இஞ்சி குழம்பு

தேதி: March 22, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (8 votes)

 

இஞ்சி (விரல் அளவு) - ஒன்று
புளி - கோலி அளவு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
பூண்டு - 10 பல்
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு, கொத்தமல்லித் தழை, மிளகு - தேவைக்கு
நல்லெண்ணெய்
தாளிக்க:
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உளுந்து, கடலைப் பருப்பு


 

புளியைக் கரைத்து கொள்ளவும். நல்லெண்ணெயில் மிளகு, சீரகம், 2 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.
எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் புளி நீர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் அரைத்த விழுது, ஆல் பர்பஸ் பொடி சேர்த்து ஒரு கொதி விடவும்.
சுவையான இஞ்சி குழம்பு தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

சளி, ஜுரம், உடல் அசதியாக இருக்கும் சமயத்தில் சாப்பிட ஏற்றது. வேண்டுமெனில் காரம் குறைவாக சேர்த்துக் கொள்ளவும்.

ஆல் பர்பஸ் பொடிக்கு இங்கே சொடுக்கவும் : <a href="/tamil/node/15911"> ஆல் பர்பஸ் பொடி </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சரியான நேரத்தில் இந்த குறிப்பை கொடுத்துட்டீங்க. வீட்டில எல்லாருக்கும் சளி இருமலா இருக்கு நாளைக்கே செய்துடுறேன் பார்க்கவே எப்ப சாப்பிடுவோம்னு இருக்கு. நன்றிங்க

பார்க்கவே அழகா இருக்கு,,. அருமையான குறிப்பு ... செய்து பார்த்துட்டு சொல்றேன் ...வாழ்த்துக்கள்

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ஹாய் கவி, நலமா

இஞ்சி குழம்பு எனக்கு பிடித்த உணவுகளிள் ஒன்று. கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்றேன் கவி. நன்றி.

அன்புடன்
பவித்ரா

காரசாரமான குறிப்பு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

தேவி,
செய்து பார்த்து சொல்லுங்க
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சங்கீதா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பவித்ரா,
நலம்.நீங்க நலமா?
செய்து பார்த்து சொல்லுங்க
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா