2 இன் 1 ஜாலூர்

தேதி: March 22, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

மைதா - கால் படி
முட்டை - 3 (மாவில் ஊற்ற 2 + ஸ்டஃபிங்கின் மேல் ஊற்ற ஒன்று)
தேங்காய் பால் - ஒரு தம்ளர்
வெங்காயம் - ஒரு துண்டு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
விருப்பமான ஸ்டஃபிங்


 

தேவையானவற்றை தயாராக வைக்கவும். தேங்காய் டின் அல்லது தேங்காயில் பால் பிழிந்தும் எடுத்துக் கொள்ளலாம்.
ஜாலூருக்கென்று பாத்திரக்கடைகளில் இதேபோல் குவளைகள் கிடைக்கும். ஒரு துளை குவளை, 2 துளை குவளை மற்றும் 5 துளைகள் கொண்ட குவளைகளும் இருக்கின்றது. நான் இங்கே 2 துளையுள்ளதை பயன்படுத்தியிருக்கிறேன்.
ஸ்டஃபிங் தவிர அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும். (இல்லையென்றால் சோம்பு, வெங்காயம் போன்றவை மாவு கீழே இறங்காத அளவிற்கு ஜாலூரின் துளைகளில் அடைத்து விடும்).
வடிகட்டிய மாவுடன் ஒரு தம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். மாவு பதம் மிகவும் கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் நெய்யும், ஒரு டிஷ்யூ பேப்பரும் எடுத்துக் கொள்ளவும்.
ஜாலூர் குவளையை நான் பிடித்திருப்பது போல் பிடித்து, விரல்களால் துளைகளை மூடவும். ஒரு பெரிய குழிகரண்டி அளவு மாவை எடுத்து குவளையில் ஊற்றவும். (ஒரு குழிகரண்டி மாவு ஒரு ஜாலூருக்கு சரியாக இருக்கும்.
கையை சுழற்றி சுழற்றி மாவை தோசைகல்லிலோ அல்லது பெரிய தவாவிலோ ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
மாவை ஊற்றியபின் டிஷ்யூ பேப்பரால் நெய்யை தொட்டு ஜாலூர் மேல் ஒற்றி ஒற்றி எடுக்கவும். நமது ஊர்களில் வெற்றிலையால் ஒற்றி எடுப்பார்கள். வெற்றிலை கிடைத்தால் அவ்வாறு செய்யலாம்.
ஜாலூரை ஒரு பக்கம் மட்டும் வேக விடவும். இந்த நிறத்திலிருக்கும் போது எடுத்துவிடவும். இந்த ஜாலூருடன் மட்டன் அல்லது சிக்கன் குழம்பு நன்றாக இருக்கும். வட்டலப்பம் சேர்த்தும் சாப்பிடலாம்.
2 ஜாலூர்களை வைத்து அதன் நடுவில் ஸ்டஃபிங் வைத்து, அதன் மேல் முட்டையை கலந்து ஊற்றவும்.
முர்தபாவை மடிப்பதுபோல் 4 பக்கங்களையும் மடிக்கவும்.
மடித்ததும் தவாவில் போட்டு எல்லா பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும். இது ஜாலூர் பராட்டா. 2 இன் 1 ஜாலூர் தயார்.

எனது முர்தபா குறிப்பில் செய்தது போலவே இதற்கும் ஸ்டஃபிங் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்கள் ரெசிபி அழகா இருக்கு , பூ பொல உல்ல படம் மிக அழகா இருக்கு.

நன்றி செய்து பாருங்க

Eat healthy

ரொட்டி ஜாலா... ;) எனக்கும் பிடிக்கும். நினைவுபடுத்தியமைக்கு நன்றி. அவசியம் உங்க முறையில் செய்துடுறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பா குவளை வாங்கிட்டு செய்துட்டு சொல்றேன். :)

நல்லா செய்து இருக்கீங்க,நானும் இப்படி தான் செய்வேன்.மடக்கிய பின்,மேலே முட்டை தடவி செய்வேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Assalamu Alaikum razia unga reciepe senjean romba nalla irundhuchu but unga alavuku shape varala

ஜால்ரு குவலை துபாயில் எங்கே கிடைக்குது. பிளீஸ் எனக்கு தெரிவிக்கவும் பா.

செய்து பாருங்க,நானும் உங்க ரொட்டி ஜாலா செய்து பார்க்கிறேன்.

Eat healthy

நன்றி சுபத்ரா,வாங்கி செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

Eat healthy

வாழ்த்துக்கு நன்றி,நானும் மேலேயும் முட்டை தடவுவேன்,தடவாமலும் செய்வேன்.

Eat healthy

வ அலைகும் சலாம் ஃபாத்திமா,உங்க பேர் வித்தியாசமா இருக்கு,,முதலில் நீங்கள் செய்வதால் கொஞ்சம் சரியாக வராமல் இருந்திருக்கும்,அடுத்தமுறை என்னைவிட சூப்பரா செய்வீங்க பாருங்க.

Eat healthy

ஜாலூர் குவளையை நீங்க துபாயில் வாங்க நினைக்கிறீங்க,ஆனால் நான் நம்ம ஊரிலேயே கடைகளில் கிடைக்காமால் அலைந்தேன்,பிறகு என் அம்மா வைத்திருந்ததை எடுத்து வந்தேன்,நீங்கள் ஊரிலேயே விசாரிக்க சொல்லுங்கள்.

Eat healthy

Hi frnds how r u?

உன்னை போல பிறரையும் நேசி.

Hello devi,we r well,how r u?

Eat healthy