சுறா மீன் குழம்பு

தேதி: March 11, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.5 (2 votes)

 

சுறா மீன் - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மல்லித் தழை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
அரைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி
தயிர் - கால் கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

மீனை சுத்தம் செய்து கொதி நீரில் போட்டு எடுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த தேங்காயில் உப்பு, தனியா தூள், மிளகு, சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தழை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் தயிர் சேர்த்து வதக்கவும்.
கரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். பின் சிறு தீயில் 15 நிமிடம் வைத்து மசாலா வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முசி மீன் குழம்பு பார்க்கவே அருமையா இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முசி குறிப்பு அருமை வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முசி,
சூப்பர் ஹெல்தி குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

முசி அக்கா மீன் குழம்பு வாசம் இங மணக்குது சூப்பர் குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மீன் குழம்பு பார்க்கவே நல்லா இருக்கு.சாப்பிடனும் போல இருக்கு.சாதாரன மீன் குழம்பு-யும் இப்படி தான் செய்யனுமா?

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிர்க்கும்,வாழ்த்திக்கும் மிக்க நன்றி.

அருள்:வாழ்த்திர்க்கு நன்றிகள் பல.

மிக்க நன்றி.கவிதா.

கனி:வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.

ஸ்ரீசுதா:மிக்க நன்றி,பெரிய வகை மீன்களிலும் செய்யலாம்,புளி சேர்க்காமல்,குருமா மாதிரி செய்வதுதான் இது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நல்லா இருக்குங்க சிம்பிளா... படங்கள் அழகு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி,உங்க கையால படம் அழகுன்னு பாராட்டு வாங்கியது,சந்தோசம் தாங்க முடியல.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.