பச்சைமிளகாய்ச் சட்னி

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சைமிளகாய் - 8
புளி - ஒரு கொட்டைப்பாக்கு அளவு
பெருங்காயம் - சிறுதுண்டு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

வாணலியில் எண்ணெய் விட்டுப் பச்சைமிளகாயை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய், புளி, பெருங்காயம், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து கொள்ளவும்.
அதனுடன் அரைத்து வைத்த கலவையை சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு விழுதாக ஆனவுடன் இறக்கி வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்