பட்டர்நட் ஸ்குவாஷ் சட்னி

தேதி: March 12, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

பட்டர்நட் ஸ்குவாஷ் - கால் பாகம்
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
புளி - நெல்லியளவு
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவைக்கு ஏற்ப
காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப)
சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க


 

தேவையானவற்றை எடுத்து வைக்கவும். பட்டர்நட் ஸ்குவாஷ் காயை தோல் சீவி, விதை நீக்கி துண்டுகளாக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளித்து, கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி, பச்சை மிளகாய், பட்டர்நட் ஸ்குவாஷ் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். புளி சேர்த்து ஆற விடவும்.
ஆறியவுடன் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
சுவையான பட்டர்நட் ஸ்குவாஷ் சட்னி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா அக்கா பட்டர்நட் ஸ்குவாஷ் சட்னி செய்முறை யும் குறிப்பு ரொம்பவெ வித்யாசமா இருக்கு அக்கா ரொம்ப கல்ர்புல்லா இருக்கு டிஷ் பார்க்கவே நல்ல குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வித்தியாசமான குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கவி சூப்பர் சட்னி.வாழ்த்துக்கள் :)

Kalai

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கனி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கலா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

எளிமையான குறிப்பு :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி குறிப்பு அருமை வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி ,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அருள்,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா