

ஐஸ்டு லெமன் டீ super vani....:) congrats...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வனி லெமன் டீ அருமை:) ஆரோக்கியமான பானம் கொடுத்திருக்கீங்க:)
வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி,

ஐஸ்டு லெமன் டீ அருமையான ஹெல்தி குறிப்பு! படங்கள் அத்தனையும் சூப்பர், அதிலும் அந்த கடைசிப்படம் அட்டகாசம்!! ஃபுட் மேகசின்ஸ்ல அட்டைப்படத்தில் வரும் ஃபோட்டா மாதிரி சும்மா தூள் பறக்குது! :) வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

வனிதா அக்கா இந்த மாதிரி படங்கள போட்டே ஆசைய கிளப்புறீங்க :) குறிப்பு ஹெல்தி :) செய்துடுவோம் :)

Kalai

சூப்பர் லெமன் கிரஷ் கும்பகோணத்தில் எங்கு கிடைக்கும் பன்டான் இழையும்

டீ

ஆஹா.. இது தான் எனக்கு ஏற்ற டீ..
சூப்பர்.. மில்க் சேர்க்காத இதை போன்ற டீ இருந்துட்டா போதும் எனக்கு.
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குறிப்பு அருமை,படங்கள் சூப்பர்.கடைசி படம் கண்ணுக்கு குளிர்ச்சி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனி,
பால் இல்லாத டீ..
ஒருமுறை டெஸ்ட்+டேஸ்ட் பண்ணிட்டு சொல்றேன்.
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வனி அக்கா ஐஸ்டு லெமன் டீ நல்ல ரிப்ரெஷிங் ஆன ட்ரிங்க் .........

இதுகுனு முன்னடி நா லெமொன் டீ வீட்ல பன்னும் போது லெமன் ஜூஸ் டீ தூள் போட்டு கொதிக்க் வச்சுட்டு இரக்கி சுகர் பவுடர் போட்டு ஐஸ் குயூப்ஸ் போட்டு குடிப்பேன் .......

நெக்ஸ்ட் டைம் தேன் சேர்த்து சாப்ட்டு பாகுரேன் அக்கா நல்ல சுறு சுறூப்பேத்தும் டீ அப்புரம் அந்த கடைசி படம் தூள் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஃபோட்டோக்களே உங்கள் பெயர் சொல்லுது. ரொம்ப அழகு. கொடுத்திருக்கும் குறிப்பும் அருமை

அன்புடன்,
ஹலீமா

Engalukkaaga tea poatta Vanitha accavuku oru o poadunga (*_*)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேன்க்யூ சுவா ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹஹஹா... டீ போட்டு ரொம்ப நாளாச்சு ;) பயப்படாம முயற்சி பண்ணுங்க. தேன்க்யூ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) பார்சல் அனுபிட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமையலில் உங்க டேலண்ட் ரொம்ப அதிகமா தெரியுதே எப்படி

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) //ஃபுட் மேகசின்ஸ்ல அட்டைப்படத்தில் வரும் ஃபோட்டா// - எனக்கும் அப்படிலாம் எடுக்க தான் ஆசை... ஆனா வர மாட்டங்குது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) எனக்கு உங்க ஏரியான்னு தெரியலங்க... சாரி. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாருங்க உங்களுக்காகவே டீ அனுப்பி இருக்கேன் ;) ட்ரை பண்ணுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவசியம் செய்துட்டு சொல்லுங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லெமன் டீ வேற, லெமன் க்ராஸ் டீ வேற... இரண்டும் சுவை, வாசம் நல்ல வித்தியாசம் தெரியும். ட்ரை பண்ணுங்க. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களை பார்த்து ரொம்ப நாள் ஆகுது... நலமா :) மிக்க நன்றி ஹலீமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேன்க்ஸ் ஃபார் தி “ஓ “ :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிகமெல்லாம் இல்லைங்க... எல்லாரையும் போல தான் சமைக்குறேன். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா