கேரமல் கஜூர்

தேதி: October 4, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பேரீச்சம்பழம் - அரைக் கிலோ
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - கால் கிலோ
கொக்கோ பவுடர் - 4 தேக்கரண்டி
நெய் - 5 மேசைக்கரண்டி


 

பேரீச்சம்பழத்திலிருந்து விதைகளை நீக்கி அரை மணி நேரம் பாலில் ஊற வைக்கவும்.
பின்னர் பேரீச்சம்பழத்தை எடுத்து அரைத்துக் கொள்ளவும். அத்துடன் கொக்கோவையும் சேர்க்கவும்.
சர்க்கரையில் 3/4 கோப்பை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.
பாகு கெட்டியான கம்பிப்பதம் வந்ததும் அரைத்த பேரீச்சம்பழத்தைப் போட்டுக் கிளறவும்.
பின் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும்.
அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் போட்டு பரப்பவும்.
ஆறியவுடன் விரும்பிய வடிவத்தில் துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்