மாத்திரை வேண்டாமே....

அன்பு சகோதரிகளே , எனக்கு 9 மாதங்களுக்கு முன் Abortion ஆகிவிட்டது அதன் பின் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்காக doctor அறிவுரையுடன் மாத்திரை பயன்படுத்தினேன். இந்த மாதம் நான் வேறொரு doctorஐ பார்த்த பொழுது அவர்கள் கூறியதாவது மாத்திரை மூலம் உண்டாகும் மாதவிலக்கானது கருமுட்டை இல்லாமல் வெறும் கண்துடைப்பு அதில் கரு உருவாக வாய்ப்புகள் குறைவு, அதனால் தோழிகளே மாதவிலக்க்ற்க்கு மாத்திரை உபயோகிப்பதை முடிந்தவறை குறைத்துக்கொள்ளுங்கள்.

இயற்கையாக மாதவிலக்கு வர என்ன வகையான உணவு எடுத்துகொள்ல வேண்டும் என்று டாக்டரிடம் கேட்டிங்களா?சொன்னால் மற்ற தோழிகளுக்கும் உதவியாக இருக்குமெ

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

Thanks for in your information

பக்கத்து வீட்டு பொண்ணுக்கு பல மாதங்களா மாதவிலக்கு வராமல் இருந்ததற்கு வைத்தியர் சொன்னது..இது தவறாமல் செய்தால் சில நாட்களிலேயே நிச்சயமா வந்துடுமாம்...சாப்பிடும் ஒவ்வொரு வேளையும் மென்னு மெனு கூழாக்கி சாப்பிடுவது..இரண்டாவது ஈர வேட்டியை இடுப்பில் கட்டி பின் பண்ணி வைத்துக் கொண்டு அது உடம்பில் கிடந்து காயும் வரை விடுவது..இந்த இரண்டு மட்டும் செய்தால் போதும்.

என்னுடைய தோழிக்கும் irregular periods.siddha medicine பாத்தாங்க.marriage agi udanae kulanthaiyum piranthachu.treatement is best

எல்லாம் நன்மைக்கே...

//அதன் பின் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்காக doctor அறிவுரையுடன் மாத்திரை பயன்படுத்தினேன்.// எத்தனை மாதம் மாத்திரை எடுக்கச் சொன்னார்கள்?
கருச்சிதைவின் பின் கருப்பைக்கு ஓய்வு வேண்டும்; அடுத்த குழந்தைக்கு உடனே தயாராக இராது. மீண்டும் எத்தனை மாதம் கழித்து குழந்தை உண்டாவது நல்லது என்பது அவரவர் உடல்நிலையைப் பொறுத்தது. அதனால் அவர்கள் நீங்கள் கருத்தரிப்பதைப் பின்போட மாத்திரை கொடுத்திருக்கலாம். ஏதாவது காரணமில்லாமல் கொடுத்திருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.

‍- இமா க்றிஸ்

இமா, என்னை D&C செய்து Scan செய்யும் போது Doctor உடனே கரு தங்க வாய்ப்பு உள்ளது என்றும் அதற்க்கான வலு கருப்பைக்கு உள்ளது என்றும் கூறினார். ஆனால் எனக்கு மாதவிலக்கு problem இருக்கவே 9 மாதங்களாக Tablets பயன்படுத்தினேன்,இப்பொழுது 1 மாதமாக Periods reguler ஆக Tablets எடுத்துக்கொண்டிருக்கிறேன்

//தோழிகளே மாதவிலக்க்ற்க்கு மாத்திரை உபயோகிப்பதை முடிந்தவறை குறைத்துக்கொள்ளுங்கள்.// என்று மற்றவர்களுக்குச் சொல்லுகிறீர்கள். //இப்பொழுது 1 மாதமாக Periods reguler ஆக Tablets எடுத்துக்கொண்டிருக்கிறேன்// என்கிறீர்கள். !!

எதுவானாலும் நீங்கள் ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்கிறீர்கள் என்பது வரை நல்லதுதான் சகோதரி. மற்றவர்களும் அதே போல மருத்துவ ஆலோசனையின்படி எடுக்கட்டுமே!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்