இட்லி டோக்ளா

தேதி: March 30, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (6 votes)

 

இட்லி - 4
பீன்ஸ் - 5
கேரட் - 1
தயிர் - கால் கப்
துருவிய இஞ்சி - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - 3 கொத்து
உப்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - அரை மேசைக்கரண்டி


 

கேரட்டை வட்டமாக நறுக்கவும். பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி எடுத்து கொள்ளவும்.
இட்லியை உதிர்த்து, அதனுடன் தயிர் சேர்க்கவும்.
பின் வதக்கி எடுத்துள்ள காய்கறிகள், கொத்தமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
ஒரு வட்டமான தட்டில் பிசைந்த இட்லிக் கலவையை சமமாக பரப்பி வைக்கவும்.
பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் டோக்ளா தயார் செய்த தட்டை வைத்து மூடி 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
வெந்ததும் அதில் இட்லிப் பொடி தூவி பரிமாறவும்.
எளிதில் செய்யக்கூடிய இட்லி டோக்ளா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இட்லி டோக்ளா பார்க்க சூப்பரா இருக்கு.செஞ்சிட்டு எப்படி வந்ததுன்னு சொல்ரேன் பா.வாழ்த்துக்கள் பா.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

சூப்பர்... எப்படி தான் இப்படிலாம் யோசிக்கறீங்களோ!!! நமக்கு தான் மண்டை இப்படிலாம் வேலை செய்ய மாட்டங்குது ;) அருமை செண்பகா. ட்ரை பண்ணிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் செண்பகா. கட்டாயம் ட்ரை பண்ணுவேன்.

‍- இமா க்றிஸ்

வித்தியாசமான குறிப்பு,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பு அருமை:)
கண்டிப்பா முயற்சி பண்ணுவேன்,
வாழ்த்துக்கள் செண்பகா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இட்லி டோக்ளா மிகவும் அருமை..கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

செண்பகா,
ஈசி டோக்ளா
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

Migaum arumai