குக்கீஸ்

தேதி: March 23, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (8 votes)

டேப்லெட் சாக்லெட் - 50 கிராம்
மைதா - 80 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
சீனி - 50 கிராம்
முட்டை - ஒன்று
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
வெனிலா சுகர் பவுடர் - அரை தேகரண்டி

சாக்லெட்டை சிறிது சிறிதாக பொடித்து வைக்கவும்.
வெண்ணெயை உருக்கி அதனுடன் சீனி, வெனிலா சுகர் பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதனுடன் முட்டையைச் சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்றாகும்படி பீட்டரால் நன்கு கலக்கவும்.
பொடித்த சாக்லெட் சேர்த்து கலக்கவும்.
வெண்ணெய் தடவிய கேக் ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு குக்கீஸ் போல் இடவும். 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.
சுவையான குக்கீஸ் ரெடி. டீ, காபியுடன் பரிமாறவும். இந்த அளவில் 15 குக்கீஸ் செய்யலாம். விரும்பினால் சாக்லெட் சேர்க்காமலும் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

-

Kalai

நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள் :)

Kalai

நல்ல குறிப்பு. சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி கலா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பார்க்க சூப்பர் பா

மூஸி அஸ்ஸலாமு அலைக்கும் குக்கீஸ் எழிமையாவை இருக்கு
இந்த பதிவை குடுத்ததீன் நோக்கமே நீங்கள் கீழை குடுத்து இருக்கும் வசனம்தான் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் உண்மை நன்றி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

நன்றி ஷஹ்லா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வஅலைக்கும் ஸலாம் மிக்க நன்றி பல்கிஸ்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பார்க்கவே சூப்பரா இருக்கு அக்கா.. கண்டீப்பா செய்வேன்..
அறுசுவை.com கு எப்படி ரெசிபி அனுப்புரது..
யாராவது சொல்லுங்க Please..

Keep Smiling

மிக்க நன்றி.அவசியம் செய்து பாருங்க.arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Thanks akka

Keep Smiling