சாக்லெட் கேக்

தேதி: March 7, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (10 votes)

 

டேப்லெட் சாக்லெட் - 200 கிராம்
மைதா - 200 கிராம்
சீனி - 100 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
முட்டை - 3
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
ஐஸிங் செய்ய:
ஐஸிங் சுகர் - 125 கிராம்
வெண்ணெய் - 10 கிராம்
நியூடெல்லா - 2 தேக்கரண்டி


 

தேவையானவற்றை தயாராக வைக்கவும்.
வெண்ணெய், சாக்லெட் இரண்டையும் உருக்கிக் கொள்ளவும்.
முட்டை, சீனியை நன்கு கலக்கவும்.
உருக்கிய வெண்ணெய், சாக்லெட் கலவையை, முட்டை, சீனி கலவையுடன் ஒன்றாக சேர்த்து கலக்கவும். அதனுடன் மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு அடிக்கவும்.
வெண்ணெய் தடவிய கேக் ட்ரேயில் ஊற்றவும்.
200 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 20 நிமிடம் வரை வேக வைக்கவும். ஆறிய பின்பு கேக் ட்ரேயை விட்டு தனியே எடுக்கவும்.
ஐஸிங் சுகர், வெண்ணெய் சேர்த்து பீட்டரால் கலக்கவும். தேவையானபடி ஐஸிங்கை பிரித்து விரும்பிய நிறங்கள் சேர்த்து குழைக்கவும்.
கேக் ஆறியதும், நியூடெல்லா தடவி, கலந்து வைத்துள்ள ஐஸிங் கொண்டு விரும்பியவாறு அலங்கரிக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பு அருமை.

‍- இமா க்றிஸ்

முசி குறிப்பு மிக அருமை வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முசி ரொம்ப நல்லாருக்குங்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அழகா, அருமையா கேக் செய்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.அருள்,உங்க பருப்பு சாதம் செய்தேன் சம ருசி.நல்லா இருந்தது.தனி பதிவிட்டு உள்ளேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வருகைக்கும்,பதிவிர்க்கும் நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கு. அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள்.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

சூப்பர் கேக் முஹசீனா .வாழ்த்துக்கள் :)

Kalai

முசி,

கண்கவரும் குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

முசி அக்கா ரொம்ப அருமையா இருக்கு அக்கா சாக்லெட் கேக் சோ யம்மி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முசினா,சாக்லெட் கேக் சூப்பர்.

லிமா;வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி...

கலா:ரொம்ப நன்றி.

கவிதா:மிக்க நன்றி.

கனி:மிக்க நன்றி.

கலை:வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கீரீம்

முசி அக்கா
என்க்கு ஐசிங் சரியாக அமைவதில்லை .plz help