கேப்சிமல்லிமின்ட் துவையல்

தேதி: March 22, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

குடமிளகாய் நறுக்கியது -கால் கப்

மல்லித்தழை நறுக்கியது-கால் கப்
புதினா இலை-கால் கப்

கறிவேப்பிலை-கால் கப்

நறுக்கிய வெங்காயம் கால் கப்

நறுக்கிய தக்காளி-கால் கப்

கடலைப்பருப்பு-1டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு-1டீஸ்பூன்

காய்ந்தமிளகாய்-2

பச்சைமிளகாய்-1
பூண்டுப்பொடி-1டீஸ்பூன்
உப்பு தேவைக்கு
எண்ணைய் வதக்க


 

வாணலியில் எண்ணை ஊற்றி கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு,மிளகாய் போட்டு வதக்கி எடுக்கவும்
பின் மீதி எண்ணையில் வெங்காயம் ,தக்காளி,குடமிளகாய்,மல்லித்தழை,
புதினா,கறிவேப்பிலைஎல்லாம் ஓன்றன்பின் ஓன்றாக போட்டு வதக்கவும்.அதோடு பூண்டு பொடி சேர்க்கவும்.
முதலில்பருப்பு மிளகாய் போட்டு ஒரு சுற்று சுற்றி பின் வதக்கியமீதி கலவையை போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.


பூண்டுபொடிக்கு பதில் மூன்று பூண்டு பல் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இளவரசி,
ரொம்ப சுவையாக இருந்தது
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ட்ரை பண்ணி பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி...துவையல்/சட்னி குயீன் நீங்க...நீங்க சொன்னா மகிழ்ச்சிதான்..:)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி அக்கா உங்க கேப்சிமல்லிமின்ட் துவையல் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது ரொம்ப நன்றி