கருப்பட்டி காபி

தேதி: March 14, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

கருப்பட்டி- 50கிராம்
பால்- தேவையான அளவு


 

கருப்பட்டியை ஒன்றிரண்டாக உடைத்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதி வந்து கருப்பட்டி கரைந்ததும் அடுப்பை அணைத்து அப்படியே மூடி வைக்கவும்.
5நிமிடம் கழித்து கருப்பட்டி நீரை வடிகட்டவும்.
பாலில் தண்ணீர் சேர்த்து காய்ச்சி இனிப்புக்கு தேவையான அளவு கருப்பட்டி நீர் கலந்து பருகவும்.


தயாரித்து வைத்த கருப்பட்டி நீரை ஃப்ரிட்ஜில் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருக்கலாம். குழந்தைகள் காஃபி வேண்டும் என்று அடம்பிடிக்கும் போது இதை கொடுக்கலாம். பெரியவர்களுக்கும் இது உடலுக்கு நல்லது.
இமா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து செய்து எடுத்த படம் இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

கவி,

காபியில் காபி தூள் சேர்க்கத் தேவையில்லையா?

By

JP

"கலங்கிய கண்களை நேசி....
ஆனால் நேசித்த கண்களை கலங்க விடாதே".

JP

காபி தூள் சேர்க்க வேண்டாம். பார்ப்பதற்கு காஃபி கலரில் இருக்கும் அதனால்தான் கருப்பட்டி காபி ன்னு பெயர். காபித்தூள் சேர்த்தும் செய்வார்கள். ஆனால் அதன் சுவை எனக்கு பிடித்தது இல்லை. .

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

டேஸ்ட் பண்ணியாச்சு கவீஸ். யமி ;P

‍- இமா க்றிஸ்

டேஸ்ட் பண்ணியாச்சா! பிடிச்சுதா. சந்தோஷம் இமாம்மா. எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால் இங்கே கருப்பட்டி கிடைக்காது. போனமாதம்தான் சிங்கையில் ஒரு இந்திய கடையில் கருப்பட்டி கிடைச்சுதுன்னு வாங்கிட்டு வந்தேன். இப்போ அடிக்கடி சுவைக்கிறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!