மல்லி குழம்பு - 2

தேதி: March 7, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (5 votes)

 

1. கொத்தமல்லி இலை - 1 பெரிய கைப்பிடி அளவு
2. வெங்காயம் - 1
3. தக்காளி - 1
4. கறிவேப்பிலை - 1 கொத்து
5. மிளகு - 1/2 தேக்கரண்டி
6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
7. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
8. மிளகாய் வற்றல் - 2
9. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
10. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
11. மஞ்சள் தூள் - சிறிது
12. உப்பு
13. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
14. உருளை - 2 [விரும்பினால்]


 

பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.
இதில் பாதி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
தேங்காய் வாசம் வந்ததும், கொத்தமல்லி இலையை நறுக்கி சேர்க்கவும்.
கொத்தமல்லி லேசாக சுருண்டதும் சாம்பார் தூள் போட்டு பிரட்டி எடுக்கவும்.
ஆறியதும் தேவையான நீர் விட்டு நைசாக அரைக்கவும்.
மீண்டும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். உருளை சேர்க்க விரும்பினால் தோல் நீக்கி சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். உப்பு போட்டு மூடி வேக விடவும்.
இதில் அரைத்த விழுது சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும்.
பின் தேவையான நீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழம்பு பதத்தில் கொதிக்க விட்டு எடுக்கவும்.
சுவையான மல்லி குழம்பு தயார். சூடான சாதத்துடன் அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு வனிதா

நான் செய்து பார்த்தேன். நன்றாக வரவில்லை.

செண்பகா சேகர்

அடடா... என்ன சரியா வரலன்னு சொல்லுங... சரி பண்ண பார்க்கலாம். ஏன்னா எனக்கு ரொம்ப சரியா வந்துது. இதெல்லாம் அடிக்கடி செய்வது தான், புது உணவு இல்லை. இனி செய்தா ஸ்டெப் ஸ்டெப்பா படம் அனுப்பி வைக்கிறேன். உதவும் உங்களுக்கு :) செய்து பார்த்து பதிவிட்டமைக்கு நன்றி சென்பகா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
எளிமையான,சுவையான குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா