மூல் (Moule)

தேதி: March 19, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

மூல் (Moule) - ஒரு கிலோ
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
பட்டர் - 50 கிராம்
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு பாக்கெட்
காய்ந்த பார்ஸ்லே - ஒரு மேசைக்கரண்டி
ஆல் ஹெர்பல் இலை - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு மேசைக்கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு - கால் மேசைக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும். மூலின் மேல் ஒட்டி இருக்கும் சிப்பிகளை கத்தியால் சுரண்டி சுத்தம் செய்யவும். சிப்பிகளுக்கு இடையில் காய்ந்த இலை போல் இருக்கும். அதை இழுத்தால் வந்து விடும். பின் அனைத்தையும் சுத்தமாக கழுவவும்.
ஒரு வாயகன்ற பெரிய சட்டியில் பட்டரை உருகவிடவும்.
அதில் பூண்டை பொன்னிறமாக வதக்கவும்.
பின் வெங்காயத்தைப் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
அதனுடன் ஹெர்பல் இலை, பார்ஸ்லே இலை, மிளகுத் தூளைப் போடவும்.
தீயை சற்று அதிகமாக வைத்து சுத்தம் செய்த மூலைப் போட்டு அனைத்தும் வாய் திறக்கும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
அனைத்தும் வாய் திறந்து தண்ணீர் நிறைய விடும்.
தண்ணீர் பாதியாக வற்றியதும் க்ரீமை ஊற்றவும்.
இரண்டு நிமிடம் கழித்து கொஞ்சம் கிரேவியாக வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். ப்ரெஞ்ச் ப்ரையுடன் சூடாக சாப்பிடவும்.

மூலில் கடல் தண்ணீர் இருப்பதால் உப்பாகத்தான் இருக்கும். ஆகையால் கால் மேசைக்கரண்டி உப்பே போதுமானது .ஃப்ரான்ஸில் மிகவும் பிரபலமான உணவு இது. கிறிஸ்துமஸ் நேரத்தில் அவசியம் அவர்கள் உணவு பட்டியலில் இடம் பெறும் உணவு. மூலத்திற்கு நல்லது. கால்சியம் அதிகம் உள்ளது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கு மூள் வேணும் இப்பவே மூள் வேணும்..கல்லுமக்காய் தானே இது?விதவிதமா செய்து அசத்துறீங்க ஜுலைஹா

பார்க்கவே சூப்பரா இருக்கு.நல்ல குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கும் குழுவினருக்கும் நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

எடுத்து சாப்பிடுங்கள் ருபி எல்லாம் உங்களுக்குதான் பதிவிட்டதற்கு ரொம்ப சந்தோஷம் ...இது மட்டி வையை சேர்ந்தது ப்ரான்ஸில் கிடைக்கும் வகை மட்டி ..நீங்க கல்லுமங்காய்னு ஏதை சொல்லுகிறீர்கள் ..கோழி ஆட்டின் இதயத்தைதானே...

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

பதிவிற்கு நன்றி முஹ்சினா

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

//ஆல் ஹெர்பல் இலை - ஒரு மேசைக்கரண்டி// mixed herbs தானே!! அல்லது வேறு ஏதாவதா?

‍- இமா க்றிஸ்

Mussels எனப்படும் சிப்பிக்குள் இருக்கும் இறைச்சியைத் தான்.கடுக்கா என்றும் சொல்லுவோம் ஜுலைஹா

ஆமாம் இமா mixed herbs அதேதான்..பதிவிற்கு நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அப்படியா ருபி நாங்கள் மட்டி என்றுதான் சொல்லுவோம்....பிள்ளைகள் எல்லோரும் நல்லா இருக்கிறார்களா..ப்ரியாக இருந்தால் மெயில் பண்ணுங்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

மூல் அருமையா செய்து இருகீங்க,நானும் ஃப்ரான்ஸில்தான் இருக்கிறேன்,மூல் என்ற தலைப்பை பார்த்தவுடன் இது ஃப்ரான்ஸில் வசிக்கும் ஒருவராதான் இருக்கும் என நினைத்தேன்,எங்க ஊரிலும் இதை மட்டினுதான் சொல்லுவோம்,நான் மூல் வைத்து பாய்லா என்ற ஸ்பெயின் உணவு தயாரிப்பேன்,என் குறிப்பிலும் இருக்கு,போன வாரம் கூட பாய்லா செய்தேன்,மீதி இருந்த mouleஐ என்ன செய்வதென்று தெரியாமல் குப்பையில் போட்டு விட்டேன்,உங்க குறிப்பை இப்போதுதான் பார்த்தேன்,அடுத்த முறை செய்துடுறேன்.நன்றி.

Eat healthy

அஸ்ஸலாமு அலைக்கும்..உங்களின் பதிவிற்கு நன்றி..பாய்லாவில் செய்வதை விட இப்படி செய்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ..இன்ஷாஅல்லாஹ் அடுத்தமுறை செய்துபாருங்கள் நன்றாக இருக்கும்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!