மிளகாய் ஊறுகாய்

தேதி: March 12, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (5 votes)

 

பஜ்ஜி மிளகாய் (அ) காரம் குறைவான மிளகாய் - 10
சீரகம் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். மிளகாயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும்.
சீரகம், வெந்தயம், கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் புளிக் கரைசல், உப்பு சேர்த்து வேக விடவும்.
மிளகாய் வெந்ததும் வறுத்து பொடித்த பொடியை சேர்த்து கிளறவும்.
அனைத்தும் சேர்ந்து நன்றாக சுருள வதங்கியதும் இறக்கவும்.
சுவையான மிளகாய் ஊறுகாய் தயார். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இதனுடன் தயிர் சேர்த்து கலந்து, சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஸ்ஸ்ஸ்ஸ்......... எப்படி எப்படி எப்படி இப்படி புது புது ஊறுகாயா அசத்துறீங்க. சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் ஸ்பைசி மிளகாய் ஊறுகாய் ஹ்ம்ம் சோ குட்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பு அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஆஹா அடுத்த ஊறுகாய் வந்தாச்சா. செய்துறுவோம் :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

கவி,
சூப்பர் காரம்..
ட்ரை செய்துவிட்டு சொல்கிறேன்..
வாழ்த்துக்கள் !!!

என்றும் அன்புடன்,
கவிதா

இது சூப்பரா இருக்கும்னு நல்லாவே தெரியுது கவி.எடு அந்த பஜ்ஜி மிளகாயை

நன்றி வனி! அம்மா அடிக்கடி செய்வாங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கனி!
நன்றி முசி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

செய்யுங்க ஜெயந்தி! நன்றி!!
நன்றி கவி!
நன்றி தளிகா! சீக்கிரம் செய்யுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி ஊறுகாய் வாரமா இது:) அசத்துறீங்கப்பா, மோர்மிளகாய்தான் சாப்பிட்டிருக்கேன், இப்புடி காரசாரமான ஊறுகாயை கண்ணீர் மல்க சாப்பிடணும் போல இருக்கு கவி:) சீக்கிரமே போட்டோ போடுறேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள் கண்ணீர் மல்க சாப்பிடும் அளவுக்கு வேணும்னா சாதாரண்ண பச்சை மிளகாயில் செய்யுங்க. காரம் தூக்கும் :). பஜ்ஜிமிளகாயில் காரம் அவ்வளவு இருக்காது. நன்றி அருள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!