ப்ராக்கலி ஃப்ரிடாட்டா சமையல் குறிப்பு - படங்களுடன் - 25290 | அறுசுவை


ப்ராக்கலி ஃப்ரிடாட்டா

வழங்கியவர் : Susri27
தேதி : புதன், 06/03/2013 - 12:02
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
5
4 votes
Your rating: None

 

  • ப்ராக்கலி பூக்கள் - 2 கப்
  • முட்டை - 6
  • துருவிய சீஸ் - 1/3 கப்
  • சிகப்பு வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு)
  • ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப‌

 

வெங்காய‌த்தை பொடியாக‌ ந‌றுக்கி வைக்க‌வும். ப்ராக்க‌லி பூக்க‌ளை சுத்த‌ம் செய்து ஆவியில் வேக‌ வைத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில், 4 முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதனுடன் மற்ற இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து சிறிது உப்பு, மிளகுத் தூள் கலந்து அடித்து வைக்கவும்.

ஒரு வாயகன்ற இரும்பு (Cast Iron Skillet) தவாவில் எண்ணெயை விட்டு சூடாக்கவும். வெங்காயம் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.

பின் ப்ராக்கலி துண்டுகளை சேர்த்து வதக்கவும். ஏற்கனவே வெந்திருப்பதால், ப்ராக்கலி சிறிது வதங்கினாலே போதுமானது.

வெங்காயம் மற்றும் ப்ராக்கலி கலவையை பரவலாக வைத்து, அதன் மேல் கலக்கி வைத்திருக்கும் முட்டை கலவையை காய்களின் மேல் முழுவதும் படுமாறு பரவலாக ஊற்றவும்.

அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். சுமார் ஒரு 5 - 7 நிமிடங்களில், ஓரம் கெட்டியாகவும், நடுவில் கொஞ்சம் நீர்ப்பதமாகவும் இருப்பதுப்போல தெரியும்போது, துருவிய சீஸ் தூவி விடவும். விருப்பப்பட்டால் மேலும் சிறிது மிளகுத் தூள் தூவலாம்.

பின்னர் அவனை ப்ராய்ல் (Broil) செட்டிங்கில் வைத்து, இந்த பேனை அதில் வைத்து, சீஸ் உருகி மேற்பரப்பு கெட்டிப்பட ஆரம்பமாகும் போது வெளியே எடுத்துவிடவும்.

பிறகு துண்டுகள் போட்டு பரிமாறவும். சுவையான ப்ராக்கலி ஃப்ரிடாட்டா (Broccoli Frittata) தயார்.

ஃப்ரிடாட்டா (Frittata) ஒரு இத்தாலியன் உணவு வகையாகும். வழக்கமாக முட்டையுடன் காய்கறிகள், இறைச்சி, சீஸ் சேர்த்து செய்யும் ஒரு வகை தடிமனான ஆம்லெட் வகை இது. ப்ராக்கலியை ஸ்டீம் குக் செய்யும்போது அதிகமாக வேக‌ விடாமல், அளவாக வெந்து அதன் பசுமை நிறம் மாறாமல் இருக்கும்போதே எடுத்துவிடவும். அப்போதுதான் அதன் க்ரிஸ்ப்பினெஸ் போகாமல் சுவையாக இருக்கும். ப்ராய்ல் மோடில் வைத்து எடுக்கும்போது கவனமாக அருகில் இருந்து எடுக்கவும். அவனில் வைத்த ஃப்ரிடாட்டா செட் ஆக மிகச் சில நிமிடங்களே தேவைப்படும்.சுஸ்ரீ

ஹைய்யா... பேக் வித் ப்ரோக்கலி ;) சூப்பர். குட்டீஸ் ஸ்பெஷல்... அருமையா செய்திருக்கீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஸ்ரீ

நல்லா இருக்கு செய்துட்டு சொல்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சுஸ்ரீ

சுஸ்ரீ அருமையா இருக்கு குறிப்பு கண்டிப்பா முயற்சிக்கிறேன்....வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுஸ்ரீ

விருப்பபட்டியலில் போட்டிருக்கேன். கண்டிப்பா செய்வேன் விரைவில் . ப்ராக்கலி ப்ரியைக்கு வாழ்த்துக்கள்.:-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

சுஸ்ரீ

நல்ல சத்தான குறிப்பு.நான் கொஞ்சம் பாலும் சேர்த்து ஸ்பினாச் ஃப்ரிடட்டா செய்வேன்.ப்ராக்கலில செய்து பார்கிறேன்.வாழ்த்துக்கள் :)

Kalai

சுஸ்ரீ அக்கா

சுஸ்ரீ அக்கா அருமையானா குறிப்பு ரொம்ப அழகா இருக்கு படங்களலாம் ப்ராக்கலி ஃப்ரிடாட்டா நல்ல டிஷ் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுஸ்ரீ

சுஸ்ரீ மீண்டும் ப்ராக்கலியோட வந்தாச்சா சூப்பர்ங்க ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஶ்ரீ...:)

அருமைங்க, எப்பிடி இப்பிடி எல்லாம் அசத்தலான குறிப்பு கண்டு பிடிக்கிறீங்க.. எனக்கு இங்க சலிசா கிடைக்கிறதே ஃப்ரக்கோலி தான், அடுத்த முறை வாங்கினதும் செய்துடரேன்... வாழ்த்துக்கள்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுஸ்ரீ

இப்படியும் செய்யலாமா ஈசியா இருக்கு பா செய்து பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சுஸ்ரீ,

சுஸ்ரீ,

சூப்பர் ஹெல்தி..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா