டீப் ஃப்ரைடு சிக்கன்

தேதி: October 7, 2006

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி - ஒரு கிலோ
முட்டை - ஆறு
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
பூண்டு - ஆறு பற்கள்
காய்ந்த மிளகாய் - ஆறு
ரொட்டித்தூள் -ஒன்றரைக்கோப்பை
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒன்றரைக்கோப்பை


 

கோழியை நன்கு கழுவி நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்து கோழிக்கறியில் பூசவும்.
பிறகு அதில் ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும்.
நீர் முழுவதும் வற்றியவுடன் எடுத்து ஆற விடவும்.
ஒரு பெரிய கோப்பையில் முட்டைகளை உடைத்து ஊற்றி கால் கோப்பை நீரைச் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்.
ரொட்டித்தூளில் மிளகுத்தூளை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
குழிவான சட்டியில் எண்ணெயை காய வைக்கவும். பிறகு கோழித்துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் நனைத்து, பிறகு ரொட்டித்தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
தக்காளி கெட்சப்புடன் சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்