தக்காளி உருளை கடைசல்

தேதி: March 9, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (9 votes)

 

தக்காளி - 3
உருளைக்கிழங்கு - 3
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மல்லித் தழை


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
தக்காளி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும்.
அதனுடன் பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, தக்காளி, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். ஓரளவு வதங்கியவுடன் உப்பு சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு மூடி வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் மத்தினால் நன்கு கடைந்து விட்டு மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான தக்காளி உருளை கடைசல் தயார். சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

wow, super and easy dish, nanum ippidi than panuven..ana potattova thania vega vechu machichuduven. thanx for the receipe... congrats...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அருள் ரொமப் அருமையா இருக்கு சுலபமாகவும் இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருள் தக்காளி உருளை கடைசல் செய்துட்டேன். ரொம்ப சுவையாகவும் செய்ய சுலபமாகவும் இருந்தது. வாழ்த்துக்கள் அருள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுலபமான குறிப்பு.சுவையாவும் இருக்கும்.நிச்சயம் செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள் :)

Kalai

தக்காளி உருளை கடைசல் நல்லா செய்து காண்பிச்சிருக்கீங்க. படங்களும் அழகு - வாழ்க வளமுடன்

சுமி வாழ்த்துக்கு நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி சுவா பதிவிற்கும் வாழ்த்திற்கும் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவி செய்து பார்த்து பதிவிட்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பதிவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுதா பதிவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள் ,

எளிமையான குறிப்பு ..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

தக்காளி உருளை கடைசல் செய்து சாப்பிட்டாச்சு அருள் சோ ஈஸிங்க டேஸ்ட் நல்லா இருந்துச்சு எல்லாருக்கும் பிடிச்சது. நன்றி

சூப்பர் குறிப்பு. எனக்கு பிடித்ததும் கூட. எங்க அம்மாவும் சேம் இப்படி தான் செய்வாங்க. டேஸ்ட் ரொம்பவே நல்லா இருக்கும். அழகா செஞ்சு காமிச்சு இருக்கீங்க. வாழ்த்துக்கள் :-)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

கவி பதிவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தேவி சமைச்சு பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுதா பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தக்காளி உருளை கடைசல் பார்க்கவே அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருட்செல்வி,
இன்று தக்காளி உருளை கடைசல் சப்பாத்திக்கு சைடிஷாக செய்தேன்... செம யம்மி... செய்வதும் சுலபம்...

உருளை கிழங்கை மட்டும் தனியே மைக்ரோவேவ் அவனில் வேக வைத்து சேர்த்தேன் :) சேர்த்து வேக வைக்க பொறுமை இல்லை... குக்கரில் வேக வைத்தால் குக்கர் கழுவனுமே :P

நன்றி அருள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய் அருள் அக்கா
அம்மா-வும் இதெ மெதொடில் தான் செய்வாங்க பட் சீரகத்துக்கு பதிலா மல்லி விதை யூஸ் பண்ணூவாங்க...எனக்கு ரொம்ப பிடிச்ச sidedish for idly,dosa...

சப்பாத்திக்கு இந்த சைட் டிஷ் செய்தேன், நல்ல ருசியாக இருந்தது.