அறுசுவைக்கு ஆயிரம் நன்றி :)

அன்பு தோழிகளே....சமீபத்தில் லியோனி அவர்களோட பட்டிமன்றத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது..அறுசுவையில் பங்கேற்றபின் நான் கலந்துகொண்ட ஐந்தாவது பட்டிமன்றம் இது :)

இயல்பாகவே பட்டிமன்றப்பேச்சில் ஆர்வம் அதிகம் இருந்தாலும் அறுசுவை ஒன்றுதான் அந்த ஆர்வத்தை தீனி போட்டு திவ்யமாய் வளர்த்து விட்டது...

இதில் பங்கு கொண்ட ஒவ்வொரு பட்டிமன்றமும்,உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் நீங்களும் மட்டுமே என் மூளையை சிறப்பாக செதுக்கிய சிற்பிகள் என்று சொன்னால் அது மிகையில்லை

எனக்கு பலவிதத்திலும் ஊக்கமும்,உற்சாகமும் கொடுக்கும் தோழிகள்

முக்கியமாய்வனிதா,கவிதா,கல்பனா,ஸ்வர்ணா,சீதாம்மா,தேவா,ரம்யா,

பிந்து,அருள்,ராஜி,கவிதா,சிவக்குமார்,சுபா....குணா,ஆசியா,தளிகா,இமா..

இன்னும் எல்லா தோழிகளுக்கும்,என்னை மெருகேற்றும் அறுசுவையை
மெருகேற்றும் நண்பர் பாபுக்கும் ஆயிரம் நன்றிகள்...

என் பங்களிப்பிற்கான சில பட்டிமன்ற வீடியோக்கள் இணையத்திலும் முகபுத்தகத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிறேன்...விருப்பப்பட்டால்மட்டும் பார்த்து கருத்துக்கள் சொல்லுங்கள்..

அன்புடன்
இளவரசி

முதல்ல இப்படி ஒரு அருமையான திறமைசாலிக்கு எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இன்னும் நான் வீடியோ பார்க்கல, இவ்வளவு நேரம் நெட் டவுன்... வந்தா இப்படி ஒரு தலைப்பு... யாருடா அதுன்னு உள்ள நுழைஞ்சேன் ;) மகிழ்ச்சி மகிழ்ச்சி.... அளவற்ற மகிழ்ச்சி. மென்மேலும் பல வெற்றிகள் பல குவியட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா இளா... ரொம்ப ரொம்ப... ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்கள் திறமைக்கும் முயற்சிக்கும் எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இளா. மென்மேலும் பல மேடைகளில் உங்கள் பேச்சு ஒலிக்க வேண்டும். அதை நாங்கள் கேட்க வேண்டும். கலக்குங்க இளா :)

நீங்க போட்ட ரெண்டு வீடியோவும் பார்த்துட்டேன் மூணாவது பார்ட்டுக்கு வெய்ட்டிங் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இளவரசி அக்கா பதிவு பார்த்த்துமே ரொம்பவே சந்தோஷம் உங்கள் சிறப்பான பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் மேடம், FB ல இன்னும் பார்க்கலை, போய் பார்க்கிறேன்ங்க,

நட்புடன்
குணா

அக்கா சர்ச் ல என்னனு போய் தேடி பார்க்கனும் உங்க வீடியோ பார்க்க முகபுத்ததுலயோ இல்ல யூடூப் லயோ போய் பார்க்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இளா நானும் உங்களுடைய சில பட்டிமன்றங்களை பார்த்திருக்கிறேன்.. அருமையா பேசியிருந்தீங்க.. பல பல பட்டிமன்றங்களில் கலந்துக் கொண்டு மென்மேலும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இளா மிகிழ்ச்சிக்கு அளவே இல்லைங்க ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்கள் திறமைக்கு 5 பட்டிமன்றம் என்ன 5000 பட்டிமன்றத்துல கலந்துப்பீங்க அதுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் :) :) :)
இரண்டு வீடியோ பார்த்துட்டேன் மூனாவது இப்பதான் பார்க்கபோறேன் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு மிக்க மகிழ்ச்சி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி,கவி,குணா,ரேவா,ஸ்வா,கனி மிக்க நன்றி

கனி...முகபுத்தகத்தில அறுசுவை க்ரூப்ல போட்டிருக்கேன்....அதுல நீங்க இருந்தா பார்க்கலாம் அது தவிர்த்து பார்க்க இன்னும் யூடீயூப்ல பப்ளிக்கா மாத்தல செட்டிங்..சில ப்ரச்சனைகள் தவிர்க்க..

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பார்த்துட்டேன் பார்த்துட்டேன் ;) அருமை. எந்த டிவி’ல வரும் இந்த ப்ரொக்ராம்? கலைஞரா?? எப்போ எத்தனை மணிக்கு?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதுவரை தெரியல...ஏதாவது வொகேஷனலி போடுவாங்கன்னு நினைக்கிறேன்....உடனே இருக்காது அது பற்றி தகவல் தெரிஞ்சதும் சொல்றேன்..நன்றி!

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்