தந்தூரி பனீர்

தேதி: October 2, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பனீர் - 250 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

பனீரை விரல் அளவு துண்டுகளாக நறுக்கவும். அதோடு எல்லாவற்றையும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் அதிலிருந்து பனீரை மட்டும் வெளியே எடுத்து மெல்லிய குச்சியில் சொருகவும்.
மைக்ரோவேவ் தட்டில் 3 அல்லது 4 குச்சிகளை வைக்கவும். பின் அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி மைக்ரோ ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும்.
விருப்பப்பட்டால் கொத்தமல்லி இலை, எலுமிச்சைச்சாறு சேர்த்து பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்