பப்பாளிக்காய் பொரியல்

தேதி: March 26, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

இந்த பப்பாளிக்காய் பொரியல் திருமதி. கவிசிவா அவர்களின் பப்பளிக்காய் பொரியல் - 2 குறிப்பை பார்த்து செய்தது.

 

துருவிய பப்பாளிக்காய் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - கால் கப்
மிளகாய் வற்றல் - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - ஒன்று (சிறிய பல்)
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

பப்பாளிக்காயை தோல் நீக்கி, துருவி வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதில் துருவிய பப்பாளிக்காயை சேர்த்து பரவலாக இருக்கும்படி வைத்து மூடி போடாமல் வேக விடவும். காயில் தண்ணீர் சேர்க்காமல் அவ்வப்போது அடிப்பிடிக்காமலிருக்க நன்கு கிளறி விடவும்.
பப்பாளிக்காயில் உள்ள தண்ணீர் வற்றியதும் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்க்கவும்.
பிறகு மசாலா பப்பாளி துருவலுடன் ஒன்றாக சேரும்படி கிளறி விட்டு இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவையான பப்பாளிக்காய் பொரியல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்... நான் கொடுத்த குறிப்பா... அருமையா செய்து அழகா புகைப்படங்கள் எடுத்திருக்கீங்க செண்பகா!. ரொம்ப ரொம்ப நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!