ஆட்டுக்கால் சூப்

தேதி: October 4, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டுக்கால் - நான்கு
வெங்காயம் - இரண்டு
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - நான்கு பற்கள்
தக்காளி - இரண்டு
மிளகு - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - நான்கு
காய்ந்த மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு


 

ஆட்டுக்காலை இடுக்கியால் பிடித்துக் கொண்டு ஒவ்வொன்றாக அடுப்பில் வாட்டி தீய்த்து வைத்துக் கொள்ளவும்.
சூடு ஆறுவதற்கு முன்பாக கத்தியை கொண்டு மேல்பாகத்தை சுரண்டி எடுத்து கழுவிக்கொள்ளவும்.
பிறகு வேண்டிய துண்டுகள் போட்டு வைத்துக் கொள்ளவும்.
இதனுடன் நசுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகு, நறுக்கிய பாதி வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி மற்றும் மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்புத்தூளை போட்டு இரண்டு லிட்டர் தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும்.
நன்கு வெந்து குழம்பானவுடன் சட்டியில் எண்ணெயை காயவைத்து வாசனை பொருட்களை போட்டு பிறகு காய்ந்த மிளகாய், மீதமுள்ள வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
இதை சூப்பில் ஊற்றி நன்கு கலந்து மூடி போட்டு அடுப்பின் அனலை குறைத்து விடவும்.
அரைமணி நேரம் கழித்து நன்கு கலக்கிவிட்டு இறக்கி விடவும்.
கோப்பைகளில் ஊற்றி மிதமான சூட்டில் பரிமாறவும். அல்லது ஆப்பத்திற்கு பக்க உணவாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்