பூரி மசால்

தேதி: March 28, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

உருளைக்கிழங்கு - 4
பச்சை மிளகாய் - 2
பொட்டுக்கடலை - 4 தேக்கரண்டி
கேரட் - 2
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
இஞ்சி - சிறு துண்டு
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து - தாளிக்க
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, மசித்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை நீர் விடாமல் அரைத்து, பின்பு நீரில் கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், விதைகளை நீக்கி நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பிறகு மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
கரைத்து வைத்த பொட்டுக்கடலை மாவை ஊற்றி, தேவையான அளவு நீர் ஊற்றவும். அடிபிடிக்காத அளவிற்கு கிளறி விட்டு, நன்கு கொதிக்கவிடவும்.
கொதித்ததும் மல்லித் தழை தூவி இறக்கவும். பூரியுடன் சாப்பிட சுவையான பூரி மசால் ரெடி.

விரும்பினால் பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று சேர்க்கலாம். சிறிது புளிப்புச் சுவையுடன் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான அரைச்ச கலவை சேர்க்கறீங்க. அவசியம் இப்படி ஒரு முறை ட்ரை பண்ணிடுறேன். பூரி சாப்பிடவா கசக்குது ;) எனக்கு பூரி ரொம்ப பிடிக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமாக மசாலா சேர்த்து செய்து இருக்கீங்க,படங்கள் தெளிவான அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருள் இப்பதான் பூரிமசால் செய்து சுடச்சுட சிலபல பூரிகளை உள்ளே தள்ளிட்டு வரேன் :). மசாலா வாசனையுடன் சுவையாக இருந்தது. சூப்பர்!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி கண்டிப்பா செய்துபாருங்க சுவை வித்யாசமா இருக்கும்:) முதல் பதிவிட்டு 'பூரி'க்கவெச்சுட்டீங்க நன்றி வனி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முசி பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி:)
ஒவ்வொரு குறிப்பலயும் உங்க பதிவ பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹை கவி செய்து சாப்பிட்டு பதிவும் போட்டு சந்தோஷபடுத்திடிட்டீங்க:)
பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி கவி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

arutselvi thanks fr ur recipe,nan innaiku try panninen ,its superbpa

உங்கள் குறிப்பு நல்லா இருந்தது. நானும் இப்படிதான் செய்வேன்.ஆனால் கடலைமாவு சேர்பேன்.

நல்லா இருந்துச்சா:)
முயற்சி பண்ணி பதிவிட்டமைக்கு மிக்க நன்றிங்க:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உஷா நான் நலமே! நீங்க நலமா?
நானும் கடலை மாவு சேர்த்துப்பார்க்கிறேன் அடுத்த முறை:)
பதிவிற்கு மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள்,
சூப்பர் flavor இல் இருக்கு.
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனக்கு பூரி ரொம்ப பிடிக்கும்.அரைச்ச கலவை வித்தியாசமாக சேர்க்கறீங்க. படங்களும் அழகு - வாழ்க வளமுடன்

தங்களுடைய‌ பூரிமசால் செய்தேன். மிகவும் நன்றாக‌ இருந்தது. நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!