***சமூகப்பொறுப்பின் வெளிப்பாடுகள்***

என்னடா அங்க பட்டிக்கும் இதே தலைப்பு, இங்க அதே தலைப்பில் ஒரு இழையான்னு பார்க்கரீங்களா?
பேச்சு மட்டும் போதுமா தோழீஸ்,நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிய வேணாமா?
சமூகத்தில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களில் உங்களை பாதித்த அல்லது நீங்கள் பாரட்டக்கூடிய,அல்லது அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய செய்திகள் இருப்பின் இவ்விழையில் தெரிவியுங்கள்.
அனைவரும் அதுபற்றி தம் கருத்துகளை பகிர்ந்துக்கலாம்.........

இளைஞர்களின் அடுத்தகட்ட போராட்டம் "வாக்காளர் அட்டையை சமர்ப்பிப்பது....

மேட்டுப்பாளையம் டூ கோவை வழியில் இன்று அதிவேக பேருந்து இடித்து இறந்த பெண்ணிற்காக மக்கள் எழுச்சியடைந்து பேருந்து எரிக்கப்பட்டது.தெரியுமா தோழீஸ்? கொஞ்ச நாட்களாய் தனி மனிதனும் சமூகம் பற்றி யோசிக்க துவங்கியுள்ளான்......இது வெரும் ஆரம்பம் மட்டுமே...இதுபோல இது இப்படித்தான் என சொல்லும் அறிவுகலந்த தைரியமும்,ஏன்?எதற்கு?ன்னு கேள்வியும், கேட்டாள் மக்கள் பிழைப்பர்.......

சமூக பொறுப்பை நினைத்து நான் நொந்து கொள்வது சினிமா தான்..என்று தான் இந்த கொடூரமான கொலை சீனையும் ஆபாசமான காட்சிகளையும் நிறுத்தும் காலம் வருமோ..இப்போல்லாம் முன்பை போல் நச்சுன்னு குத்தும்போது முதுகு பக்கம் மட்டும் அல்லது முகபாவத்தால் காட்டுவது இல்லை ..நிஜத்தில் எப்படி இருக்குமோ அவ்வளவு கொடூரமாக பார்த்து பார்த்து பிள்ளைகளுக்கெல்லாம் இனி நேரில் கண்டாலும் பெரிசா எந்த ரியாக்ஷனும் இல்லாத அளவுக்கு இதனை எளிமையாக்கிக் காட்டுகிறது..ஆபாசமும் அதே தான் கதைக்கு சற்றும் பொருந்தாதபோதும் சில சமயம் ஒரு ஐட்டம் நம்பர் வேண்டும் என்பதற்காகவே இடையில் எதாவது ஒரு ஆபாச நடனம் வருவது காண்கிறோம்....கொலை கொள்ளையில் சீரோவா இருக்கிறவனுக்கும் எப்படியெல்லாம் கொல்லலாம் த்ரிஉடலாம் என்பதை பல கோணத்தில் ரொம்பவும் புத்திசாலித்தனமாக காட்டுகிறது..இது தினம்ந்தோரும் நம் வீட்டு வரவேற்பறையில் டிவியில் ஓடிக் கொண்டிருப்பதால் ரொம்ப கவலைப்படுகிறேன்...
பிறகு டபுள் மினிங் டயலாக்ஸ்..கேட்கும்போது எதோ ட்ரெஸ் இல்லாம இருப்பது போன்ற உணர்வு வர வேண்டும் மாறாக பெரியவங்களே அதை கேட்டு சிரிக்கிற அளவுக்கு நம்மை சினிமா எந்தளவுக்கு மாத்தி வெச்சிருக்கு.இப்படியாக குழந்தைகள் குழந்தைகளாகவே இல்லை பெரிய பெரிய பேச்சு அதை கேட்டு சிரிக்கிற பெற்றோர்கள் என்று எந்த நிலமைக்கு சென்று கொண்டிருக்கோம் எஙிற கவலைபுரியாமல் இருக்கோம்

தளிகா,
சினிமாவில் மட்டுமல்ல இப்பெல்லாம் நாடகங்கள்கூட முன்னேறிவிட்டன.ஒரு சீரியலில் தண்ணீரில் அழுத்தி கொலைசெய்யும் காட்சி,அதை தத்ரூபமாக அழுத்துவது,மூச்சு விடும்போது காற்றுக்குமில் வருவது,பின்சுவாசம் அடங்குவதுன்னு தெளிவா காட்டராங்க.குழந்தைகள் இதை செயல்படுத்தினா விபரீதமாகிடும்ல?

இப்பெல்லாம் வில்லன்ஸ் கம்மிப்பா,வில்லிகளுக்குதான் மாஸ் ஜாஸ்தியாகிடுச்சு.பெண்களை கேவலமாகவும்,மூர்கமாகவும்,அரக்கிகளாகவும் காட்டுகின்றனர்.அடுத்தவளின் கணவனை விரும்புவது தவறென
காட்டாமல்.அவனை அடைய இவள் செய்யும் செயல்களை சரியென்பதுபோல சித்தரிப்பது கொடுமதான............>???

தோழர் அண்டு தோழீஸ் இங்கேமுதுமலை கூடலூர் சுற்று வட்டாரத்தில் சில வாரங்கள் முன் காட்டு யானை காலில் அடிபட்டு வந்துள்ளது.அதற்கு வன அதிகாரி ஒருவர் தொடர் சிகிச்சையளித்து குணம் பெறவைத்தார். அதன் நன்றீயாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவரைக்காண வந்து சொல்கிறது அந்த காட்டு யாணை. இதில் என்ன விஷேசம்னா இதனை பார்க்க வரும் மக்களை கண்டு யானை செல்லும்போது அவர் அதட்டி பொகவேணாம் காட்டுக்குள்போன்னு சொன்னா அதனை கேட்டு அடிபணிந்து செல்கிறது. குட்டியிலிருந்து வளர்க்கும் செல்லபிராணிகள் சொல்பேச்சு கேட்பது வேறு.ஆனால் காட்டில் வளர்ந்த மூர்க்க குண யானை செய்நன்றியால் அவர் சொல்கேட்டு நடப்பதும்.அவரைக்கான நாள்தவறாமல் வந்து செல்வதும் மகிழ்ச்சியாக உள்லது.
பல மானிட பிறப்புகள் செய்நன்றி மறந்து நடக்கும் இக்காலத்தில் இந்த யானையின் செயல் ஆச்சரியமாகவும்கூட இருக்கிறது.

சமீபத்தில் கோவையில் ஒருவர் வாங்கிய புதினா கட்டில் பாம்பு இருந்துள்ளது ...தோழிகளே உஷார்....

ஹலோ ரேணுகா அக்கா,
இந்த‌ தலைப்பை பார்த்ததும் நம் சமூகத்தின் பல‌ பிரச்சனைகள் கண் முன்னே வந்தது அதில் ஒன்றை உங்கள் முன் வைக்கிறேன்.
மேல் நாட்டிலிருந்து பல‌ பொருட்கள் உட்பட‌ நாகரிகத்தையும் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறோம். நாகரிகம் பெருகிவிட்ட‌ இக்கால கட்டத்தில் மனிதன் எவ்வளவோ மாறியிருக்கிறான்.இந்த மாற்றத்தின் விளைவு என்ன?
இண்டர்னெட் மற்றும் பேஸ்புக்கும் இறக்குமதியாகியுள்ளது இண்டர்னெட்டில் எதை போடுவது என்று விவஸ்தை இல்லாமல் போயிற்று. எவ்வளவு நன்மை உள்ளதோ அவ்வளவு தீமையும் உள்ளது.அடுத்து உடை எவ்வளவு மோசமாக‌ உடை அணிகிறார்கள் பார்ப்பவர்கள் கண்ணை கூசுகிறது இது என்ன‌ நாகரிகமோ தெரியவில்லை.
அமெரிகன் கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லையென்றாலும் பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது கண்டிப்பாக‌ மது அருந்த‌ வேண்டுமாம் இதுவும் நாகரிகமாம். இப்படி மேல் நாட்டு நாகரிகத்தை கொண்டு வந்து நம் நாகரிகத்தை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். இதை வைத்து நம் சமூகத்தில் பல‌ தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது இது மிகவும் வேதனைக்குரியது.

என்றும் நட்புடன்
மீனாகண்ணப்பன்

பாரதியின் வரிகளை கொச்சைப்படுத்தியதாக ய்ர்ரும் நினைக்கவேண்டாம். நம் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் பொழுது, நாம் என்ன காட்டுமிராண்டி வாழ்க்கை வாழத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு, நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்களா நம்முன்னோர்கள், அவர்கள் வாங்கி கொடுத்த சுதந்திரத்தை நாம் பயன்படுத்தும் முறை கண்டால் அவர்களே நொந்துதான் போவார்கள்.

நேற்று வரை நன்கு நடமடிக்கொண்டிருந்த ஒரு இளைஞன் இன்றோ, ஹாஸ்பிட்டலில் உயிரற்ற பிணமாய்க்கிடக்கின்றான். வரிகளை தட்டும்போதே உடல் நடுங்கிக்கொண்டேதான் இருக்கின்றது. எங்கள் ஊரில் நடந்த விசயம் இது, தன் நண்பனுடன் மதியம் வரை உரையாடிக்கொண்டும், விழாவிற்கும் சென்ற இளைஞன். இரவு 7 மணிசுமாருக்கு, பக்கத்தில் இருக்கும் தன் உறவினர் வீட்டுக்கு நடந்து செல்லும் போது, குடிபோதையில் வந்த ஒருவர் தன் பைக்கை மோதி இந்த மாபெரும் கொடுமையைச் செய்துள்ளார். இத்தனைக்கும் அரசு ஊழியர், அதற்காக தனியார் ஊழியர் செய்தால் தவறில்லை என்ற நோக்கில் கூறவில்லை. ஒரு அரசாங்க ஊழியர் படிப்பும், அனுபவமும் பெற்றிருப்பார். இப்படியா ஒரு உயிரை பறிக்கும் அளவிற்கு குடித்து விட்டு வண்டி ஓட்டுவார்.
வெளியில் நன்றாக சென்ற தன் மைந்தன், இந்த நிலைக்கு உள்ளான நிலை கண்டு அத்தாயின் உயிர் என்ன பாடு பட்டிருக்கும். பெற்ற வயிறுதான் என்ன துடி துடித்திருக்கும்.

குடிக்கு காரணம் அரசு என்று பழியை ஒட்டு மொத்தமாக, அரசின் மேல் போட்டு பிரயோசனமில்லை. வட்டிலில் இருப்பது சோறா? இல்லை வேறொன்றா என பிரித்து பார்த்து உண்ணமுடியாத நிலையிலா இருக்கிறார்கள் குடிபோதையாளர்கள்? இல்லையே வக்கணையாக கேட்டு வாங்கி திங்கமுடிகிறதுதானே!! அப்படியானால் குடிபோதையில் வண்டியை தொடக்கூடாது என்னும் எண்ணம் ஏன் ஏற்படுவதில்லை.

இதெல்லாம் வெளிநாடுகளில் நடக்கிறதா?
தனிமனித ஒழுக்கம் என்பதே அறவே அழிந்துவிட்டதா??
பெண்களை போகப்பொருளாகப்பார்க்கும் ஒருகூட்டம், குடிபோதையில் மற்றவர் உயிரை குடிக்கும் இன்னொரு கூட்டம்... நம்நாட்டில் உயிர்வாழ்வது என்பதே, தற்காலத்தில் பெரும் சவாலாக இருக்கும் போலுள்ளது.
வருங்கால சந்ததியினருக்கு நாம் என்னத்தை விட்டுச்செல்லப்போகிறோம்? மரத்தை அழிக்கின்றோம், காட்டை கூறு போடுகின்றோம், நீர்நிலையை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்கிறோம், இதெல்லாம் எங்கு கொண்டு போய்விடப்போகிறதோ தெரியவில்லை :(

வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ

ஹாய் சிவிஸ்ரீ,

எல்லோருக்கும் உரைக்கிற‌ மாதிரி, ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கீங்க‌.

முன்பெல்லாம் மூவிஸ்ல‌ நல்லவரான‌ ஹீரோ குடிக்க‌ மாட்டார், வில்லன் கெட்டவன், கைல‌ க்ளாஸ் வச்சிட்டு, ட்ரிங்க் பண்ற‌ மாதிரி ஸீன்ஸ் இருக்கும். இப்ப‌ என்னடான்னா, ஹீரோ, ஹீரோயின் உள்பட‌ எல்லோருமே பார்ல‌ இருக்கற‌ மாதிரிதான் காமிக்கறாங்க‌.

மீன்ஸ், குடிக்கறது ஹீரோயிஸம், எஞ்ஜாயிங், ஃப்ரீக் அவுட் இப்படித்தான் மெசேஜ் கிடைக்குது.

தெருவுக்குத் தெரு டாஸ்மாக், யார் வேணும்னாலும் வாங்கலாம்.

18 இயர்ஸ்க்கு மேலதான் டுபாக்கோ, லிக்கர் விக்கணும்னு ரூல் இருக்கறதெல்லாம் காத்தோட‌ காத்தா போயிட்டே இருக்கு.

ஸ்கூல் ஃபைனல்ஸ் படிக்கற‌ பசங்க‌ குடிக்கறாங்கன்னு கேள்விப்படறப்ப‌, பாக்கறப்ப‌, பதறுது.:(:(

ராஜாஜி சொன்ன‌ ஒரு கதை:

காட்டு வழியா ஒரு இளைஞன் போயிட்டு இருந்தானாம். அங்கே மோகினிப் பிசாசு ஒரு பெண் வடிவத்துல‌, ஒரு கையில் ஒரு கொழந்தை, இன்னொரு கையில‌ கள்ளுப்பானை, இடுப்பில‌ சொருகின‌ அருவாள், இதெல்லாம் வச்சிகிட்டு, அவனை வழி மறிச்சுதாம்.

நீ ஒரு பாவமாவது செய்தால்தான் ஒன்ன‌ உயிரோட‌ விடுவேன்னு சொல்லுச்சாம்.

ஒண்ணு என்னோட‌ சேர்ந்திருக்கணும், அல்லது இந்தக் குழந்தய‌ வெட்டணும், அல்லது இந்தப் பானைல‌ இருக்கற‌ கள்ளை முழுசுமா குடிச்சிடணும் அப்படின்னு மிரட்டுச்சாம்.

அந்த‌ இளைஞன் பயந்துட்டானாம். பொண்ணை சீரழிக்கறது தப்பு, குழந்தைய‌ வெட்டறது அதை விடப் பெரிய‌ பாவம், அதனால‌ பேசாம‌ கள்ளு குடிச்சிடலாம்னு குடிச்சானாம்.

போதை தலைக்கேறி, அந்தப் பெண்கிட்ட‌ தவறா நடக்க‌ முயற்சி செய்தானாம், அந்தக் குழந்தை அழுததும், போதையில் அந்தக் குழந்தையையும் வெட்டிட்டானாம்.

எல்லா தப்புக்கும் பேஸ் ஆக‌ இருக்கறது குடி போதைதான் அப்படின்னு எக்ஸ்ப்ளெயின் பண்றதுக்கு, ராஜாஜி இந்தக் கதையை சொல்லியிருக்கார்.

உண்மைதானே.

குடிகாரர்கள்னு சொல்றத‌ விட‌, குடி நோயாளிகள் அப்படிங்கற‌ வெர்ட்தான் கரெக்டா இருக்கு.

ஜூனியர் விகடன்ல‌ 'மயக்கம் என்ன‌' அப்படிங்கற‌ தொடர் வந்தது. எனக்கு மட்டும் காசிருந்ததுன்னு வச்சுக்குங்களேன், இந்தத் தொடர்ல‌ வந்த‌ அவ்வளவு மேட்டரையும் ப்ரின்ட் எடுத்து, எல்லாருக்கும் டிஸ்ட்ரிப்யூட் பண்ணியிருப்பேன். அந்த‌ அளவுக்கு விஷயம் சொல்லியிருக்காங்க‌.

குடிக்கறவங்க‌ ஃபேமிலியெல்லாம் எத்தனை விதமா கஷ்டப் படறாங்கன்னு டீடெயில்ட் ஆக‌ சொல்லியிருக்காங்க‌.

முன்னால‌ மதுவிலக்கு இருந்தப்ப‌, (ஆமா, ஒரு காலத்துல‌ தமிழ் நாட்டுல‌ மதுவிலக்கு இருந்துச்சு!!!) பெர்மிட் வச்சிருக்கவங்க‌ மட்டும்தான் குடிக்க‌ முடியும். பல‌ குடிமகன்கள் அடுத்த‌ ஸ்டேட்(பாண்டிச்சேரி) போய் குடிச்சாங்க‌.

அப்ப‌ ஒரு பிரபல‌ கவிஞர் சொன்னார், ' குடிக்கறவன் எப்படியும் குடிக்கத்தான் செய்வான், எதுக்கு இந்த‌ பெர்மிட் ஸிஸ்டம் எல்லாம்' அப்படின்னு.

ஆனா, மதுவிலக்கு அபாலிஷ் பண்ணி, எங்கெங்கு காணினும் லிக்கர் ஷாப்னு வந்தததுக்கப்புறம், சாலரி டே அன்னிக்கு நேரே கடைக்குத்தானே போறாங்க‌ பெரும்பாலானவங்க‌.

அது மட்டுமில்ல‌, மதுன்னா என்னன்னே தெரியாம‌ இருந்த‌ ஒரு இளைய‌ தலைமுறைக்கு முதல் முதலா மது வெகு சுலபமா கிடைக்க ஆரம்பிச்சுது. அவ்வளவுதான். இப்ப‌ நான் ஸ்டாப் ஆக‌ எல்லா ஏஜ் உள்ளவங்களும் குடிக்க‌ ஆரம்பிச்சுட்டாங்க‌.

திரும்பவும் மது விலக்கு வந்தா, நாட்டில் எத்தனையோ குற்றங்கள், விபத்துக்கள் குறையும்.

பூனைக்கு யார் மணி கட்டறது????????????

மணிமுத்துமாலை

மேலும் சில பதிவுகள்